அஞ்சலகத்தின் அருமையான திட்டம்.. ரூ.1 லட்சத்துக்கு ரூ.39,000- மேல் வட்டி.. எப்படி..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அஞ்சலகத்தின் சேமிப்பு திட்டங்கள் என்றாலே நம்பகமான நிரந்தர வருமானம் தரக்கூடிய பாதுகாப்பான திட்டமாக பார்க்கப்படுகிறது.

 

எல்லாவற்றிற்கும் மேலாக மூத்த குடிமக்களுக்கு ஏற்ற ஒரு வருமானம் தரக்கூடிய திட்டமாகவும் பார்க்கப்படுகிறது.

அந்த வகையில் நாம் இன்று பார்க்க கூடிய திட்டம் அஞ்சலகத்தின் டைம் டெபாசிட் திட்டம் பற்றித் தான்.

டைம் டெபாசிட் திட்டம்

டைம் டெபாசிட் திட்டம்

அஞ்சலகத்தின் டைம் டெபாசிட் திட்டத்தில் வட்டி விகிதம் வருடத்திற்கு ஒரு முறை கொடுக்கப்படுகிறது. எனினும் காலாண்டுக்கு ஒரு முறை கணக்கிடப்படுகிறது. இந்த திட்டத்தில் குறைந்தபட்சம் 1000 ரூபாயில் இருந்து டெபாசிட் செய்யலாம். அதிகபட்சம் என்பது வரம்பு இல்லை. இந்த டைம் டெபாசிட்டில் பல ஆண்டு திட்டங்கள் உள்ளன.

 வட்டி விகிதம்

வட்டி விகிதம்

இந்த திட்டத்தில் 18 வயது நிரம்பிய எந்தவொரு இந்திய குடிமகனும் தொடங்கிக் கொள்ளலாம். இதனை ஜாய்ண்ட் அக்கவுண்டாகவும் (3 பேர் வரை) தொடங்கிக் கொள்ளலாம். குழந்தைகளும் பாதுகாவலரின் துணையுடன் தொடங்கிக் கொள்ளலாம். அதேபோல ஒருவர் எத்தனை பேர் வேண்டுமானாலும் தொடங்கிக் கொள்ளலாம்.

இந்த திட்டத்தில் 1 வருடத்திற்கு வட்டி விகிதம் - 5.5%

2 வருட திட்டத்திற்கு வட்டி விகிதம் - 5.5%

3 வருட திட்டத்திற்கு வட்டி விகிதம் - 5.5%

5 வருட திட்டத்திற்கு வட்டி விகிதம் - 6.7%

வரிச்சலுகை
 

வரிச்சலுகை

வரி சலுகை என்பது 5 வருட திட்டத்தில் மட்டும் தான் கிடைக்கிறது. மற்ற திட்டங்களில் கிடையாது. அதே போல முன் கூட்டியே முடித்துக் கொள்ளவும் அனுமதிக்கப்படுகிறது. எனினும் அபராதத்துடன் அனுமதிக்கப்படுகிறது. உங்களது டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதம் வருடத்திற்கு ஒரு முறை கிடைக்கும். டெபாசிட் பணமானது முதிர்வுக்கு பிறகே கிடைக்கும்.

வட்டி குறையும்

வட்டி குறையும்

டைம் டெபாசிட்டுகளை முன்னதாக எடுத்தால் வட்டி விகிதம் என்பது குறைவாக இருக்கும். 2/3/5 வருட கணக்கில் 1 வருடத்திற்கு பிறகு மூடப்பட்டால் வட்டி விகிதம் 2% குறைவாக இருக்கும். 1 வருடத்திற்கும் குறைவான காலத்திற்குள் எடுக்கப்பட்டால் சேமிப்பு கணக்குக்கு உண்டான வட்டி கொடுக்கப்படும்.

 ரூ.1 லட்சம் டூ ரூ.1.39 லட்சம் எப்படி?

ரூ.1 லட்சம் டூ ரூ.1.39 லட்சம் எப்படி?

முதிர்வுக்கு பிறகு இந்த டைம் டெபாசிட்டினை நீட்டித்துக் கொள்ளலாம். அதற்காக 12 மாத காலம் அவகாசம் கிடைக்கும். அதற்குள்ளாக நீட்டித்துக் கொள்ளலாம். இது 5 வருடம் வரை நீட்டிக்கலாம்.

உதாரணத்திற்கு இந்த திட்டத்தில் 1 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்தால் - 1 வருடம் கழித்து 1,05,614 ரூபாயாகும்.

இதே 2 வருட திட்டத்தில் - ரூ.1,11,544

3 வருட திட்டத்தில் - ரூ.1,17,807

5 வருட திட்டத்தில் - ரூ.1,39,407

ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் எவ்வளவு கிடைக்கும்?

இதில் 5 வருட திட்டத்தில் தான் வரிச்சலுகையும் அதிகம், வட்டி விகிதமும் அதிகம் என்பதால், நல்ல லாபகரமான திட்டமாகவும் பார்க்கப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

post office time deposit schemes, How about interest above Rs 39,000 for Rs 1 lakh?

post office time deposit schemes, How about interest above Rs 39,000 for Rs 1 lakh?/அஞ்சலகத்தின் அருமையான திட்டம்.. ரூ.1 லட்சத்துக்கு ரூ.39,000- மேல் வட்டி.. எப்படி..!
Story first published: Tuesday, January 11, 2022, 20:27 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X