திருமணமான பல தம்பதியினர் தங்கள் துணைவியாருடன் சேர்ந்து நல்ல வருமானம் ஈட்ட வேண்டும் என்று எண்ணுகின்றனர். நீங்களும் அப்படிப்பட்டவராக இருந்தால் உங்களுக்கு தான் இந்தப் பதிவு. இந்தப் பதிவில் ஒரு அற்புதமான அரசு திட்டம் குறித்துதான் பார்க்கவுள்ளோம். இந்தத் திட்டத்தில் நீங்கள் ஒரு முறை முதலீடு செய்தால் போதும்.. அதன் பிறகு எந்த வேலையுமே செய்யாமல் மாதம், மாதம் நல்ல வருமானம் பெற முடியும். தம்பதிகள் இணைந்து ஒரு கணக்கை தொடங்கி முதலீடு செய்வதன் மூலம் ஒரு ஆண்டுக்கு ரூ. 1,10,000 வரையில் வருமானம் பெறலாம்.
தபால் அலுவலக மாதாந்திர வருமானத் திட்டம்: இதனை ஆங்கிலத்தில் போஸ்ட் ஆபீஸ் மன்த்லி இன்கம் ஸ்கீம் என்று கூறுவார்கள். இந்தத் திட்டத்திற்கு சிறந்த வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. அதிக வருமானம் பெற நினைப்பவர்களுக்கு பாதுகாப்பான முதலீட்டு திட்டம் இதுவாகும். இதில் ஒரு முறை நீங்கள் முதலீடு செய்தால் தொடர்ந்து வருமானம் பெற முடியும்.

குறைந்தபட்ச முதலீடு: இது ஒரு முறை முதலீடு செய்யும் திட்டமாகும். எனவே ரெக்கரிங் டெபாசிட் திட்டத்தை போல மாதா மாதம் முதலீடு செய்யலாம் என்று நினைக்காதீர்கள். ஒரு முறை தான் முதலீடு செய்ய முடியும். குறைந்தபட்சமாக 1,000 ரூபாய் முதல் முதலீடு செய்யலாம் வேண்டுமானால் ஆயிரம் மடங்குகளில் எவ்வளவு வேண்டுமானாலும் டெபாசிட் செய்யலாம். தனிநபராக இருந்தால் தங்களுடைய கணக்கில் அதிகபட்சமாக ரூ.9 லட்சம் வரையிலும், கூட்டுக் கணக்காக இருந்தால் ரூ.15 லட்சம் வரையிலும் முதலீடு செய்யலாம். கூட்டு கணக்கில் நீங்களும் உங்கள் மனைவியும் சேர்ந்து முதலீடு செய்ய முடியும்.
வட்டி விகிதம்: தற்போது போஸ்ட் ஆபீஸ் மாதாந்திர வருமானத் திட்டத்திற்கு 7.4 சதவீத வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. அரசாங்க ஆதரவுடன் செயல்பட்டு வரும் சிறுசேமிப்பு திட்டம் இதுவாகும். இதனால் உங்களுடைய முதலீடுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது. அதோடு உத்தரவாதமான வருமானத்தையும் பெறலாம். மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை.
எனவே ரிஸ்க் எடுக்காமல் வருமானம் பெற வேண்டும் என்று நினைப்பவர்கள், அரசு திட்டங்களை பரிசீலிக்கலாம். தபால் நிலைய திட்டம் என்பதால் 100% பாதுகாப்புக்கு உத்தரவாதம் உண்டு. தனிநபர் கணக்கு மட்டுமின்றி உங்கள் வாழ்க்கை துணையுடன் இணைந்து கூட்டு கணக்கை திறக்கும் போது ரூ.15 லட்சத்தை முதலீடு செய்து அதிகபட்ச வருமானத்தைப் பெற முடியும்.
மாதாந்திர வருமானம்: அதிகபட்சமாக நீங்களும் உங்கள் மனைவியும் சேர்ந்து ரூ.15 லட்சத்தை முதலீடு செய்திருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். இதற்கு ஆண்டுக்கு 7.4 சதவீதம் வட்டி விகிதம் வழங்கப்பட்டால் மாதாந்திர வருமானமாக 9,250 ரூபாய் வரை பெறலாம்.
இதனால் ஆண்டு வட்டி வருமானம் மட்டும் 1,11,000 ரூபாய் கிடைக்கும். ஒருமுறை முதலீடு செய்தால் மாதம் மாதம் உங்களுடைய வட்டி பணம் வந்து தபால் நிலைய அக்கவுண்டில் விழுந்து விடும். அதுவே தனிநபராக இருந்து ஒருமுறை முதலீடாக ரூ.9 லட்சத்தை முதலீடு செய்திருந்தால் ஆண்டு வட்டியாக 66,600 ரூபாயை பெறலாம்.
இதனால் மாதாந்திர வருமானம் ரூ. 5,550-ஆக இருக்கும். வழங்கப்படும் மாதாந்திர வருமானம் அனைத்தும் உங்களுக்கு கிடைக்கும் வட்டி மட்டும்தான். அசல் தொகை அப்படியே இருக்கும். இந்த திட்டத்தின் முதிர்வு காலம் 5 ஆண்டுகள். 5 ஆண்டுகளுக்குப் பிறகு புதிய வட்டி விகிதம் இருந்தால் அதோடு கணக்கை நீட்டித்து மீண்டும் 5 ஆண்டுகளுக்கு வட்டி வருமானம் பெறலாம். இல்லையேல் உங்களுடைய அசலை திரும்பப் பெறலாம்.
More From GoodReturns

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!



Click it and Unblock the Notifications