நீண்ட காலமாக இந்திய குடும்பங்கள் தங்கள் பணத்தில் ஒரு சிறு தொகையை சேமித்து வைப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர். அதற்கு உதவும் வகையில் பல்வேறு நலத்திட்டங்கள் போஸ்ட் ஆபீஸ்களில் வழங்கப்படுகிறது. இன்னும் சொல்லப்போனால் வெறும் 100 ரூபாய் முதலீட்டிலும், நீங்கள் போஸ்ட் ஆபீஸில் முதலீடு செய்ய முடியும். இது முக்கியமாக சாமானியருக்கு உதவும் வகையில் அரசு வழங்கி வருகிறது.
அஞ்சல் அலுவலகத் திட்டங்கள்: எதிர்காலத்தை பாதுகாப்பதற்கு கண்டிப்பாக முதலீடு அவசியம். எதிர்பாராத மருத்துவச் செலவுகள் ஏற்பட்டாலோ அல்லது வேறு ஏதேனும் அவசர செலவுகள் இருந்தாலோ, சிறு முதலீட்டை வைத்திருப்பது கண்டிப்பாக கைக் கொடுக்கும். இதனால் தக்க நேரத்தில் பிறரிடம் கடன் வாங்க வேண்டிய சூழல் ஏற்படாது.

அது மட்டுமின்றி அவரவர் திறனுக்கு ஏற்ப முதலீடு செய்வது கையில் இருக்கும் பணத்தையும் அதிகரிக்க உதவும். சிறு வயதிலிருந்தே சேமிப்பு மற்றும் முதலீட்டின் முக்கியத்துவத்தைப் பற்றி வீட்டுக் குழந்தைகளுக்கும் கற்றுக் கொடுப்பது அவசியமாகும். அனைவராலும் பெரிய தொகையை முதலீடு செய்ய முடியாது. இதுபோன்ற நபர்களும் போஸ்ட் ஆபீஸ்களில் சிறு தொகையை சேமித்து வைக்கலாம். அதிலிருந்து காலப்போக்கில் வருமானத்தை அதிகரிக்க முடியும். மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளைப் போல் அல்லாமல் ரிஸ்கில்லாத வருமானத்தை போஸ்ட் ஆபீஸ் வழங்குகிறது.
ஆபத்து இல்லாத அதே சமயம் நிலையான வருமானத்தை வழங்கும் திட்டங்களில் ஒன்றுதான் போஸ்ட் ஆபீஸ் ரெக்கரிங் டெபாசிட். இதனை அஞ்சல் அலுவலக தொடர்பு வைப்பு நிதி அல்லது RD என்றும் கூறுவார்கள். ஒவ்வொரு நாளும் 100 ரூபாய் என்ற கணக்கில் முதலீடு செய்யும் பட்சத்தில் உங்களுடைய வருமானத்தை வெகுவாக அதிகரிக்க முடியும்.
போஸ்ட் ஆபீஸ் ரெக்கரிங் டெபாசிட் திட்டத்தின் முதிர்வு காலம் 5 ஆண்டுகள். பிக்சட் டெபாசிட்களை போல் அல்லாமல் மாத மாதம் இந்த திட்டத்தில் முதலீடு செய்யலாம். ஒட்டுமொத்தமாக முதலீடு செய்ய முடியாதவர்களும் போஸ்ட் ஆபீஸ் RD கணக்கை தொடங்க முடியும்.
ரூ.100 சேமித்தால் எவ்வளவு லாபம்?: தினமும் 100 ரூபாய் சேமித்து வைத்து போஸ்ட் ஆபீஸ் RD திட்டத்தில் மாதத்திற்கு 3000 ரூபாயை முதலீடு செய்யலாம். மாதம் ரூ.3000 என்றால் வருடத்திற்கு 36,000 ரூபாயை டெபாசிட் செய்திருப்பீர்கள். இதே வழியில் தொடர்ந்து 5 ஆண்டுகள் முதலீடு செய்தால் மொத்தமாக 1,80,000 ரூபாய் முதலீடு செய்திருப்பீர்கள்.
தற்போது போஸ்ட் ஆபீஸ் RD திட்டத்திற்கு 6.7% வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. இதன்படி 5 ஆண்டுகளுக்கும் தொடர்ந்து இதே வட்டி விகிதம் வழங்கப்பட்டால் 34,097 ரூபாய் வட்டியுடன் முதிர்வு காலத்தில் 2,14,097 ரூபாய் வருமானம் கிடைக்கும். போஸ்ட் ஆபீஸ் திட்டங்களுக்கான வட்டி விகிதம் காலாண்டுக்கு ஒரு முறை மாற்றி அமைக்கப்படும்.
இது தற்போது உள்ள வட்டி விகிதங்களுக்கான கணக்கீடு. RD திட்டத்தில் குறைந்தபட்சமாக 100 ரூபாயில் கணக்கு தொடங்கலாம். அதிகபட்ச வரம்பு இதற்கு இல்லை. உங்களால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு தொகையை முதலீடு செய்யலாம்.
கடன் வசதியும் உண்டு: தேவைப்படும் நேரத்தில் தபால் அலுவலக RD கணக்குக்கு எதிராக கடன் பெறலாம். RD திட்டத்தின் விதிகளின்படி தொடர்ந்து 12 தவணைகளை செலுத்திய பிறகு கணக்கில் டெபாசிட் செய்யப்பட்ட தொகையில் 50 சதவீதம் வரை கடனாக பெற்றுக் கொள்ளலாம். கடனை மொத்தமாகவோ அல்லது தவணையாகவோ திருப்பிச் செலுத்தும் வசதியும் வழங்கப்படுகிறது. மேலும் நீங்கள் கடன் பெற்ற தொகைக்கான வட்டி விகிதம் RD திட்டத்திற்கு பெறப்பட்ட வட்டியை விட 2 சதவீதம் அதிகமாக இருக்கும்.
வேண்டுமானால் 5 ஆண்டுக்குப் பிறகும் மீண்டும் 5 ஆண்டுகளுக்கு முதலீட்டை நீடிக்கலாம். கணக்கைத் திறக்கும் போது பொருந்திய அதே வட்டி நீட்டிக்கப்பட்ட கணக்குக்கும் கிடைக்கும்.
RD கணக்கின் வட்டி விகிதம் முழு வருடங்களுக்கும் பொருந்தும் மற்றும் ஒரு வருடத்திற்கும் குறைவான வருடத்திற்கு சேமிப்பு கணக்கின் வட்டி வழங்கப்படும். உதாரணமாக நீங்கள் RD கணக்கை 3 ஆண்டுகள் மற்றும் 5 மாதங்களுக்குப் பின்னர் மூடினால், 3 ஆண்டுகளுக்கு முழுமையாக 6.7 சதவிகிதம் வட்டியைப் பெறுவீர்கள், மீதமுள்ள் 5 மாதங்களுக்கு, 4% என்ற போஸ்ட் ஆஃபிஸ் சேவிங்ஸ் அக்கவுண்ட் வட்டியைப் பெறுவீர்கள்.
More From GoodReturns

தங்கம் விலை தொடர் சரிவு.. ஈரான் போரில் மொத்தமாக புரட்டிப்போட்ட சம்பவம்..!!

வெள்ளி விலை: கிணற்றில் போட்ட கல் போல நிற்கிறது..!! முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

தங்கம் தந்த சர்ப்பிரைஸ்!! ரூ.5000க்கு மேல் விலை குறைவு!! நகை வாங்க இதை விட்டா சான்ஸ் கிடைக்காது!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

உங்கள் எதிர்காலம் உங்கள் கையில்! பெண்களுக்கான சிறந்த முதலீட்டு திட்டங்கள் இதோ!

EPF, NPS அல்லது PPF: நிம்மதியான ஓய்வுக் காலத்துக்கு நம்பர் 1 சாய்ஸ் எது?

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

பெண்களே இந்த மகளிர் தினத்துல இருந்து இதையெல்லாம் செஞ்சீங்கனா உங்க எதிர்காலம் வளமா இருக்கும்!!

ஏறிய வேகத்தில் இறங்கிய இந்திய பங்குச்சந்தை!! முதலீட்டாளர்கள் கதறல்!! இதுக்கு விடிவுகாலமே இல்லையா?:

3 நாட்கள் சரிவில் இருந்து மீண்டு வந்த இந்திய பங்குச்சந்தை; சென்செக்ஸில் புதிய இண்டெக்ஸ் அறிமுகம்!!



Click it and Unblock the Notifications