இந்தியாவினை பொறுத்தவரையில் சிறுசேமிப்பு திட்டங்கள் என்றால் அது அஞ்சலக திட்டங்கள் தான். இது இன்றும் மிகப்பெரிய அளவில் மக்கள் மத்தியில் விரும்பப்படுகிறது.
இந்த சேமிப்பு திட்டங்களுக்கு மார்ச் 31 ஆன இன்று வட்டி அதிகரிப்பு எதிர்பார்த்ததை போலவே அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த வட்டி அதிகரிப்பானது குறிப்பிட்ட திட்டங்களுக்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. .
கொரோனா காலகட்டத்தில் தொடர்ந்து வட்டி விகிதத்தினை அதிகரிக்காமல் இருந்த மத்திய வங்கியானது, அதன் பிறகு தொடர்ந்து மத்திய வங்கியானது வட்டி விகிதத்தினை அதிகரித்து வருகின்றது.
வட்டி விகிதம் எவ்வளவு?
கடந்த ஆறு மாதங்களில் ரெப்போ விகிதங்கள் 30 - 140 அடிப்படை புள்ளிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இதற்கிடையில் தற்போது சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் என்பது 4% முதல் 7.6% வரையில் வட்டி விகிதம் அதிகரித்துள்ளது.
மத்திய அரசு சந்தை நிலவரத்துக்கு ஏற்ப அஞ்சலக சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் என்பது அதிகரித்து வருகின்றது.
மார்ச் காலாண்டில் வட்டி அதிகரிப்பு
கடந்த ஜனவரி மார்ச் காலாண்டில் சில சிறுசேமிப்பு திட்டங்களுக்கு வட்டி விகிதம் என்பது அதிகரிக்கப்பட்டது. இதில் 1 வருடம், 2 வருடம், 3 வருடம், 5 வருட திட்டங்களுக்கு வட்டி விகிதம் என்பது அதிகரிக்கலாம். இது தவிர மூத்த குடி மக்கள் சேமிப்பு திட்டத்திற்கும், தேசிய சேமிப்பு பத்திரம், மாதாந்திர வருவாய் திட்டத்திற்கும் வட்டி விகிதம் என்பது அதிகரிக்கப்பட்டது.
வட்டி அதிகரிப்பு இல்லை
அந்த சமயத்தில் மக்கள் மத்தியில் பெரிதும் விரும்பப்படும் பொது வருங்கால வைப்பு நிதி மற்றும் சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டங்களுக்கு வட்டி விகிதம் என்பது மாற்றம் செய்யப்படவில்லை.
எவ்வளவு வட்டி?
சேமிப்பு கணக்கு டெபாசிட்டுக்கு - 4%
1 வருட டைம் டெபாசிட் - 6.6%
2 வருட டைம் டெபாசிட் - 6.8%
3 வருட டைம் டெபாசிட் - 6.9%
5 வருட டைம் டெபாசிட் - 7%
தொடர் வைப்பு நிதி திட்டம் - 5.8%
மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் - 8%
மாதாந்திர வருவாய் திட்டம் - 7.15
தேசிய சேமிப்பு பத்திரம் - 7%
பொது வருங்கால வைப்பு நிதி - 7.1%
கிசான் விகாஸ் பத்திரம் - 7.2%
சுகன்யா சம்ரிதி யோஜனா - 7.6%
More From GoodReturns

சரிவிலேயே இருக்கும் இந்திய பங்குச்சந்தை இந்த வாரமாவது மீண்டு வருமா?

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை



Click it and Unblock the Notifications