அஞ்சலகத்தின் அசத்தலான பிபிஎஃப் கொடுக்கும் வாய்ப்பு.. யாரெல்லாம் பயன் பெறலாம்..!

இன்றைய காலகட்டத்தில் கடன் வாங்குவது மிக எளிதான விஷயமாக இருந்தாலும்,, வட்டி விகிதம் என்பது மிக அதிகமாக இருக்கும். அவற்றோடு பல கட்டணங்கள் என சேரும்போது இன்னும் அதிகமாக இருக்கும்.

ஆனால் வட்டி குறைவாக கடன் கிடைத்தால், அதுவும் விரைவில் கிடைக்கும் என்றால் அது நல்ல விஷயம் தானே.

இன்றைய காலகட்டத்தில் தனி நபர் கடன் என்றாலே நல்ல விஷயம் தான். உதாரணத்திற்கு தனி நபர் கடன் என்றாலே வட்டி விகிதம் குறைந்தபட்சம் 8%. அதற்கு செயல்பாட்டுக் கட்டணம், மற்ற கட்டணங்கள் என அனைத்தும் சேர்க்கும்போது இன்னும் அதிகரிக்கும். ஆனால் 1% வட்டி விகிததத்தில் கடன் என்பது கிடைக்குமா? அதனை எப்ப்டி பெறுவது? வாருங்கள் பார்க்கலாம்.

குறைவான வட்டியில் கடன்

குறைவான வட்டியில் கடன்


அஞ்சலகத்தின் பொது வருங்கால வைப்பு நிதி எனப்படும் பிபிஎஃப் திட்டம் வைத்திருப்பவர்கள் தான், இந்த திட்டத்தில் கடன் வாங்க முடியும். இது ஒரு சிறந்த முதலீட்டு திட்டம் மட்டும் அல்ல, சேமிப்பு கருவியும் கூட, எல்லாவற்றிற்றுக்கும் மேலாக அவசர காலகட்டத்தில் குறைந்த வட்டியில் கடன் பெற்றுக் கொள்ள உதவும் சிறந்த ஆப்சன் எனலாம். இதனாலேயே இந்த திட்டம் மக்கள் மத்தியில் பிரபலமாக உள்ளது.

வட்டி விகிதம் எவ்வளவு?

வட்டி விகிதம் எவ்வளவு?

இந்த பிபிஎஃப் கணக்கு வைத்திருப்பவர்கள் தொடங்கப்பட்டு 3 ஆண்டு முதல் 6 ஆண்டு வரையில் இந்த கணக்கிக்கு எதிராக கடன் பெற்றுக் கொள்ளலாம். இப்படி பெறும் கடனுக்கு வட்டி விகிதம் என்பது வெறும் 1% மட்டுமே. இது ஒரு குறுகிய கால கடனாகும். அதோடு மற்ற தனி நபர் கடன், அடமானக் கடன், நகைக் கடன் இப்படி பல கடன்களுடன் ஒப்பிடும்போது வட்டி என்பது மிக மிக குறைவு என்பதாலும், எளிதில் பெற முடியும் என்பதால் சிறந்த கடனாகவும் பார்க்கப்படுகிறது. எனினும் இந்த கடன் திட்டத்தினை இந்த திட்டத்தில் இணைந்தவர்கள் மட்டுமே பெற முடியும்.

அவசர தேவைக்கு பயன்படுத்தலாம்

அவசர தேவைக்கு பயன்படுத்தலாம்

கொரோனா போன்ற நெருக்கடியான காலகட்டத்தில் கடன் கிடைப்பதே பெரிய விஷயம். அப்படி நெருக்டியான அவசர காலகட்டத்தில் 1% வட்டியில் கடன் கிடைப்பது நினைத்துக் கூட பார்க்க முடியாத விஷயம். ஆக அப்படி பார்க்கையில் இது உண்மையில் அவசர தேவைக்கு மிக பயனுள்ள ஒரு விஷயமே. எனினும் இதனை மிக அவசர தேவைக்கு பயன்படுத்துவதே சிறந்தது. ஏனெனில் இது சிறந்த சேமிப்பு திட்டமாக பார்க்கப்படும் நிலையில், மிக அவசிய தேவை இல்லாமல் வாங்குவது கூடாது என்கின்றனர்.

நிபுணர்களின் கருத்து

நிபுணர்களின் கருத்து

நடைமுறையில் உள்ள பிற சில்லறை வங்கி கடனை, PPF வைப்புத் தொகைக்கு எதிரான கடனுடன் ஒப்பிட்டு கூறுகையில், PPF வைப்பு தொகைக்கு எதிரான கடன், நிச்சயமாக தனிநபர் கடன், நகைக்கடன் அல்லது வங்கி FD-க்கு எதிரான கடன் போன்ற கடன்களை விட மிகவும் மலிவானது. மிக விரைவில் பெற்றுக் கொள்ள முடியும்.

இது தான் புத்திசாலித்தனம்

இது தான் புத்திசாலித்தனம்

PPF வழங்கும் கடன் என்பது ஒருவரது வைப்புத் தொகை எவ்வளவு என்பதை பொறுத்தது. ஆனால் மற்ற வங்கிக் கடன்கள் என்பது ஒருவரது மாத வருமானத்திற்கு உட்பட்டது. ஆக ஒருவருக்கு நிதி நெருக்கடி ஏற்படும்போதும், தேவைப்படும் தொகையை PPF கணக்கு மூலம் கடன் மூலம் பெற முடியும் என்றால், அவர்கள் அதனை அந்த வாய்ப்பை பயன்படுத்துவது மிக புத்திசாலித்தனம் என வல்லுனர்கள் கூறுகின்றனர்.

எவ்வளவு கடன் கிடைக்கும்?

எவ்வளவு கடன் கிடைக்கும்?


பொதுவாக இந்த திட்டத்தில் நீங்கள் கடனுக்கு விண்ணப்பிக்கும் ஆண்டிற்கு, முந்தைய மற்றும் இரண்டாம் ஆண்டின் இறுதியில், உங்கள் கணக்கில் உள்ள நிலுவைத் தொகையில் இருந்து அதிகபட்சம் 25% வரை கடன் தொகையைப் பெறலாம்.
ஒருவர் 2021 ஏப்ரலில் (2021-2022) நிதியாண்டில்) கடன் பெற விண்ணப்பித்தால், மார்ச் 2021 இறுதியில் இருந்த தொகையில் 25% கடனாக பெற்றுக் கொள்ள முடியும்.

வட்டி அதிகமாகும்

வட்டி அதிகமாகும்

ஒரு வேளை வாடிக்கையாளர் கடனை சரியாக திரும்ப செலுத்தாத பட்சத்தில், வட்டி விகிதம் அதிகமாகும் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

தற்போதய காலத்தில் இந்த திட்டத்தினை அஞ்சலகம் மற்றும் வங்கிகளில் இணைந்து கொள்ளலாம். வங்கிகளின் நெட்பேங்கிங்கில் கூட இணைந்து கொள்ளும் வசதிகள் வந்து விட்டன.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+