பாதுகாப்பான மற்றும் லாபகரமான சேமிப்பு திட்டத்தை தேடும் முதலீட்டாளர்கள் 5 வருட காலத்திற்கு 7.5% வட்டியில் ரூ. 2 லட்சம் வரை வட்டி வருமானம் பெற முடியும் என்று சொன்னால் நம்ப முடிகிறதா? ஆம்.. அத்தகைய ஒரு திட்டத்தை போஸ்ட் ஆபீஸ் வழங்குகிறது. இந்தப் பதிவில் அதற்கு எப்படி முதலீடு செய்ய வேண்டும்? எவ்வளவு தொகையை முதலீடு செய்தால் ரூ.2 லட்சம் வட்டி கிடைக்கும்? என்ற விவரங்கள் குறித்து பார்ப்போம்.
நிதி ரீதியாக நிலையான எதிர்காலத்தை பெற புத்திசாலித்தனமாக சேமித்து முதலீடு செய்வது அவசியம். தபால் அலுவலகங்களில் வழங்கப்படும் டைம் டெபாசிட் திட்டம் மிகவும் விருப்பமான திட்டங்களில் ஒன்றாக உள்ளது. டைம் டெபாசிட் என்றால் குழப்பம் அடைய வேண்டாம். பிக்சட் டெபாசிட் திட்டமும், டைம் டெபாசிட் திட்டமும் ஒன்றுதான். வெவ்வேறு காலகட்டங்களும் இதற்கு வழங்கப்படுகிறது. எனவே உங்களுடைய எதிர்கால நிதி இலக்குகளின் அடிப்படையில் நீங்கள் தேர்வு செய்து முதலீடு செய்யலாம்.

குழந்தைகள், பெரியவர்கள், மூத்த குடிமக்கள் உட்பட பல்வேறு வயதினருக்கும் ஏற்ற பல சேமிப்பு திட்டங்களை அஞ்சல் அலுவலகம் வழங்குகிறது. இதற்கு அதிக வருமானம், வரி சலுகைகள் போன்றவையும் வழங்கப்படுகிறது.
1 வருட FD: 6.9 சதவீத வட்டி
2 வருட FD: 7.0 சதவீத வட்டி
3 வருட FD: 7.0 சதவீத வட்டி
5 வருட FD: 7.5 சதவீத வட்டி
ரூ. 2 லட்சம் வட்டி பெறுவது எப்படி?: இந்த திட்டத்தின் முக்கிய சிறப்பம்சங்களில் ஒன்று 5 ஆண்டுகளில் ரூ. 2 லட்சம் வரை வட்டி சம்பாதிக்கும் திறன் ஆகும். ஒரு முதலீட்டாளர் 7.5 சதவீத வட்டி விகிதத்தில் 5 ஆண்டுகளுக்கு 5 லட்சத்தை டெபாசிட் செய்தால், மொத்த வட்டி தோராயமாக 2,24,974 ரூபாயாக இருக்கும். அதாவது முதிர்வு காலத்தின் முடிவில் அசல் மற்றும் வட்டி இரண்டையும் சேர்த்து ரூ. 7,24,974 ரூபாயை பெற்றுக் கொள்ளலாம். இதனால் முதலீட்டாளர் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளைப் போல எந்த ஒரு சந்தை அபாயமும் இல்லாமல் ரூ. 2 லட்சத்திற்கு மேல் வருமானம் பெற முடியும். மேலும் போஸ்ட் ஆபீஸ் டைம் டெபாசிட் திட்டத்திற்கு வரி சலுகைகளும் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் செய்யப்படும் முதலீடுகள் வருமான வரி சட்டம் 1961-இன் பிரிவு 80C இன் கீழ் வரி விலக்கு பெற தகுதியுடையவை.


Click it and Unblock the Notifications