Post office time Deposit Vs SBI FD: இந்தியாவில் பல ஆயிரம் முதலீட்டு திட்டங்கள் இருந்தாலும், பொதுவாக முதலீட்டாளர்கள் மத்தியில் அதிகம் விரும்பப்படுவது வங்கி வைப்பு நிதி மற்றும் அஞ்சலகத் சிறு சேமிப்பு திட்டங்கள் தான். எனினும் இந்த இரு திட்டங்களில் எது சிறந்தது? எது முதலீட்டாளர்களுக்கு ஏற்றது? எதில் வருமானம் அதிகம்? வாருங்கள் பார்க்கலாம்.
சமீபத்திய காலாண்டுகளாக தொடர்ந்து ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தினை அதிகரித்து வருகின்றது. குறிப்பாக கடந்த மே மாதத்தில் இருந்து 6 முறை அதிகரித்து, 250 அடிப்படை புள்ளிகள் வட்டி விகிதத்தினை அதிய

இந்த சூழலில் வங்கிகளானது பிக்சட் டெபாசிட்களுக்கு வட்டி விகிதத்தினை அதிகரித்து வருகின்றது. வட்டி விகிதம் அதிகமாக உள்ள நிலையில் சமீபத்திய காலமாக இது கவர்ச்சிகரமான திட்டங்களில் ஒன்றாக இருந்து வருகின்றது.
சராசரியாக 5 சதவீதமாக இருந்த வட்டி விகிதமனது, தற்போது 7 சதவீதத்திற்கு மேலாக காணப்படுகிறது. வங்கிகள் மட்டும் அல்ல சமீபத்தில் அஞ்சலக திட்டங்களுக்கும் வட்டி விகிதம் என்பது அதிகரித்து வருகின்றது.

அஞ்சலகத்தின் டைம் டெபாசிட்டும் பாதுகாப்பான முதலீடாகவும், வட்டி விகிதமும் அதிகளவில் இருந்து வருகின்றது. இதிலும் சந்தை அபாயம் என்பது இல்லை. இந்த அஞ்சலகத்தின் டைம் டெபாசிட்களுக்கான வட்டி விகிதம் என்பது வங்கி வட்டி விகிதங்களை காட்டிலும் அதிகமாகும்.
இதில் 1 வருட டைம் டெபாசிட் திட்டத்திற்கு - 6.8%
2 வருட டைம் டெபாசிட் - 6.9%
3 வருட டைம் டெபசிட் - 7%
5 ஆண்டு டைம் டெபாசிட் - 7.5%

இதே எஸ்பிஐ பிக்சட் டெபாசிட் திட்டத்தில் 7 நாளில் இருந்து 10 வருடம் வரையிலான திட்டங்கள் உள்ளன. இதற்கான வட்டி விகிதம் என்பது 3% முதல் 7.1% வரையில் வழங்கப்படுகின்றது. இந்த திட்டத்தில் மூத்த குடிமக்களுக்கு கூடுதலாக 50 அடிப்படை புள்ளிகள் வழங்கப்படுகிறது.
இதில் 1 வருட பிக்சட் டெபாசிட் திட்டத்திற்கு 6.8% ஆக வழங்கப்படுகிறது. 2 வருட மற்றும் 3 வருட திட்டத்திற்கும் 7% கீழாகவே வட்டி வழங்கப்படுகிறது. இந்த வட்டி விகிதங்கள் பிப்ரவரி 15ல் இருந்து அமலுக்கு வந்துள்ளது.
7 நாட்கள் - 45 நாட்கள் - 3%
46 நாட்கள் - 179 நாட்கள் - 4.5%
180 நாட்கள் - 210 நாட்கள் - 5.25%
211 நாட்கள் - 1 வருடத்திற்குள் - 5.75%
1 வருடம் முதல் 2 வருடத்திற்குள் - 6.8%
400 நாட்கள் - 7.10%
2 வருடம் முதல் 3 வருடத்திற்குள் - 7%
3 வருடம் முதல் 5 வருடத்திற்குள் - 6.5%
5 வருடம் முதல் 10 வருடத்திற்குள் - 6.5%
வங்கியோடு ஒப்பிடும்போது, அஞ்சலக டைம் டெபாசிட் திட்டத்திலேயே வட்டி விகிதம் அதிகம். இதனால் வருமானமும் அதிகம் கிடைக்கலாம். ஆக அதிக வருமானம் வேண்டும் என நினைப்பவர்கள், ரிஸ்க் வேண்டாம் என நினைப்பவர்கள் அஞ்சலக டைம் டெபாசிட் திட்டத்தினை தேர்வு செய்யலாம்.
More From GoodReturns

இந்த வாரம் 4 நாட்கள், அடுத்த வாரம் 3 நாட்கள்: பங்குச்சந்தை முதலீட்டாளர்களே முதல்ல இத படிங்க

இந்திய பங்குச்சந்தைக்கு பெரிய கும்பிடு போடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்..!! மீண்டும் வருவார்களா?

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!

எஸ்பிஐ-யின் மெகா பிளான்: மாதம் ரூ.11,000 கியாரண்டி வருமானம்! முதலீடு எவ்வளவு தெரியுமா?

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!

SIP முதலீடு செஞ்சா கோடிகளில் பணம் கிடைக்குமா? நம்ம எல்லாரும் செய்யுற தப்பு இது தான்..!!

வீட்டிலிருந்தே பிசினஸ்.. கைநிறைய சம்பாத்தியம்!மாதம் லட்சங்களில் வருமானம் ஈட்டக்கூடிய சூப்பர் ஐடியா!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!



Click it and Unblock the Notifications