மன அழுத்தம் இல்லாத வாழ்க்கைக்கு கண்டிப்பாக நிதி பாதுகாப்பு என்பது அவசியம். ஆனாலும் அதற்கு புத்திசாலித்தனமாக முதலீடு செய்ய வேண்டும். ஏனெனில் தற்போது எண்ணற்ற மோசடிக்காரர்கள் நிதி நிறுவனங்களின் பெயரில் மக்களின் பணத்தை அபகரிக்கின்றனர். ஆனால் அரசால் வழங்கப்படும் போஸ்ட் ஆபீஸ் திட்டங்கள் பாதுகாப்பானதாகவும், அதே வேலையில் லாபகரமான முதலீட்டு வாய்ப்புகளையும் வழங்குகின்றன, அப்படி ஒரு நல்ல திட்டம் தான் போஸ்ட் ஆபீஸ் டைம் டெபாசிட்.
அரசாங்கத்தால் வழங்கப்படும் இந்த திட்டம் நல்ல வருமானத்தை வழங்குவதோடு மட்டுமல்லாமல், வரிச் சலுகைகளையும் சேர்த்து வழங்குகிறது. இந்த திட்டத்தில் நீங்கள் எப்படி உங்கள் வருமானத்தை அதிகரிக்கலாம் என்பதைப் பார்ப்போம். போஸ்ட் ஆபீஸ் டைம் டெபாசிட் (Time Deposit) என்பது போஸ்ட் ஆபீஸ் பிக்சட் டெபாசிட் என்றும் அழைக்கப்படுகிறது.

இந்த போஸ்ட் ஆபீஸ் டைம் டெபாசிட் திட்டங்கள் 1 ஆண்டு, 2 ஆண்டு, 3 ஆண்டு மற்றும் 5 ஆண்டு என வெவ்வேறு முதிர்வு காலங்களை வழங்குகிறது. இவற்றில் எதை வேண்டுமானாலும் தேர்ந்தெடுத்து நீங்கள் முதலீடு செய்யலாம். உதாரணமாக ஒருவருக்கு இன்னும் 1 ஆண்டில் முடிக்கக்கூடிய சில விஷயங்கள் இருக்கலாம். அதற்காக சேமிக்க விரும்பும் நபர்கள் 1 ஆண்டு முதிர்வு காலம் கொண்ட டைம் டெபாசிட் திட்டத்தை தேர்ந்தெடுக்கலாம். அதுவே உங்களுடைய இலக்கை அடைய 5 ஆண்டுகள் வரை நேரம் இருக்கிறது என்று நினைக்கும் நபர்கள், 5 ஆண்டு முதிர்வு காலம் கொண்ட டைம் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்யலாம்.
வெவ்வேறு முதலீட்டு காலத்தின் அடிப்படையில் வட்டி விகிதங்கள்:
1 ஆண்டு TD : ஆண்டுக்கு 6.9 %
2 ஆண்டு TD: ஆண்டுக்கு 7.0 %
3 ஆண்டு TD: ஆண்டுக்கு 7.1 %
5 ஆண்டு TD: ஆண்டுக்கு 7.5 %
முதலீட்டின் வருமானம்: போஸ்ட் ஆபீஸ் டைம் டெபாசிட் திட்டத்தின் தனித்துவமான அம்சங்களில் ஒன்று உங்கள் வருமானத்திற்கு வழங்கப்படும் வட்டி விகிதங்களாகும். உதாரணமாக 7.5% வட்டி விகிதத்தில் 5 வருட டைம் டெபாசிட் திட்டத்தில் ரூ.5 லட்ச ரூபாயை முதலீடு செய்தால், 5 வருட முடிவில் வட்டியாக மட்டும் 2,24,974 ரூபாய் கிடைக்கும். அப்படியானால் மொத்தமாக 7,24,974 ரூபாய் வருமானம் பெறலாம். நீண்ட கால சேமிப்பிற்கு ஒரு லாபகரமான தேர்வாக இந்த டைம் டெபாசிட் திட்டம் இருக்கும்.
போஸ்ட் ஆபீஸ் டைம் டெபாசிட் ஸ்மார்ட்டாக சேமிக்க விரும்பும் முதலீட்டாளர்களுக்கு ஏற்றது. ஏனென்றால் இதற்கு வரிச் சலுகைகளும் வழங்கப்படுகிறது. வருமானவரிச் சட்டத்தின் பிரிவு 80 C-இன் கீழ் உங்கள் முதலீட்டிற்கு வரி விலக்கு கோரலாம். இது உங்கள் நிதி எதிர்காலத்தை பாதுகாக்கும். அதே வேளையில் சேமிக்கவும் நல்ல தேர்வாக இருக்கும்.
எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும்?: போஸ்ட் ஆபீஸ் டெபாசிட்டில் குறைந்தபட்சமாக 1,000 ரூபாய் முதல் கணக்கைத் தொடங்கலாம். மேலும் நீங்கள் முதலீடு செய்யக்கூடிய அதிகபட்ச தொகைக்கு எந்தவித வரம்பும் இல்லை. போஸ்ட் ஆஃபீஸ் பிக்சட் டெபாசிட்களுக்கான வட்டி காலாண்டுக்கு ஒருமுறை கணக்கிடப்பட்டு வருடத்தின் இறுதியில் உங்கள் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. இதற்கு கூட்டு வட்டி வழங்கப்படுகிறது. அதாவது உங்கள் வட்டிக்கும் சேர்த்து வட்டி வழங்கப்படுகிறது.
விண்ணப்பிப்பதற்கான தகுதி: 18 வயதிற்கு மேற்பட்ட யார் வேண்டுமானாலும் டைம் டெபாசிட் கணக்கைத் தொடக்கலாம். இளம் முதலீட்டாளர்களுக்கு TD சிறந்த தேர்வாக இருக்கும். கூடுதலாக பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்கள் சார்பாக தங்கள் குழந்தைகளின் பெயரிலும் கணக்குகளை திறக்கலாம்.
எப்படி விண்ணப்பிப்பது?: அருகில் உள்ள போஸ்ட் ஆபீஸ்-க்கு சென்று படிவத்தைப் பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் இணைத்து, அதோடு நீங்கள் சேமிக்க விரும்பும் தொகையையும் சேர்த்து வழங்கவும்.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் வட்டி உயர்த்தப்படுகிறதா? மக்களவையில் முக்கிய தகவலை வெளியிட்ட அரசு…!!

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!

சரிவிலேயே இருக்கும் இந்திய பங்குச்சந்தை இந்த வாரமாவது மீண்டு வருமா?

இந்த வாரம் 4 நாட்கள், அடுத்த வாரம் 3 நாட்கள்: பங்குச்சந்தை முதலீட்டாளர்களே முதல்ல இத படிங்க

கதறி கதறி அழும் வெள்ளி முதலீட்டாளர்கள்.. போட்ட காசு மொத்தமும் போச்சு..!! அடுத்தது என்ன..?

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்



Click it and Unblock the Notifications