நாட்டில் பெண் குழந்தைகளின் நலனைப் பாதுகாக்கும் அரசாங்கத் திட்டங்கள் எத்தனையோ உள்ளன. அவற்றுள் சுகன்யா சம்ரித்தி யோஜனா (SSY) திட்டம் நீண்ட காலமாக நல்ல வருமானம் தருவதாக நம்பப்படுகிறது. SSY திட்டத்திற்கு அருகில் உள்ள தபால் நிலையங்களில் விண்ணப்பிக்கலாம். எந்த ஒரு இந்தியக் குடிமகனும் தங்களுடைய 10 வயது அல்லது அதற்கு குறைவான மகளுக்காக இந்த திட்டத்தில் முதலீடு செய்ய முடியும். இது பெண் குழந்தைகளுக்காகவே கொண்டுவரப்பட்ட பிரத்தியேகமான சேமிப்பு திட்டம். எனவே ஆண் குழந்தைகளுக்கு இதில் முதலீடு செய்ய முடியாது.
ஆண் குழந்தைகளுக்கு ஏற்ற பிற திட்டங்கள் உள்ளன. சுகன்யா சம்ரித்தி யோஜனா திட்டத்தில் வருடத்திற்கு 250 ரூபாய் சேமித்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும்? என்பதை இந்தப் பதிவில் பார்ப்போம். இன்றைய நவீன உலகில் முதலீடு செய்வதற்கு ஏற்ற திட்டங்கள் உள்ளதா? என்பது குறித்து மக்கள் அவ்வப்போது தேடுகின்றனர். சிலர் பங்குச் சந்தையில் முதலீடு செய்கின்றனர். ஆனால் பலர் பங்குச்சந்தை முதலீட்டை பரிசீலிக்கும் முன் சற்று பின் வாங்குகின்றனர்.

இதற்கு மிக முக்கிய காரணம் பங்குச்சந்தை முதலீடுகள் அபாயம் மிகுந்தவை என்பதனால் தான். இதனால் சிலர் பிக்சட் டெபாசிட்களில் முதலீடு செய்கின்றனர். அரசு திட்டங்களில் முதலீடு செய்வது உத்தரவாதமான வருமானத்தை வழங்குவதோடு மட்டுமல்லாமல் பல நன்மைகளையும் சேர்த்து வழங்குகிறது. இதனால் ரிச் சலுகைகள் போன்ற பலனையும் முதலீட்டாளர்கள் பெற முடியும்.
குறைந்தபட்ச முதலீடு: SSY திட்டத்தில் குறைந்தபட்சமாக ஒரு நிதியாண்டுக்கு 250 ரூபாய் முதல் டெபாசிட் செய்யலாம். அதிகபட்சமாக ஒரு நிதியாண்டுக்கு ரூ.1.5 லட்சம் வரை டெபாசிட் செய்ய முடியும். சுகன்யா சம்ரித்தி யோஜனா திட்டத்தின் மிகப்பெரிய பலன் என்னவென்றால் நாட்டில் வழங்கப்படும் அனைத்து அரசு திட்டங்களை விடவும் அதிகமான வட்டி விகிதம் இதற்கு தான் வழங்கப்படுகிறது.
SSY கணக்கு வைத்திருப்பவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் 8.2 சதவீத வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தில் வருடா வருடம் குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்வதன் மூலம் உங்கள் மகளை ரூ.71 லட்சத்திற்கும் அதிகமான தொகையை சம்பாதிக்க வைக்க முடியும்.
எத்தனை ஆண்டுகள் முதலீடு செய்ய வேண்டும்?: சுகன்யா சம்ரித்தி யோஜனா திட்டத்தில் எந்த ஒரு இந்தியக் குடிமகனும் தனது மகளுக்காக கணக்கு தொடங்கலாம். இந்த திட்டத்திற்கு எந்த தபால் அலுவலக கிளையிலும் கணக்கு திறக்க முடியும். மொத்தமாக 15 ஆண்டுகளுக்கு வருடா வருடம் முதலீடு செய்ய வேண்டும். அதன் பிறகு 6 ஆண்டுகள் எந்தவித முதலீடும் செய்யாமல் கூட்டு வட்டியின் மூலம் வட்டி வருமானம் கிடைக்கும்.
SSY திட்டத்தின் முதிர்வுக்கு காலம் 21 ஆண்டுகள் குழந்தை பிறந்தவுடன் முதலீடு செய்யும் ஒருவர் தன் குழந்தைக்கு 21 வயதாகும்போது தொகையை முழுமையாக பெற்றுக்கொள்ளும் வகையில் இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆனால் முதலீடு செய்ய வேண்டியது 15 ஆண்டுகள் மட்டுமே என்பதை நினைவில் கொள்ளுங்கள். இது ஒரு நீண்ட கால சேமிப்பு திட்டமாகும். பிற திட்டங்களைப் போல் அல்லாமல் சற்று பொறுத்திருந்துதான் இந்த திட்டத்தின் பலன்களை பெற முடியும்.
SSY திட்டத்தின் மூலம் ரூ.71 லட்சம் பெறுவது எப்படி?: SSY திட்டத்தில் ஒரு நிதியாண்டுக்கு ரூ.1.5 லட்சம் என்ற அதிகபட்ச டெபாசிட் செய்து வந்தால் 71 லட்சம் ரூபாய் பெற்றுக் கொள்ளலாம். தொடர்ந்து 15 ஆண்டுகளுக்கு 1.5 லட்சம் என்ற வீதத்தில் டெபாசிட் செய்யும்போது 22,50,000 ரூபாய் டெபாசிட் செய்திருப்பீர்கள். இதனால் முதிர்ச்சியின் போது ரூ.71,82,119 கிடைக்கும். இந்த தொகையில் வட்டியாக 49,32,139 ரூபாய் கிடைக்கும். இதற்கு முற்றிலும் வரி விலக்கு வழங்கப்படுகிறது. மேலும் ஒவ்வொரு நிதியாண்டின் ஏப்ரல் 5-ஆம் தேதிக்குள் தொகையை டெபாசிட் செய்து விட வேண்டும்.


Click it and Unblock the Notifications