PPF எனப்படும் பொது வருங்கால வைப்பு நிதி காலம் காலமாக இந்திய நடுத்தர மக்களுக்கு மிகவும் நம்பகமான சேமிப்பு திட்டமாக திகழ்ந்து வருகிறது. அரசு உத்தரவாதம், வரி விலக்கு, பங்குச்சந்தை ஏற்ற இறக்கம் போன்றவை பாதிக்காத திட்டம், நிரந்தர வருமானம் ஆகியவை PPF திட்டத்தின் சிறப்பம்சங்களாக உள்ளது. பங்குச்சந்தை போல் அதிகளவிலான வருமானம் இல்லையென்றாலும், இதில் இருக்கும் ரிஸ்க் PPF திட்டத்தை ஜீரோ.
எப்படி பங்குச்சந்தையில் நீண்ட கால முதலீடு முக்கியமானதாக இருக்கிறதோ, அதேபோல் PPF திட்டத்தில் 15 ஆண்டு காலம் லாக்இன் காலம் கொண்டது. இந்த திட்டத்தில் மாதாந்திர அடிப்படையில் சிறியளவில் சேமித்து பெரிய தொகையாக மாறும் என்பதை பலர் அறிந்திருக்க மாட்டார்கள். தற்போது இத்திட்டத்தில் செய்யப்படும் முதலீட்டுக்கு 7.1 சதவீத வட்டி வருமானம் அளிக்கப்படும் வேளையில் மாதம் ரூ.2,000 முதல் ரூ.5,000 வரை சேமித்தால் இத்திட்ட முதிர்வுக்குப் பிறகு எவ்வளவு கிடைக்கும் என்பதை இங்கு பார்ப்போம்.

பிபிஎஃப் திட்டத்தின் அமைப்பு:
பிபிஎஃப் கணக்கு 15 ஆண்டு காலம் கொண்டது. ஆண்டுக்கு குறைந்தபட்சம் ரூ.500, அதிகபட்சம் ரூ.1.5 லட்சம் வரை இதில் முதலீடு செய்யலாம். மத்திய அரசு ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் வட்டி விகிதத்தை நிர்ணயம் செய்கிறது, அப்படி நிர்ணயம் செய்யும்போது வட்டி விகிதம் உயரவும் வாய்ப்புள்ளது, குறையவும் வாய்ப்புள்ளது. தற்போது மத்திய அரசு PPF முதலீட்டுக்கு 7.1 சதவீத வட்டியை விதிக்கிறது.
PPF திட்டத்தின் மிகப்பெரிய சிறப்பே EEE தான் அதாவது Exempt-Exempt-Exempt. இது எப்படி வேலை செய்யும் என்றால் முதலீட்டு தொகை, வட்டி, முதிர்வு தொகை என அனைத்தும் வரி விலக்கு பெறுகிறது. நீங்கள் பழைய வருமான வரி முறையை தேர்வு செய்தாவ் பிரிவு 80C கீழ் இத்திட்டத்தில் முதலீடு செய்யப்படும் ரூ.1.5 லட்சம் வரை வரி விலக்கு கிடைக்கும். முதலீட்டில் ரிஸ்க் எடுக்க வேண்டாம் என விரும்பாதவர்களுக்கு ஏற்றது இந்த PPF திட்டம்.
சரி விஷயத்திற்கு வருவோம்
மாதம் ரூ.2,000 சேமித்தால் ஆண்டுக்கு ரூ.24,000 ஆகும். 15 ஆண்டுகளில் மொத்த சேமிப்பு ரூ.3.60 லட்சம். 7.1 சதவீத வட்டியுடன் கூட்டு வட்டி சேர்க்கப்பட்டு முதிர்வில் ரூ.6,50,913 கிடைக்கும். இதில் வட்டி மட்டும் ரூ.2.90 லட்சம். இது சிறிய சேமிப்பு பெரிய தொகையாக மாறுவதை காட்டுகிறது.
இதுவே நீங்கள் ரூ.3,000 - ரூ.5,000 தொகையை இத்திட்டத்தில் சேமித்தால் ரூ.10 லட்சம் முதல் ரூ.16 லட்சம் வரை கிடைக்கும். இந்த 3000 -5000 ரூபாய் என்பது இன்றைய வாழ்க்கை செலவு முறையில் குடும்பமாக தியேட்டருக்கு சென்று படம் பார்த்துவிட்டு, இரவு டின்னர் சாப்பிட்டு வருவதற்கான செலவு தொகை தான். இதனால் மிடில் கிளாஸ் மக்களுக்கு இந்த 3000 - 5000 ரூபாய் தொகை பெரிய சுமை இல்லை, இதேபோல் தொடர்ந்து முதலீடு செய்வது மூலம் தேவையில்லாத செலவுகளை குறைத்து முதலீட்டின் வாயிலாக நிதி ஒழுக்கத்தையும் கொண்டு வர முடியும்.
சரி PPF திட்டத்தில் மாதம் மாதம் ரூ.3,000 சேமித்தால் 15 ஆண்டுகளில் மொத்த சேமிப்பு ரூ.5.40 லட்சம். இத்திட்ட முதிர்வில் ரூ.9,76,370 கிடைக்கும் - ரூ.10 லட்சத்தை நெருங்கும். இதுவே நீங்கள் மாதம் ரூ.5,000 சேமித்தால் மொத்த சேமிப்பு ரூ.9 லட்சம். முதிர்வில் ரூ.16,27,284 கிடைக்கும். இதில் வட்டி ரூ.7 லட்சத்துக்கு மேல். இது குழந்தை கல்வி, வீடு வாங்குதல் போன்ற பெரிய இலக்குகளுக்கு உதவும்.
PPF திட்டத்தின் முதலீட்டு காலமான 15 ஆண்டுகள் முடிந்த பிறகு உங்களுக்கு பணம் தேவை இல்லையெனில் 5 ஆண்டுக்கு கணக்கை நீட்டிக்கலாம். இதை நீங்கள் முதிர்வுக்கு ஒரு ஆண்டுக்கு முன் விண்ணப்பித்தால் போதும். இது கூட்டு வட்டி மூலம் பெரிய தொகையை முதலீடு செய்தால் கோடிகளாக கூட உயர வாய்ப்புள்ளது.
பிபிஎஃப் சேமிப்பு ரிஸ்க் இல்லாத, வரி விலக்கு கொண்ட பாதுகாப்பான திட்டம் என்பதால் அனைத்து தரப்பினருக்கும் ஏற்ற திட்டமாக விளங்குகிறது. அரசு ஊழியர், தனியார் ஊழியர், சிறு வியாபாரி என அனைவருக்கும் ஏற்றது. இது கல்வி செலவு, திருமண செலவு போன்ற முக்கியமான நிதி இலக்குகளை அடைய உதவும்.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

இந்த வாரம் 4 நாட்கள், அடுத்த வாரம் 3 நாட்கள்: பங்குச்சந்தை முதலீட்டாளர்களே முதல்ல இத படிங்க

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

கதறி கதறி அழும் வெள்ளி முதலீட்டாளர்கள்.. போட்ட காசு மொத்தமும் போச்சு..!! அடுத்தது என்ன..?

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!



Click it and Unblock the Notifications