வங்கிகளில் வழங்கப்படும் பிக்சட் டெபாசிட்களைப் போல போஸ்ட் ஆபீஸ்களிலும் பிக்சட் டெபாசிட் திட்டங்கள் வழங்கப்படுகின்றன. இதனை டைம் டெபாசிட் (Time Deposit) என்றும் கூறுவர். இந்த வகை முதலீடுகள் சாமானிய மக்களுக்கு உதவும் வகையில் பல்வேறு தவணைக் காலங்களில் வருகிறது. எனவே ஒருவர் தங்களுக்கு ஏற்ற தவணை காலத்தை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். அதன் பிறகு 5 ஆண்டுகளுக்கு தேவைப்பட்டால் உங்களுடைய முதலீட்டை நீட்டித்துக் கொள்ளலாம். அப்படி நீட்டித்தால் உங்களுடைய முதலீட்டை மிஞ்சும் அளவுக்கு வட்டி வருமானம் கிடைக்கும்.
நேஷனல் சேவிங்ஸ் டைம் டெபாசிட் என்றால் என்ன?: நேஷனல் சேவிங்ஸ் டைம் டெபாசிட் அக்கவுண்ட் முதலீட்டாளர்களுக்கு 1, 2, 3, அல்லது 5 வருடங்கள் என பல்வேறு முதலீட்டு காலத்தை வழங்குகிறது. இந்த திட்டங்களில் குறைந்தபட்சம் 1,000 ரூபாய் முதல் முதலீடு செய்யலாம். அதன் பின் 100-இன் மடங்குகளில் எவ்வளவு வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம். இதற்கான உச்சவரம்பு என்று எதுவும் இல்லை. சில திட்டங்களுக்கு 1.5 லட்சத்திற்கு மேல் முதலீடு செய்ய முடியாது என்ற வரம்பு இருக்கும்.

வட்டி விகிதங்கள்: முதலீட்டாளர்கள் 4 வெவ்வேறு கால விருப்பங்களில் இருந்து RD கணக்கு திறக்க தேர்வு செய்யலாம். ஒரு வருட முதலீட்டுக்கு 6.9% வட்டி வழங்கப்படுகிறது, 2 ஆண்டுகால முதலீட்டுக்கு 7.0 சதவீத வட்டி வழங்கப்படுகிறது, 3 ஆண்டு கால முதலீட்டுக்கு 7.1 சதவீத வட்டி வழங்கப்படுகிறது மற்றும் 5 ஆண்டுகால முதலீட்டுக்கு 7.5 சதவீத வட்டி வழங்கப்படுகிறது. இந்த வட்டியானது காலாண்டுக்கு ஒருமுறை கணக்கிடப்பட்டு வழங்கப்படுகிறது.
போஸ்ட் ஆபீஸ் FD திட்டத்தில் 10 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும் என்பதை பார்ப்போம்.
1 வருடம் முதலீடு: போஸ்ட் ஆபீஸ் பிக்சட் டெபாசிட் திட்டத்தில் 10 லட்சம் ரூபாயை மொத்தமாக முதலீடு செய்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அப்படியானால் 6.9% வட்டி விகிதத்தில் வட்டியாக 70,806 ரூபாய் கிடைக்கும். முதிர்வு காலத்தில் நீங்கள் 10,70,806 ரூபாய் பெற்றுக் கொள்ளலாம்.
2 வருடம் முதலீடு: போஸ்ட் ஆபீஸ் பிக்சட் டெபாசிட் திட்டத்தில் 10 லட்சம் ரூபாயை மொத்தமாக 2 வருடங்களுக்கு முதலீடு செய்தால் 7% வட்டி விகிதத்தில் வட்டியாக 1,48,882 ரூபாய் கிடைக்கும். முதிர்வு காலத்தில் நீங்கள் 11,48,882 ரூபாய் பெற்றுக் கொள்ளலாம்.
3 வருடம் முதலீடு: போஸ்ட் ஆபீஸ் பிக்சட் டெபாசிட் திட்டத்தில் 10 லட்சம் ரூபாயை மொத்தமாக 3 வருடங்களுக்கு முதலீடு செய்தால் 7.1% வட்டி விகிதத்தில் வட்டியாக 2,35,075 ரூபாய் கிடைக்கும். முதிர்வு காலத்தில் நீங்கள் 12,35,075 ரூபாய் பெற்றுக் கொள்ளலாம்.
5 வருடம் முதலீடு: போஸ்ட் ஆபீஸ் பிக்சட் டெபாசிட் திட்டத்தில் 10 லட்சம் ரூபாயை மொத்தமாக 3 வருடங்களுக்கு முதலீடு செய்தால் 7.5% வட்டி விகிதத்தில் வட்டியாக 4,49,948 ரூபாய் கிடைக்கும். முதிர்வு காலத்தில் நீங்கள் 14,49,948 ரூபாய் பெற்றுக் கொள்ளலாம்.
வருமானத்திற்கு அப்பால், 5 ஆண்டு FD திட்டத்தில் முதலீட்டாளர்கள் வருமான வரிச் சட்டத்தின் 80C பிரிவின் கீழ் வரிச் சலுகைகளையும் பெறலாம்.
More From GoodReturns

இந்த வாரம் 4 நாட்கள், அடுத்த வாரம் 3 நாட்கள்: பங்குச்சந்தை முதலீட்டாளர்களே முதல்ல இத படிங்க

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!

SIP முதலீடு செஞ்சா கோடிகளில் பணம் கிடைக்குமா? நம்ம எல்லாரும் செய்யுற தப்பு இது தான்..!!



Click it and Unblock the Notifications