சென்னை: போஸ்ட் ஆபீஸ்களில் எத்தனையோ திட்டங்கள் உள்ளன. அவை அனைத்தும் மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளன. சிறு தொகையை மாத மாதம் முதலீடு செய்ய வேண்டும் என்று விரும்புவோருக்கு, போஸ்ட் ஆபீஸ்களில் சிறந்த தேர்வுகள் இருக்கின்றன. அந்த வகையில் அஞ்சல் அலுவலக மாதாந்திர வருமான திட்டம் (MIS) மூலம் மாத வருமானத்தைப் பெற முடியும்.
அஞ்சல் நிலைய மாத வருமான திட்ட கணக்கு (MIS) என்பது ஒரு சிறு சேமிப்பு திட்டம் ஆகும். இதில், முதலீடு செய்வதன் மூலம், தனிப்பட்ட கணக்கில் ரூ.5,550 வரை வருமானமும், கூட்டு கணக்கில் ரூ. 9,250 வரை மாத வருமானத்தை நீங்கள் பெறலாம்.

தபால் அலுவலக மாதாந்திர வருமானத் திட்டத்தின் சிறப்பம்சங்கள்: இத்திட்டம் 7.4 சதவீத வட்டி விகிதத்தை வழங்குகிறது. ஒருவர் ஒற்றைக் கணக்கு அல்லது கூட்டுக் கணக்கை (3 பெரியவர்கள் வரை) திறக்கலாம். முதலீட்டாளர்கள் வெறும் 1,000 ரூபாயில் MIS கணக்கைத் திறக்கலாம். ஒரு MIS கணக்கில் முதலீடு செய்வதற்கான அதிகபட்ச வரம்பு ரூ.9 லட்சம் மற்றும் கூட்டுக் கணக்கில் ரூ.15 லட்சம்.
நீங்கள் முதலீடு செய்த தொகையானது, 5 ஆண்டுகளுக்கு உங்களுக்கு மாதாந்திர வருமானத்தை வழங்கும். ஒவ்வொரு மாதமும் கணக்கு துவங்கிய நாளிலிருந்து முதிர்வு காலம் வரை வட்டி செலுத்தப்படும்.
தபால் அலுவலகம் (MIS) திட்டத்தின் நன்மைகள்: இந்தத் திட்டம் வருமான வரிச் சட்டத்தின் 80சி பிரிவின் கீழ், ஒரு நிதியாண்டில் ரூ.1.50 லட்சம் வரையிலான வரிச் சலுகைகளை வழங்குகிறது. இருப்பினும், இந்த நன்மையைப் பெற, முதலீட்டாளர்கள் 5 ஆண்டுகளுக்கு டெபாசிட் வைத்திருக்க வேண்டும். தேவைப்பட்டால் கணக்கை முன்கூட்டியே முடிக்க முடியும். ஆனால் அதற்கான விண்ணப்பப் படிவத்தைச் சமர்ப்பிக்க வேண்டும்.
MIS திட்டத்தில் ரூ.9 லட்சத்தை முதலீடு செய்தால், தொடர்ந்து 5 ஆண்டுகளுக்கு ரூ. 5,550 மாத வட்டி வருமானத்தைப் பெறலாம். கூட்டுக் கணக்கில் ஒரு முறை ரூ.15 லட்சத்தை முதலீடு செய்தால், 5 ஆண்டுகளுக்கு ரூ. 9,250 மாத வட்டி வருமானத்தைப் பெறலாம்.
மாத வருமானத்தை உறுதி செய்யும் வகையிலும், நீண்ட கால இலக்குகளை அடைவதற்கும் அஞ்சல் நிலைய மாத வருமான திட்டம் ஒரு நம்பகமான திட்டமாகும். குறைந்த முதலீட்டில் தொடங்கக்கூடிய இந்த திட்டம், பாதுகாப்பான முதலீட்டை விரும்பும் நபர்களுக்கு ஏற்றது. எனவே, உங்கள் நிதித் தேவைகளை மனதில் வைத்து, அஞ்சல் நிலைய மாத வருமான திட்டத்தை பரிசீலிக்கவும்.


Click it and Unblock the Notifications