மூத்த குடிமக்கள் பணியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு நிலையான வருமானம், பாதுகாப்பான முதலீடு, மருத்துவ உதவி தேடுவது இயல்பான ஒரு விஷயம். இந்திய அரசு, அஞ்சல் துறை, தனியார் முதலீட்டு நிறுவனங்கள் மூத்த குடிமக்களுக்காக பல திட்டங்களை செயல்படுத்துகின்றன. இந்த திட்டங்களில் முதலீட்டு செய்யும் தொகைக்கு கிடைக்கும் வருமானத்திற்கு வரி சலுகை, இலவச காப்பீடு, காலாண்டு வருமானம் போன்ற பல சலுகைகள் வழங்கினாலும் , முக்கியமாக அனைவரும் கவனிக்க வேண்டியது முதலீடு செய்யும் பணத்திற்கு உத்தரவாதம். இத்தகைய திட்டம் ஓய்வூதியம் இல்லாதவர்களுக்கு பெரும் ஆறுதலாக இருக்கும்.
இப்படி ஓய்வுக்குப் பிறகு மாதாந்திர செலவுக்கு நம்பகமான, ஆபத்தில்லாத வருமானம் தேடுபவர்களுக்கு இந்திய அஞ்சல் துறையின் சீனியர் சிட்டிசன் சேவிங்ஸ் ஸ்கீம் (SCSS) சிறந்த தேர்வாக உள்ளது. இது முழுக்க முழுக்க அரசு உத்தரவாதமுடைய திட்டம் என்பதால் உங்கள் முதலீட்டுக்கும், ஓய்வூதியத்திற்கும் உத்தரவாதம் அளிக்கப்படுகிறது. தற்போது இத்திட்டத்திற்கு 8.2 சதவீத வட்டி தருகிறது மத்திய அரசு. இது சந்தையில் இருக்கும் பெரும்பாலான ஓய்வூதிய திட்டங்களை காட்டிலும் அதிக வட்டி விகிதமாகும்.

இந்த திட்டம் யாருக்கெல்லாம் பொருந்தும்?
60 வயதுக்கு மேற்பட்ட எவரும் இதில் கணக்கு தொடங்கலாம் என்பதால் பணியில் இருந்து ஒய்வு பெற்றவர்கள் மட்டும் அல்லாமல் சொந்த தொழில் செய்பவர்களுக்கும் இந்த கணக்கில் முதலீடு செய்து பலன் பெறலாம். இதோடு சிறப்பு பிரிவின் கீழ் நீங்கள் பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்களாக இருந்தால் 55 வயதுக்கு மேல் 60 வயதுக்குள் இருப்பவர்களும் இதில் சேரலாம். ஓய்வு பெறும் போது கிடைக்கும் பிஎப் தொகையை இதில் முதலீடு செய்தால் வாழ்நாள் முழுவதும் மாத வருமானம் கேரென்டி.
முதலீடு எவ்வளவு?
Post Office Senior Citizen Savings Scheme (SCSS) திட்டத்தின் கீழ் குறைந்தபட்சம் ரூ.1,000 முதல் அதிகபட்சம் ரூ.30 லட்சம் வரை ஒரே தவணையாக முதலீடு செய்யலாம். தற்போது 8.2 சதவீத வட்டி கிடைக்கிறது.
வட்டி எப்படி வரும்?
நீங்கள் செய்யும் முதலீட்டுக்கான வட்டி தொகை காலாண்டுக்கு ஒருமுறை வழங்கப்படும். அதாவது வருடத்தில் ஏப்ரல், ஜூலை, அக்டோபர், ஜனவரி ஆகிய மாதங்களில் உங்கள் வங்கிக் கணக்குக்கு நேரடியாக வட்டித்தொகை வரவு வைக்கப்படும்.
உதாரணம்
நீங்கள் பணியில் இருந்து ஓய்வு பெறும் போது பிஎப் தொகை ரூ.30 லட்சம் இருக்கிறது என வைத்துக்கொள்ளுங்கள் அல்லது பணியில் இல்லாதவர்கள் நீண்ட காலமாக பயன்படுத்தப்படாமல் இருந்த வீடு அல்லது நிலத்தை விற்று அதன் மூலம் கிடைக்கும் தொகையாக இருந்தாலும் சரி.
இந்த 30 லட்சத்தை SCSS திட்டத்தின் கீழ் முதலீடு செய்தால் 3 மாதத்திற்கு அதாவது ஒரு காலாண்டுக்கு ரூ.61,500, மாதம் சராசரியாக ரூ.20,500 கிடைக்கும். இது மருந்து, உணவு, பயணம் போன்ற மாதச் செலவுகளுக்கு போதுமானதாக இருக்கும்.

திட்டத்தின் காலமும் நீட்டிப்பும்
இந்த திட்டத்தின் அடிப்படை முதிர்வு காலம் 5 ஆண்டுகள், 5 ஆண்டுகள் முடிந்த பிறகு விருப்பப்பட்டால் மேலும் 3 ஆண்டுகள் நீட்டிக்கலாம். நீட்டிக்கும் போது அப்போதைய வட்டி விகிதமே பொருந்தும். இந்த திட்டத்தில் முதலீடு செய்தவர்கள் யாராவது இறந்துவிட்டால் நாமினிக்கு முழு தொகையும் உடனடியாக கிடைக்கும். இது குடும்பத்துக்கு மிகப் பெரிய பாதுகாப்பு.
வரி சலுகை
இந்த திட்டத்தில் ரூ.1.5 லட்சம் வரை முதலீடு செய்தால் 80C பிரிவின் கீழ் வரி விலக்கு கிடைக்கும். வட்டி வருமானத்துக்கு வரி உண்டு, ஆனால் மூத்த குடிமக்களுக்கு வரி விலக்கு வரம்பு அதிகம் என்பதால் பலருக்கு வரி சுமை குறைவாகவே இருக்கும். இதேபோல் இத்திட்டத்தில் முதலீடு செய்வோருக்கு வருமானம் இல்லாத பட்சத்தில் மொத்த தொகைக்கும் வரி விலக்கு பெறலாம்.
வங்கி வைப்பு நிதியை விட இது பாதுகாப்பானது, ஏனெனில் முழு தொகைக்கும் அரசு உத்தரவாதம் கொடுக்கிறது. போஸ்ட் ஆபீஸ் சீனியர் சிட்டிசன் ஸ்கீம் ஓய்வுக்காலத்தில் நிம்மதியான வாழ்க்கைக்கு உதவும் சிறந்த திட்டம். மூத்த குடிமக்கள் இதைப் பயன்படுத்தி நிம்மதியாக வாழலாம்.
More From GoodReturns

இந்த வாரம் 4 நாட்கள், அடுத்த வாரம் 3 நாட்கள்: பங்குச்சந்தை முதலீட்டாளர்களே முதல்ல இத படிங்க

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

எஸ்பிஐ-யின் மெகா பிளான்: மாதம் ரூ.11,000 கியாரண்டி வருமானம்! முதலீடு எவ்வளவு தெரியுமா?

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!

கதறி கதறி அழும் வெள்ளி முதலீட்டாளர்கள்.. போட்ட காசு மொத்தமும் போச்சு..!! அடுத்தது என்ன..?

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!

வீட்டிலிருந்தே பிசினஸ்.. கைநிறைய சம்பாத்தியம்!மாதம் லட்சங்களில் வருமானம் ஈட்டக்கூடிய சூப்பர் ஐடியா!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் வட்டி உயர்த்தப்படுகிறதா? மக்களவையில் முக்கிய தகவலை வெளியிட்ட அரசு…!!



Click it and Unblock the Notifications