ரிஸ்க் எடுக்காமல் வருமானம் வேண்டுமா? வட்டி மட்டும் ரூ.90,000! மத்திய அரசின் அசத்தல் திட்டம்!

மக்கள் தங்கள் சேமிப்புக்கு நல்ல வருமானம் கிடைக்க வேண்டும், அதே நேரத்தில் ரிஸ்க்கும் எடுக்கக் கூடாது என்று நினைக்கின்றனர். நீங்களும் இதுபோன்ற நபர் எனில் யோசிக்கவே தேவையில்லை, உடனே மத்திய அரசு வழங்கும் திட்டங்களை பரிசீலிக்கலாம். சாமானியர்களுக்கு ஏற்ற வகையில் போஸ்ட் ஆபீஸ்-இல் ஏராளமான திட்டங்கள் வழங்கப்படுகிறது. இதில் மொத்தமாக முதலீடு செய்யும் டைம் டெபாசிட் பலரின் விருப்ப தேர்வாக இருக்கிறது.

பணவீக்கத்தை கருத்தில் கொண்டு தங்கள் எதிர்காலத்தை பாதுகாக்க ஒவ்வொருவரும் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யலாம். 5 ஆண்டுகளுக்கு முன்பு 500 ரூபாயை வைத்து நீங்கள் வாங்கிய பொருட்களுக்கும், இன்று நீங்கள் வாங்கும் பொருளுக்கும் எவ்வளவு வித்தியாசம் இருக்கிறது? எவ்வளவு விலை உயர்ந்திருக்கிறது? என்பதை சிந்தித்துப் பாருங்கள். இதை எதிர்கொள்ள வேண்டுமானால் சேமிப்பு முக்கியம்.

போஸ்ட் ஆபீஸ் டைம் டெபாசிட்: பிக்சட் டெபாசிட் திட்டங்கள் எப்படி செயல்படுகின்றனவோ? அதேபோல தான் டைம் டெபாசிட் திட்டமும் வழங்கப்படுகிறது. அதாவது மொத்தமாக ஒரு தொகையை நீங்கள் முதலீடு செய்ய வேண்டும். அதற்கு நீங்கள் தேர்ந்தெடுக்கும் காலத்திற்கு ஏற்ப வட்டி வழங்கப்படும். தற்போது போஸ்ட் ஆபீஸில் 1 ஆண்டு, 2 ஆண்டு, 3 ஆண்டு மற்றும் 5 ஆண்டு டைம் டெபாசிட் திட்டங்கள் வழங்கப்படுகிறது.

ரிஸ்க் எடுக்காமல் வருமானம் வேண்டுமா? வட்டி மட்டும் ரூ.90,000! மத்திய அரசின் அசத்தல் திட்டம்!

1 ஆண்டு டைம் டெபாசிட்: 6.9% வட்டி
2 ஆண்டு டைம் டெபாசிட்: 7% வட்டி
3 ஆண்டு டைம் டெபாசிட்: 7.1% வட்டி
5 ஆண்டு டைம் டெபாசிட்: 7.5% வட்டி

இதில் 5 ஆண்டு டைம் டெபாசிட் திட்டத்திற்கு அதிகபட்ச வட்டி வழங்கப்படுகிறது. குறைந்தபட்சமாக 1000 ரூபாய் கூட டைம் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்யலாம். அதிகபட்ச வரம்பு இதற்கு இல்லை. எனவே உங்களால் முடிந்த தொகையை முதலீடு செய்ய முடியும். நீங்கள் எந்த அளவுக்கு அதிகமான தொகையை முதலீடு செய்கிறீர்களோ? அதற்கு ஏற்ப கிடைக்கும் வட்டி வருமானமும் அதிகமாக இருக்கும்.

ரூ.2 லட்சம் முதலீட்டுக்கு எவ்வளவு வருமானம்?: ஒரு நபர் போஸ்ட் ஆபீஸ் டைம் டெபாசிட் திட்டத்தில் 5 ஆண்டு காலத்தை தேர்ந்தெடுக்கிறார். அதில் ரூ.2 லட்சத்தை முதலீடு செய்கிறார் என்று வைத்துக்கொள்வோம். தற்போது அரசு ஐந்தாண்டு டெபாசிட்டுக்கு 7.5% வட்டி நிர்ணயித்துள்ளது. அதன் படி ஐந்து ஆண்டுகள் கழித்து 89,990 ரூபாய் வட்டி வருமானம் கிடைக்கும். இதனால் முதிர்வில் ரூ.2,89,990 பெற்றுக் கொள்ளலாம். கிட்டத்தட்ட 90,000 ரூபாய் வருமானமாக கிடைக்கும்.

இந்த வட்டி கணக்கீடு புரியாதவர்கள் ஆன்லைனில் கால்குலேட்டர்களைப் பயன்படுத்தலாம். அதாவது டெபாசிட் திட்டங்களின் பிரத்தியேக கால்குலேட்டர்கள் ஆன்லைனில் இருக்கிறது. உதாரணமாக டைம் டெபாசிட் கால்குலேட்டர் என்று கொடுத்தால் உங்களுக்கு ரிசல்ட் காண்பிக்கும். அதில் நீங்கள் முதலீடு செய்ய இருக்கும் தொகை, கால அளவு மற்றும் வட்டி சதவீதம் ஆகியவற்றை வழங்கினால் முதிர்வில் எவ்வளவு வருமானம் கிடைக்கும்? என்பதை சிஸ்டம் காண்பித்துவிடும்.

ஐந்தாண்டு டைம் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்யும் போது, வருமானவரிச் சட்டம் 80சி பிரிவின் கீழ் வரி விலக்கு பெற முடியும். தனிநபர்கள் தனியாக அல்லது கூட்டுக் கணக்கை தொடங்கலாம். அதேபோல நீங்கள் முதலீடு செய்த தொகையை முதல் ஆறு மாதங்களுக்குள் எந்த காரணமாக இருந்தாலும் எடுக்க முடியாது. ஒருவேளை எடுத்தால் அதற்கு 1 சதவீதம் வரை அபராதம் விதிக்கப்படும். எனவே பாதுகாப்பான முறையில் எந்த வித டென்ஷனும் இல்லாமல் வருமானம் பார்க்க நினைப்பவர்கள் இந்த திட்டத்தை கருத்தில் கொள்ளலாம்!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+