மாதா மாதம் ரூ.9,000 கூடுதல் வருமானம் வேண்டுமா? கணவன் மனைவிக்கு கைநிறைய பணம் தரும் அரசு திட்டம்!

இன்றைய விலைவாசி உயர்வு பல குடும்பங்களையும் திக்குமுக்காடச் செய்துள்ளது. கணவன் மனைவி என இருவரும் வேலைக்கு சென்றாலும் வருகின்ற வருமானம் பொதிய அளவில் இல்லை. அப்படி இருக்கையில் பலரும் கூடுதல் வருமானம் தரும் வழியைத் தேடுகின்றனர். அதற்காகவே மத்திய அரசு ஒரு சிறப்பான திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் கணவன் மனைவி இணைந்து மாதா மாதம் ரூ.9,250 வருமானம் பெறலாம். எப்படி என்று தானே கேட்கிறீர்கள்? இந்தப் பதிவில் அதற்கான விடையைப் பார்ப்போம்.

தபால் அலுவலக மாதாந்திர வருமானத் திட்டம் (Post Office Monthly Income Scheme) என்றால் என்ன?: மத்திய அரசால் வழங்கப்படும் திட்டங்களில் இதுவும் ஒன்று. இந்தத் திட்டத்தில் நீங்கள் ஒரே ஒரு முறை மட்டும் முதலீடு செய்ய வேண்டும். அதன் பின்னர் மாதம் ஒருமுறை உங்களுக்கு வருமானம் வந்து கொண்டே இருக்கும்.

இதில் நன்மை என்ன தெரியுமா? மாதந்தோறும் கிடைக்கும் வருமானம் நீங்கள் முதலீடு செய்த தொகைக்கு கிடைக்கும் வட்டி மட்டும் தான். உங்களுடைய அசல் அப்படியே இருக்கும். மாதாந்திர வருமானத் திட்டத்தின் மிகப்பெரிய நன்மைகளுள் ஒன்று, இதில் கணவன் மனைவி என இருவரும் சேர்ந்து கூட்டுக்கணக்கைத் திறக்க முடியும்.

மாதா மாதம் ரூ.9,000 கூடுதல் வருமானம் வேண்டுமா? கணவன் மனைவிக்கு கைநிறைய பணம் தரும் அரசு திட்டம்!

எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும்?: மாதாந்திர வருமானத் திட்டத்தில் தனி நபராகவும் கணக்கு தொடங்கலாம், அல்லது கணவன் மனைவி இணைந்து கூட்டு கணக்கையும் தொடங்கலாம். தனிநபராக இருந்தால் அதிகபட்சமாக ரூ.9 லட்சம் வரையில் முதலீடு செய்யலாம். அதுவே கூட்டுக்கணக்காக தொடங்கி முதலீடு செய்தால், அதிகபட்சமாக ரூ.15 லட்சம் வரையில் முதலீடு செய்யலாம்.

தற்போது மத்திய அரசு போஸ்ட் ஆபீஸ் மாதாந்திர வருமானத் திட்டத்திற்கு 7.4% வட்டி வழங்குகிறது. ரிஸ்க் எடுக்க விரும்பாத முதலீட்டாளர்களின் விருப்பத்தேர்வுகளுள் இந்தத் திட்டமும் ஒன்று.

எவ்வளவு வருமானம் கிடைக்கும்?: கணவன் மனைவி இணைந்து அதிகபட்ச முதலீடான ரூ.15 லட்சத்தை மாதாந்திர வருமானத் திட்டத்தில் முதலீடு செய்கின்றனர் என்று வைத்துக் கொள்வோம். இந்த திட்டத்தின் முதிர்வு காலம் 5 ஆண்டுகள். எனவே 5 ஆண்டுகளுக்கு நீங்கள் பணத்தை எடுக்க முடியாது. ஆனால் தொடர்ந்து 5 ஆண்டுகளுக்கும் வட்டி பெறலாம்.

ரூ.15 லட்சத்தை முதலீடு செய்தால் 5 ஆண்டுகளில் ரூ.5.55 லட்சம் வட்டி கிடைக்கும். இதன் மூலம் மாத வருமானம் 9,250 ரூபாயாக இருக்கும். முதிர்வு தேதியின் போது உங்களுடைய அசல் அப்படியே இருக்கும். ஒருவர் 5 ஆண்டுக்கு இடையில் பணம் தேவைப்பட்டால் எடுக்கலாம். அதற்கு அபராதம் விதிக்கப்படும் என்பதை நினைவில் கொள்ளவும்.

யாருக்கெல்லாம் ஏற்றது?: பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்கள், மாதந்தோறும் செலவுக்கு பணம் தேவைப்படும் முதியவர்களுக்கு இந்த திட்டம் ஏற்றுது. அதோடு கணவன் மனைவியாக இருந்து கொண்டு சம்பளம் போக எக்ஸ்ட்ரா இன்கம் தேவைப்படுபவர்களும் இந்த திட்டத்தில் இணையலாம். பங்குச்சந்தை போன்ற முதலீடுகளில் ஏற்ற இறக்கம் இருக்கும். ஆனால் இது போன்ற திட்டங்கள் அரசாங்கத்தின் நேரடி கண்காணிப்பில் வழங்கக் கூடியவையாக இருப்பதால், உங்களுடைய அசலுக்கு உத்தரவாதமான வருமானம் வழங்கப்படும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+