அஞ்சலக திட்டங்களில் மிக பிரபலமான திட்டங்களில் ஒன்று பொது வருங்கால வைப்பு நிதி திட்டம். பாதுகாப்பு அம்சம் பொருந்திய முக்கியமாக பார்க்கப்படுகிறது. வருவாய் குறைவாக இருந்தாலும், நிலையான வருமானம் கிடைக்கும். இதனால் மிக பாதுகாப்பான திட்டமாக பார்க்கப்படுகிறது.
பிபிஎஃப் திட்டம் 100% ரிஸ்க் இல்லா திட்டமாகும். இந்த திட்டத்திற்கு தற்போதைய நிலவரப்படி 7.1% வட்டி விகிதம் கிடைக்கிறது.
எனினும் இதிலும் சில கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள் உள்ளன. அதனை பற்றித் தான் இந்த பதிவில் பார்க்க இருக்கிறோம்.
வட்டி விகிதம்
பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தினை பொறுத்தவரையில், தற்போதைய நிலவரப்படி 7.1% வட்டி விகிதம் வசூலிக்கப்படுகிறது. இது மற்ற திட்டங்களை காட்டிலும் அதிகம். குறிப்பாக வங்கி பிக்ஸட் டெபாசிட் திட்டங்களை காட்டிலும் வட்டி அதிகம்.
பிபிஎஃப் டெபாசிட்
பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் மாதம் குறைந்தபட்சம் 500 ரூபாய் இருந்து டெபாசிட் செய்து கொள்ளலாம். அதிகபட்சம் 1.5 லட்சம் ரூபாய் வரையில் முதலீடு செய்து கொள்ளலாம். இதற்கும் அதிகமாக டெபாசிட் செய்ய வேண்டுமெனில், மற்ற குடும்ப உறுப்பினர்கள் பெயரில் செய்து கொள்ளலாம்.
வட்டி எப்படி கணக்கீடு?
பிபிஎஃப் வட்டியானது 5ம் தேதிக்கு முன்பு டெபாசிட் செய்யப்பட்டால், வட்டி ஒரு மாதத்திற்கு செலுத்தப்படும். அதாவது பிபிஎஃப் வட்டி விகிதம் ஒவ்வொரு மாதத்தின் 5ம் தேதி முதல் கடைசி நாள் வரை ஒரு நபரின் கணக்கில் குறைந்தபட்ச நிலுவை அடிப்படையில் கணக்கிடப்படுகிறது.
பிபிஎஃப் விதிகள்
பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் ஒரு தனி நபர் ஒரு கணக்கினை மட்டும் தொடங்கிக் கொள்ளலாம். இதே இருவர் இணைந்து ஜாய்ண்ட் அக்கவுண்டாகவும் தொடங்கிக் கொள்ளலாம்.
வித்ட்ராவல் விதிகள்
பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் அக்கவுண்ட் ஹோல்டர் முதிர்வு காலத்திற்கு பிறகு, அதாவது 15 ஆண்டுகளுக்கு பிறகு முழுமையாக வித்ட்ராவல் செய்து கொள்ளலாம். ஓரு வேளை அவசரம் என்றால் 7 வருடங்களுக்கு பிறகு எடுத்துக் கொள்ளலாம். இதே முன் கூட்டியே கணக்கினை முடித்துக் கொள்ள வேண்டுமெனில் 4 ஆண்டுகள் முடிந்த பின்னர் முடித்துக் கொள்ளலாம்.
வரி சலுகையுண்டா?
இந்த பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் வருமான வரி பிரிவு 80-சியின் கீழ் 1.5 லட்சம் ரூபாய் வரையில், வரி விலக்கு உண்டு. அதேபோல பிபிஎஃப் திட்டத்தின் மூலம் முதிர்வு தொகைக்கு 100% வரி விலக்கு உண்டு.
எப்படி ஆக்டிவேட் செய்வது?
அஞ்சலகத்தின் பொது வருங்கால வைப்பு நிதி திட்ட கணக்கினை தொடங்க 500 ரூபாய் செலுத்த வேண்டியிருக்கும். அதற்கும் கீழாக இந்த கணக்கில் டெபாசிட் செய்யப்பட்டால், இந்த கணக்கு ப்ரீஸ் செய்யப்படும். இதற்கு வருடத்திற்கு 50 ரூபாய் அபராதம் உண்டு.
பிபிஎஃப் கணக்கு நீட்டிப்பு
பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தின் முதிர்வு காலம் 15 ஆண்டுகளாகும். அதற்கு மேற்கொண்டு இந்த கணக்கினை 5 ஆண்டு தொகுப்புகளாக நீட்டித்துக் கொள்ளலாம்.
கடன் வாங்கலாமா?
இந்த பிபிஎஃப் திட்டத்தில் 3 முதல் 5 ஆண்டுகளுக்குள் கடன் வாங்கிக் கொள்ளலாம். இந்த கடன் விண்ணப்ப ஆண்டிற்கு முந்தைய 2வது வருடத்தில் அதிகபட்சம் 25% கடன் கொடுக்கலாம்.
More From GoodReturns

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தங்கம் விலையில் திடீர் மாற்றம்.. மத்திய கிழக்கு போர் பதற்றம் செய்யும் அட்டகாசம்..!!

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

கழுதை மேச்சா ரூ.50 லட்சம்!! அதுவும் அரசாங்கமே தருது!! வேற என்ன வேணும்? ஆரம்பிக்கலாமா?

EPF முதல் SSY வரை: உங்கள் பணத்திற்கு அதிக லாபம் தரும் சிறந்த முதலீடு எது?

இதுக்கு பேர் தான் Old is Gold-ஆ.. காலம் மாறினாலும், ஃபார்மூலா மாறாது..!!

ஏறிய வேகத்தில் இறங்கிய இந்திய பங்குச்சந்தை!! முதலீட்டாளர்கள் கதறல்!! இதுக்கு விடிவுகாலமே இல்லையா?:

ரூ. 50,000 கையில் இருக்கா..? உங்கள் வாழ்க்கையை மாற்றப்போகும் முக்கிய முடிவு..!

EPF, NPS அல்லது PPF: நிம்மதியான ஓய்வுக் காலத்துக்கு நம்பர் 1 சாய்ஸ் எது?

3 நாட்கள் சரிவில் இருந்து மீண்டு வந்த இந்திய பங்குச்சந்தை; சென்செக்ஸில் புதிய இண்டெக்ஸ் அறிமுகம்!!

மொத்தமா போச்சு!! ரத்தகளறியானது இந்திய பங்குச்சந்தை!! 9 லட்சம் கோடி இழப்பு.. சென்செக்ஸ், நிஃப்டி கடும் வீழ்ச்சி



Click it and Unblock the Notifications