உங்கள் வீட்டு பெண்ணுக்கும் ரூ.32,000 கிடைக்கும்.. போஸ்ட் ஆபீஸ் வழங்கும் அசத்தல் திட்டம்! வாவ்!

பெண்களை நிதி ரீதியாக மேம்படுத்தும் வகையில் அரசாங்கம் பல்வேறு நலத்திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அதில் ஒன்றுதான் மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ் (MSSC). இந்த திட்டம் பல்வேறு சிறப்பு சலுகைகளை பெண்களுக்கு வழங்குகிறது. தற்போது மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ் திட்டத்திற்கு 7.5 சதவீத வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. குடும்ப உறுப்பினர்கள் தங்களின் மனைவி, மகள், தாய் என வீட்டில் இருக்கும் பெண்கள் யாருக்கு வேண்டுமானாலும் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யலாம். இந்த திட்டத்தின் முதிர்வுக் காலம் 2 ஆண்டுகள் மட்டுமே. மேலும் இந்த திட்டத்தில் முதலீடு செய்வதற்கு மார்ச் 2025 வரை காலக்கெடு வழங்கப்பட்டுள்ளது.

எவ்வளவு வருமானம் பெற முடியும்?: உங்கள் குடும்பத்தில் ஒரு உள்ள ஒரு பெண்ணின் பெயரில் மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ் திட்டத்தை தொடங்கினால் அதற்கு எவ்வளவு வருமானம் கிடைக்கும் என்று பார்ப்போம். ஒரு பெண்ணின் பெயரில் ரூ.2 லட்ச ரூபாயை முதலீடு செய்தால் 7.5 சதவீத வட்டி விகிதத்தில் ஆண்டுக்கு ரூ.32,044 ரூபாய் வட்டி கிடைக்கும். இதன் மூலம் மொத்த முதிர்வு தொகை ரூ.2,32,044 ரூபாயாக இருக்கும்.

 உங்கள் வீட்டு பெண்ணுக்கும் ரூ.32,000 கிடைக்கும்.. போஸ்ட் ஆபீஸ் வழங்கும் அசத்தல் திட்டம்! வாவ்!

அதுவே ரூ.1,50,000 ரூபாயை மொத்தமாக முதலீடு செய்தால், ரூ.1,24,033 ரூபாயை பெற்றுக் கொள்ளலாம். இதில் வருமானமாக ரூ.24,033 கிடைக்கும். ஆனால் ஒருவர் ரூ. 2 லட்சத்திற்கும் மேல் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்ய முடியாது.

அதேபோல ரூ.1 லட்ச ரூபாயை முதலீடு செய்தால் ரூ. 16,022 வட்டி கிடைக்கும். இதன் மூலம் மொத்த முதிர்வுத் தொகை ரூ.1,16,022 ரூபாயாக இருக்கும். ரூ.50,000 ரூபாயை மொத்தமாக முதலீடு செய்தால் 58,011 ரூபாய் கிடைக்கும். இதில் வட்டியாக ரூ.8,011 ரூபாய் கிடைக்கும். இதிலிருந்து நீங்கள் செய்யும் முதலீட்டுக்கு தகுந்தாற் போல் உங்களுக்கு வருமானம் கிடைக்கும் என்பதைத் தெரிந்து கொள்ளலாம். ஆனால் அதிகபட்ச முதலீடு ரூ.2 லட்சம் தான். அதைத் தாண்டி ஒருவரால் முதலீடு செய்ய முடியாது.

கணக்கைத் திறப்பது எப்படி?: மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ் திட்ட கணக்கை தொடங்க அருகில் உள்ள தபால் நிலையத்திற்கு செல்லலாம். உங்களுடைய ஆதார் கார்டு, பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் போன்ற KYC ஆவணங்கள் இதற்கு தேவைப்படும். இந்தத் திட்டம் அனைத்து வயது பெண்களுக்கும் கிடைக்கும். எனவே நீங்கள் உங்கள் மனைவி, மகள், தாய் என யாருக்காக வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம்.

ஓராண்டுக்குப் பிறகு பகுதியளவு திரும்பப் பெறுதல்: இந்த திட்டம் 2 ஆண்டுகளில் முதிர்ச்சி அடையக்கூடிய குறுகிய கால சேமிப்புத் திட்டம் தான். ஆனால் ஒரு வருடம் முடிந்த பிறகு பகுதி அளவு தொகையை திரும்ப பெற்றுக் கொள்ளலாம். தேவைப்பட்டால் முதலீடு செய்த தொகையில் 40% வரை திரும்ப பெற்றுக் கொள்ளலாம். உதாரணமாக நீங்கள் ரூ.2 லட்ச ரூபாயை டெபாசிட் செய்திருக்கிறீர்கள் என்றால், 1 வருடம் கழித்து உங்களுக்கு பணம் தேவைப்பட்டால் அதில் 80,000 ரூபாயை பெற்றுக் கொள்ளலாம்.

இந்தத் திட்டம் பெண்கள் தங்கள் சேமிப்பை உத்தரவாதமான வருமானத்துடன் திரும்பப் பெறக்கூடிய சேமிப்புத் திட்டம் ஆகும். அரசாங்கத் திட்டம் என்பதால் யார் வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம். மேலும் உங்களுடைய வருமானத்திற்கு எந்தவித இழப்பும் ஏற்படாது. உங்கள் குடும்பத்தில் உள்ள பெண்கள் நம்பகமான முதலீட்டை தேடிக் கொண்டிருக்கிறார்கள் என்றால்.. கண்டிப்பாக இந்தத் திட்டத்தை நீங்கள் அவர்களுக்கு பரிந்துரை செய்யலாம்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+