நம்மில் பலரும் "passive income" என்று சொல்லப்படுகிற கூடுதல் வருமானம் தரும் வழியைத் தேடிக்கொண்டே இருக்கிறோம். அப்படி ஒரு வழியைத் தான் போஸ்ட் ஆபீஸ் வழங்குகிறது என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? உங்களுடைய முதலீட்டுக்கு போஸ்ட் ஆபீஸ்-களில் மாதம் மாதம் வருமானம் தரும் திட்டம் ஒன்று உள்ளது. இந்த வருமானமானது உங்களுடைய போஸ்ட் ஆபீஸ் சேவிங்ஸ் சக்கவுண்டில் வரவு வைக்கப்படும்.
போஸ்ட் ஆபீஸ் மன்த்லி இன்கம் ஸ்கீம் (POMIS): போஸ்ட் ஆபீஸ் வழங்கும் மாதாந்திர வருமான திட்டத்தில், நீங்களும் உங்கள் மனைவியும் சேர்ந்து வருட வருமானமாக ரூ.1 லட்சம் பெறுவது எப்படி? என்பது குறித்து பார்ப்போம்.

பொதுவாக மாத சம்பளக்காரர்களுக்கு விலைவாசி உயர்வின் காரணமாக மாதாந்திர பட்ஜெட்டில் பெரும் சிக்கல் ஏற்படுகிறது. இதை சரி செய்யும் பொருட்டு பகுதி நேர வேலை வாய்ப்பை சிலர் தேடுகின்றனர். அப்படி தேடுபவர்கள் இந்த மாதாந்திர வருமானத் திட்டத்தைப் பயன்படுத்தி பலனடையலாம். இதற்கு நீங்கள் கூடுதல் வேலை எதுவும் செய்யத் தேவையில்லை.
போஸ்ட் ஆபீஸ் MIS திட்டம்: போஸ்ட் ஆபீஸ் MIS திட்டம் என்பது பிற திட்டங்களைப் போலவே மக்களுக்கு வழங்கப்படும் சேமிப்புத் திட்டமாகும். இதில் ஒவ்வொரு மாதமும் நீங்கள் முதலீடு செய்த தொகைக்கு ஏற்ப வட்டி வருமானம் வழங்கப்படும். அதாவது இந்த திட்டத்தில் இணைந்து மொத்தமாக குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்ய வேண்டும்.
அதன் பிறகு 5 ஆண்டுகளுக்கு தொடர்ந்து உங்களுக்கு வட்டி வருமானம் வழங்கப்படும். 5 வருடங்கள் முடிந்த பிறகு நீங்கள் எவ்வளவு முதலீடு செய்தீர்களோ? அதை அப்படியே பெற்றுக் கொள்ளலாம். இதற்கிடையில் 5 ஆண்டுகளுக்கு தொடர்ந்து உங்களுக்கு வருமானம் கிடைக்கும். இந்த திட்டத்தின் முதிர்வு காலம் 5 ஆண்டுகள். இதனால் தான் 5 ஆண்டுகளுக்கு வருமானம் வழங்கப்படுகிறது.
தனிநபர் கணக்கு அல்லது கூட்டுக் கணக்கு: MIS திட்டத்தில் நீங்கள் தனிநபர் கணக்கைத் திறக்கலாம் அல்லது வேறு ஒருவருடன் இணைந்து கூட்டு கணக்கைத் திறக்கலாம். 2 அல்லது 3 பேர் சேர்ந்தும் கூட்டுக்கணக்கைத் தொடங்க முடியும். தனிநபர் கணக்கு திறந்தால் ரூ.9 லட்சம் வரை முதலீடு செய்ய முடியும். அதுவே கூட்டுக் கணக்காக திறக்கும் பட்சத்தில் ரூ.15 லட்சம் வரை டெபாசிட் செய்யலாம். இதை வைத்தே 5 ஆண்டுகளுக்கு வட்டி வருமானம் பெறலாம். மேலே கூறப்பட்டுள்ள வரம்பு அதிகபட்ச தொகை ஆகும். இதற்கு கீழும் நீங்கள் டெபாசிட் செய்யலாம். அதற்கு எவ்வளவு வருமானம் கிடைக்கும் என்பதை தெரிந்துகொள்ள ஆன்லைன் கால்குலேட்டர்களைப் பயன்படுத்தலாம்.
வட்டி விகிதம்: தற்போது போஸ்ட் ஆபீஸ் மாதாந்திர வருமானத் திட்டத்திற்கு 7.4 சதவீத வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. இந்த வட்டி விகிதத்தை அரசு காலாண்டுக்கு ஒருமுறை மாற்றி அமைக்கும். அப்படி கடந்த 3 காலாண்டுகளாக எந்தவித மாற்றமும் இல்லாமல் 7.4 சதவீத வட்டி விகிதத்தில் மக்களுக்கு பலன் அளித்து வருகிறது.
போஸ்ட் ஆபீஸ் MIS திட்டத்தில் வருட வருமானமாக ரூ.1 லட்சம் பெறுவது எப்படி?: இந்த திட்டத்தில் உங்கள் மனைவியுடன் இணைந்து ரூ. 15 லட்சத்தை டெபாசிட் செய்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். 7.4 சதவீத வட்டி விகிதத்தில் மாத வருமானமாக 9,250 ரூபாய் பெற்றுக் கொள்ளலாம். அப்படியானால் வருடத்திற்கு 1,11,000 ரூபாய். தொடர்ந்து 5 ஆண்டுகளுக்கு வருமானம் பெற்றால் 5,55,000 ரூபாய் கிடைக்கும். அதன் பிறகு முதிர்வுக் காலம் முடிந்து உங்களுடைய மொத்த முதலீட்டை பெற்றுக் கொள்ளலாம்.
தனிநபர் கணக்குக்கு எவ்வளவு லாபம்?: தனிநபர் கணக்கில் அதிகபட்சம் தொகையான ரூ.9 லட்சத்தை டெபாசிட் செய்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். இதற்கு 7.4 சதவீத வட்டி விகிதம் வழங்கப்பட்டால் மாத வருமானமாக 5,550 ரூபாய் கிடைக்கும். அப்படியானால் வருடத்திற்கு 66,600 ரூபாய். இதன் மூலம் வெறும் 5 ஆண்டுகளில் 3,33,000 வட்டி வருமானம் பெற முடியும்.
More From GoodReturns

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

கதறி கதறி அழும் வெள்ளி முதலீட்டாளர்கள்.. போட்ட காசு மொத்தமும் போச்சு..!! அடுத்தது என்ன..?

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!

SIP முதலீடு செஞ்சா கோடிகளில் பணம் கிடைக்குமா? நம்ம எல்லாரும் செய்யுற தப்பு இது தான்..!!



Click it and Unblock the Notifications