குறுகிய காலத்தில் அதிக வருமானத்தை பெற வேண்டும் என்பதுதான் பெரும்பாலான முதலீட்டாளர்களின் பொதுவான விருப்பம். ஆனால் சிறந்த வருமானத்தை பெற எப்படி முதலீடு செய்ய வேண்டும்? எந்தெந்த உத்தியைப் பயன்படுத்த வேண்டும் என்பதில் பலருக்கும் குழப்பம் இருக்கும். அதற்கு நிலையான முதலீட்டுடன் தொடங்குவது முக்கியம்.
தவறாமல் முதலீடு செய்யும் பழக்கத்தை நீங்கள் வளர்த்துக் கொண்டால் எதிர்காலத்தில் அதிக வருமானத்தை பெற முடியும். உதாரணமாக சிறிய முதலீட்டுடன் தொடங்கினாலும் முதலீட்டு காலம் முழுவதும் நிலையாக முதலீடு செய்ய வேண்டும். ஒருபோதும் உங்களுடைய முதலீட்டை தவறவிடக் கூடாது.

முதலீட்டுக்கு அதிக வருமானம் வேண்டும் என்றால் அதற்கு கூட்டு வட்டி முறையில் பலன் தரும் முதலீட்டு திட்டத்தை கண்டுபிடிப்பது முக்கியம். அத்தகைய ஒரு திட்டம்தான் சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் (SIP). எஸ்ஐபி திட்டத்தில் மாதந்தோறும் ரூ. 8,000 முதலீடு செய்தால் எவ்வளவு வருமானம் கிடைக்கும்? என்று பார்ப்போம்.
கூட்டு வட்டி என்றால் என்ன?: நீங்கள் ஒரு முதலீட்டு திட்டத்தில் முதலீடு செய்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அதற்கு பெயரளவு வட்டி கிடைக்கிறது என்றால்.. மறு வருடம் அந்த வட்டிக்கும் சேர்த்து வட்டி கிடைக்கும். இதுதான் கூட்டு வட்டி எனப்படுகிறது. இப்படி வட்டிக்கும் வட்டி கிடைப்பதால் உங்களுடைய வருமானம் வேகமாக வளரும்.
சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் முதலீடு: சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மெண்ட் பிளான் என்பது எஸ்ஐபி என்று அழைக்கப்படுகிறது. இது ஒரு மியூச்சுவல் ஃபண்ட் திட்டமாகும். முதலீட்டாளரின் திறனுக்கு ஏற்ப தினசரி, வாராந்திர அடிப்படையில், மாதாந்திர அடிப்படையில் என எப்படி வேண்டுமானாலும் எஸ்ஐபி திட்டத்தில் முதலீடு செய்ய முடியும்.
எஸ்ஐபி திட்டத்தில் நீங்கள் போடும் முதலீட்டுக்கு முதலில் வட்டி கிடைக்கும். அதன் பிறகு அந்த வட்டிக்கும் சேர்த்து வட்டி வருமானம் கிடைக்கும். இதனால் உங்களுடைய முதலீடு எளிதில் அதிகரிக்கும்.
எஸ்ஐபி-யில் ரூ.8000 மாதம் முதலீடு செய்தால் எவ்வளவு வருமானம் கிடைக்கும்?:
10 வருடம்: ஒருவர் தொடர்ந்து எஸ்ஐபி-யில் 8000 ரூபாயை 10 வருடங்களுக்கு முதலீடு செய்கிறார் என்று வைத்துக் கொள்வோம். 10 வருடங்கள் கழித்து ரூ. 9,60,000 முதலீடு செய்திருப்பார். இதற்கு 12 சதவீத வருடாந்திர வருமானம் கிடைத்தால் வட்டி வருமானமாக 8,32,287 ரூபாய் கிடைக்கும். அப்படியானால் முதிர்வு காலத்தில் 17,92,287 ரூபாயை பெற்றுக் கொள்ளலாம்.
20 வருடம்: ஒருவர் தொடர்ந்து எஸ்ஐபி-யில் 8000 ரூபாயை 20 வருடங்களுக்கு முதலீடு செய்கிறார் என்று வைத்துக் கொள்வோம். 20 வருடங்கள் கழித்து ரூ. 19,20,000 முதலீடு செய்திருப்பார். இதற்கு 12 சதவீத வருடாந்திர வருமானம் கிடைத்தால் வட்டி வருமானமாக 54,38,859 ரூபாய் கிடைக்கும். அப்படியானால் முதிர்வு காலத்தில் 73,58,859 ரூபாயை பெற்றுக் கொள்ளலாம்.
23 ஆண்டுகள்: ஒருவர் 8000 ரூபாய் எஸ்ஐபி முதலீட்டை தொடர்ந்து 23 ஆண்டுகளுக்கு செய்து வருகிறார் என்று வைத்துக்கொள்வோம். அப்படியானால் 23 ஆண்டுகள் கழித்து ரூ. 22,08,0000 முதலீடு செய்திருப்பார். இதற்கு 12 சதவீத வட்டி வருமானம் கிடைத்தால்.. வட்டியாக ரூ.84,75,301 கிடைக்கும். இதன் மூலம் மொத்த கார்பஸ் ரூ.1,06,83,301 ஆக இருக்கும்.
எஸ்ஐபி முதலீடுகள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை. எனவே எந்த ஒரு முதலீட்டு திட்டத்திலும் முதலீடு செய்வதற்கு முன்பு உங்களுடைய நிதி ஆலோசகரை அணுகி ஆலோசனை பெற்று சுய விருப்பத்தின் பேரில் முதலீடு செய்யுங்கள்.
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
More From GoodReturns

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

கதறி கதறி அழும் வெள்ளி முதலீட்டாளர்கள்.. போட்ட காசு மொத்தமும் போச்சு..!! அடுத்தது என்ன..?

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!

SIP முதலீடு செஞ்சா கோடிகளில் பணம் கிடைக்குமா? நம்ம எல்லாரும் செய்யுற தப்பு இது தான்..!!



Click it and Unblock the Notifications