PPF என்று சொல்லப்படுகிற, பொது வருங்கால வைப்பு நிதி அரசாங்கத்தால் மக்களுக்கு பயன்படும் வகையில் வழங்கப்படும் பாதுகாப்பான மற்றும் லாபகரமான முதலீட்டு திட்டமாகும். இதில் முதலீடு செய்வதன் மூலம் ஒரு நபர் நல்ல வருமானத்தை பெற முடியும். ஒவ்வொரு ஆண்டும் இது போன்ற சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை மத்திய அரசு மாற்றி அமைக்கும். அந்த வகையில் தற்பொழுது PPF திட்டத்திற்கு வழங்கப்படும் வட்டி விகிதங்கள் மற்றும் பிற விவரங்களை, இந்தக் கட்டுரையில் விரிவாகப் பார்ப்போம்.
PPF திட்டத்தின் வட்டி விகிதம் என்ன?: இந்திய அரசாங்கம் PPF மீதான வட்டி விகிதத்தை நிர்ணயிக்கிறது. இந்த வட்டி விகிதம் காலாண்டுக்கு ஒரு முறை மாறுபடும். 2024ஆம் ஆண்டின் ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டிற்கான, சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை அரசாங்கம் அறிவித்துள்ளது.

இந்தக் காலாண்டில் அனைத்து சிறுசேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதங்களையும் மாற்றாமல் வைத்திருக்க முடிவு செய்துள்ளது. அதாவது ஏப்ரல் 1 முதல் ஜூன் 30 வரையிலான வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லாமல் இருக்கும். PPF வட்டி விகிதம் தற்போது ஆண்டுக்கு 7.1 சதவீதமாக உள்ளது.
PPF முதிர்வு காலம்: PPF திட்டத்தின் முதிர்வு காலம் 15 ஆண்டுகள். PPF திட்டத்தில், ஆண்டுக்கு குறைந்தபட்சமாக ரூ.500 முதல் அதிகபட்சமாக ரூ 1.5 லட்சம் வரை முதலீடு செய்யலாம்.
PPF திட்டத்தின் கீழ் யார் கணக்கு திறக்க முடியாது?: HUF-கள், அறக்கட்டளைகள் அல்லது NRI பெயர்களில் PPF கணக்குகளைத் திறக்க முடியாது.
PPF வருமானம் எவ்வாறு கணக்கிடப்படுகிறது?: HDFC பேங்க் இணையதளத்தின்படி, உங்கள் PPF கணக்கின் வருமானத்தைக் கணக்கிடும்போது, நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய குறிப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
PPF திட்டத்தின் வட்டி: PPF திட்டத்தின் வட்டி மாதாந்திர அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட மாதத்தின் 5வது மற்றும் இறுதித் தேதியில் உள்ள குறைந்தபட்ச இருப்பு வட்டிக் கணக்கீட்டிற்குக் கருதப்படுகிறது. மே 5 ஆம் தேதி உங்கள் கணக்கில் இருப்பு 5,000 ரூபாய் என்றும், மே 30 ஆம் தேதி 10,000 ரூபாய் என்றும் வைத்துக் கொள்வோம். வட்டி 5,000 ரூபாயில் கணக்கிடப்படும்.
PPF வருமானத்தை அதிகரிக்க, உங்கள் மாதாந்திர முதலீட்டை மாதத்தின் 5 அல்லது அதற்கு முன் டெபாசிட் செய்ய முயற்சிக்க வேண்டும். உங்கள் PPF வருமானம் ஒரு நிதியாண்டின் இறுதியில் உங்கள் கணக்கில் வரவு வைக்கப்படும். மேலும், பிரிவு 80C இன் கீழ் அதிகபட்சமாக ரூ.1.5 லட்சம் வரையிலான வரிச் சலுகைகளை நீங்கள் பெறலாம்.
More From GoodReturns

SIP முதலீடு செஞ்சா கோடிகளில் பணம் கிடைக்குமா? நம்ம எல்லாரும் செய்யுற தப்பு இது தான்..!!

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

இந்த வாரம் 4 நாட்கள், அடுத்த வாரம் 3 நாட்கள்: பங்குச்சந்தை முதலீட்டாளர்களே முதல்ல இத படிங்க

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!

கதறி கதறி அழும் வெள்ளி முதலீட்டாளர்கள்.. போட்ட காசு மொத்தமும் போச்சு..!! அடுத்தது என்ன..?

செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் வட்டி உயர்த்தப்படுகிறதா? மக்களவையில் முக்கிய தகவலை வெளியிட்ட அரசு…!!

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!



Click it and Unblock the Notifications