மத்திய வங்கியானது தொடர்ந்து வட்டி விகிதம் அதிகரித்து வரும் நிலையில், வங்கிகள் வைப்பு நிதிகளுக்கான வட்டி விகிதத்தினை அதிகரித்து வருகின்றன. இதன் காரணமாக பிக்சட் டெபாசிட் திட்டங்கள் சமீபத்திய காலமாக கவர்ச்சிகரமான திட்டங்களில் ஒன்றாக பார்க்கப்படுகின்றன.
குறிப்பாக ஸ்மால் பைனான்ஸ் வங்கிகள் தொடர்ந்து நல்ல வட்டி விகிதத்தினை அதிகளவில் கொடுத்து வருகின்றன.
எனினும் முதலீட்டாளர்கள் மத்தியில் இன்றும் பெரிய கேள்வியாய் இருப்பது அஞ்சலகத்தின் டைம் டெபாசிட் திட்டத்தில் வட்டி அதிகமா? அல்லது சிறு நிதி வங்கிகளில் வட்டி அதிகமா? எது பாதுகாப்பானது? எது லாபகரமானது என்ற சந்தேகம் இருந்து வருகின்றது.
நல்ல திட்டங்கள்
பொதுவாக பாதுகாப்பான நல்ல வட்டி விகிதம் எனும் போது இந்த இரண்டு திட்டங்களே சிறந்த திட்டங்களாக பார்க்கப்படுகின்றன. ஆக நீங்கள் முதலிடு செய்ய நினைக்கிறீர்கள் எனில், இந்த இரண்டு திட்டங்களிலுமே முதலீடு செய்யலாம். எனினும் இரண்டு திட்டங்களில் உள்ள சாதக பாதகங்கள் என்ன? வாருங்கள் பார்க்கலாம்.
அஞ்சலகத்தின் டைம் டெபாசிட்
அஞ்சலகத்தின் டைம் டெபாசிட் எனும்போது பாதுகாப்பான திட்டங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. இது அரசின் கீழ் இயங்கும் அஞ்சலகத்தின் மூலம் வழங்கப்படுவதால் பாதுகாப்பான ஒன்றாக பார்க்கப்படுகிறது. அதேசமயம் இந்த திட்டத்தில் மூத்த குடி மக்கள், சாதாரண மக்கள் என்ற பாகுபாடெல்லாம் கிடையாது. அனைவருருக்குமே ஒரே வட்டி விகிதம் தான். அதே போல இந்த திட்டத்தில் 1 ஆண்டு, 2 ஆண்டு, 3 ஆண்டு திட்டங்கள், 5 ஆண்டு திட்டங்கள் என உள்ளன. அதற்கு வட்டி வீதம் 7% கிடைக்கிறது.
சிறு நிதி வங்கிகள்
சிறு நிதி வங்கிகளை பொறுத்தவரையில் வட்டி விகிதம் என்பது எஃப் டிகளுக்கு அதிகமாக கொடுக்கப்படுகின்றது. இதில் 9% வரையில் வட்டி விகிதம் வழங்கப்படுகின்றது. இதில் 1001 நாள் வரையில் காலம் வழங்கப்படுகின்றது. இதில் சாதாரண மக்களுக்கு ஒரு வட்டி விகிதம், மூத்த குடிமக்களுக்கு அதிக வட்டி என கிடைக்கிறது. பொதுவாக சாதாரண மக்களுக்கு 9% வரையில் கிடைக்கிறது. இதே மூத்த குடிமக்களுக்கு 9.5% வரையில் வட்டி கிடைக்கிறது.
வருமானம் அதிகமா?
ஆக அஞ்சலக திட்டத்தினை பொறுத்தவரையில், ஸ்மால் பைனான்களில் வட்டி விகிதம் என்பது அதிகம். ஆக எனக்கு வருமானம் அதிகம் வேண்டும் என நினைப்பவர்கள் இதில் டெபாசிட் செய்து கொள்ளலாம்.
உதாரணத்திற்கு ஜனா ஸ்மால் பைனான்ஸ் வங்கியில் 2 - 3 வருட திட்டத்திற்கு சாதாரண மக்களுக்கு 8.1% வட்டியும், மூத்த குடிமக்களுக்கு 8.8% வட்டியும் கிடைக்கிறது.
மற்ற ஸ்மால் பைனான்ஸ்
இதே சூர்யோதய ஸ்மால் பைனான்ஸில் 999 நாள் திட்டத்தில் சாதாரண மக்களுக்கு 8.51% வட்டியும், மூத்த குடிமக்களுக்கு 8.76% வட்டியும் கிடைக்கிறது.
உஜ்ஜீவன் ஸ்மால் பைனான்ஸில் 560 நாள் திட்டத்தில் சாதாரண மக்களுக்கு 8% வட்டியும், மூத்த குடிமக்களுக்கு 8.75% வட்டியும் கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications