வயதான காலத்தில் யாருக்கும் தொந்தரவு தராமல் தங்களுடைய செலவுகளை தாங்களே பார்த்துக் கொள்ள வேண்டும் என்று பெரும்பாலானோர் எண்ணுகின்றனர். இதற்காக சிலர் பார்த்து பார்த்து முதலீடு செய்யவும் ஆரம்பிக்கின்றனர். அப்படி ஓய்வூதிய நிதியை உருவாக்க ஏதுவான திட்டங்களில் ஒன்றுதான் பொது வருங்கால வைப்பு நிதி. PPF என்று சொல்லப்படும் இந்தத் திட்டம் ஒரு நீண்ட கால சிறுசேமிப்பு திட்டம் ஆகும்.
ஓய்வூதிய நிதியாக தங்களுக்கு தேவையான பணத்தை வைத்துக்கொண்டு, தங்கள் குழந்தைகளுக்காகவும் பணம் கொடுக்க முடியும். இப்படி பல நன்மைகளை வழங்குகிறது PPF திட்டம்.

குறைந்தபட்ச முதலீடு: PPF திட்டத்தில் ஒரு நிதியாண்டுக்கு குறைந்தபட்சமாக 500 முதல் முதலீடு செய்யலாம். அதிகபட்சமாக ரூ.1.50 லட்சம் வரையில் முதலீடு செய்ய முடியும். இந்தத் திட்டத்தில் முதலீடு செய்தால் உங்களுடைய 56-வது வயதில் வரியில்லாத வாழ்நாள் வருமானமாக ரூ. 39,000 பெறலாம். அதோடு ரூ. 93,00,000 ஓய்வூதிய கார்பஸையும் பெற முடியும். அதற்கு எப்படி சேமிக்க வேண்டும்? என்பது குறித்து பார்ப்போம்.
எப்படி முதலீடு செய்வது?: நீங்கள் PPF திட்டத்தில் முதலீடு செய்ய நினைத்தால் வங்கிகள் அல்லது தபால் அலுவலகங்களில் கணக்கு தொடங்கலாம். கணக்கைத் தொடர குறைந்தபட்ச தொகையை டெபாசிட் செய்ய வேண்டும். PPF முதலீட்டில் பெறப்படும் வட்டி மற்றும் வருமானம் ஆகிய இரண்டுக்குமே வரி கிடையாது. பழைய வரி முறையின் கீழ் வருமான வரி சட்டத்தின் 80C பிரிவின் படி ஒரு நிதியாண்டுக்கு ரூ.1.50 லட்சம் வரை பிபிஎஃப் டெபாசிட்களுக்கு வரிச் சலுகை பெற முடியும்.
வட்டி விகிதம்: தற்போது PPF திட்டத்திற்கு 7.1 சதவீதம் வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. PPF கூட்டு வட்டி முறையில் செயல்படும் திட்டமாகும். கூட்டு வட்டி என்றால் உங்களுடைய வட்டிக்கும் சேர்த்து வட்டி விதிக்கப்படும். இதைத்தான் கூட்டு வட்டி என்று கூறுகின்றனர். ஒரு வருடத்தில் அதிகபட்சமாக ரூ. 1.50 லட்சம் வரையில் முதலீடு செய்ய முடியும். ஒருவர் ஒரு நிதியாண்டில் எத்தனை முறை வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம்.
ஆனால் அதிகபட்ச வரம்பு ரூ. 1.5 லட்சம் மட்டுமே. இதைத் தாண்டி முதலீடு செய்ய முடியாது. இந்த முதலீட்டுத் தொகைக்கு ஒவ்வொரு நிதியாண்டின் மார்ச் 31-ஆம் தேதி அன்று வட்டி தொகை வழங்கப்படும். ஆனால் PPF திட்டத்தின் அதிகபட்ச வட்டி பலன்களைப் பெற ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் ஏப்ரல் 5-ஆம் தேதிக்குள் முதலீடு செய்து விட வேண்டும்.
முதிர்வு காலம்: PPF திட்டத்தின் முதிர்வு காலம் 15 ஆண்டுகள். முதிர்வு கால முடிந்தவுடன் கணக்கு வைத்திருப்பவர் தங்களுடைய வட்டி மற்றும் முழு முதலீடு ஆகியவற்றைத் திரும்பப் பெறலாம். அப்படி இல்லை என்றாலும் மீண்டும் 5 ஆண்டு காலத்திற்கு கணக்கை நீட்டிக்க முடியும். கணக்கை நீட்டித்தாலும் மீதமுள்ள 5 ஆண்டுகளுக்கு என்ன வட்டி விகிதம் பொருந்துகிறதோ? அந்த வட்டி கிடைக்கும். 5 ஆண்டு கால கட்டத்தில் உங்களுடைய முதலீட்டில் அதிகபட்சமாக 60% வரை ஒவ்வொரு நிதியாண்டிலும் 1 முறை பணம் திரும்பப் பெற முடியும்.
ரூ. 1.55 கோடி வருமானம் பெறுவது எப்படி?: ஒரு முதலீட்டாளர் ஒவ்வொரு ஆண்டும் ரூ.1.50 லட்சம் என்ற வீதத்தில் தொடர்ந்து 15 ஆண்டுகளுக்கு முதலீடு செய்கிறார் என்று வைத்துக் கொள்வோம். 15 ஆண்டுகளில் மொத்தமாக ரூ. 22,50,000-த்தை முதலீடு செய்திருப்பார். இதற்கு வட்டி வருமானமாக ரூ. 18,18,209 கிடைக்கும்.
இதனால் மொத்த கார்பஸ் ரூ. 40,68,209-ஆக இருக்கும். இப்போது மீண்டும் தல ஐந்து ஆண்டுகளுக்கு 3 முறை கணக்கை நீட்டிக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 1 முதல் 5-ஆம் தேதிக்குள் ரூ. 1.5 லட்சம் முதலீடு செய்கிறார் என்றால், 30 ஆண்டுகளில் மொத்த முதலீடு ரூ. 45,00,000-த்தை நெருங்கி இருக்கும். இதற்கு வட்டியாக ரூ. 1,09,50,911 கிடைக்கும். இதனால் மொத்த கார்பஸ் ரூ. 1,54,50,911-ஆக இருக்கும்.
தற்போது கிடைத்த மொத்த தொகையில் 60 சதவீதத்தை திரும்ப பெற்றால் திரும்ப பெறப்பட்ட தொகை ரூ.92,70,546.6-ஆக இருக்கும். மீதமுள்ள தொகை ரூ.61,80,364.4-ஆக இருக்கும். மீண்டும் மீதமிருக்கும் கார்பஸை 1 வருடம் கணக்கில் வைத்திருந்தால் அதற்கு 1 வருடத்திற்கு பிறகு மதிப்பிடப்பட்ட கார்பஸ் ரூ.66,19,170.27 ஆகவும், மதிப்பிடப்பட்ட வட்டி ரூ.4,38,805.8724 ஆகவும் இருக்கும்.
மாதம் ரூ. 39,000 வருமானம் பெறுவது எப்படி?: ஒவ்வொரு ஆண்டும் வட்டியை மட்டும் பெற வேண்டும். அப்படியானால் வருடத்திற்கு ரூ.4,69,961.099. மாதத்திற்கு ரூ.39,163.42. ஒரு முதலீட்டாளர் 25 வயது முதல் PPF திட்டத்தில் முதலீடு செய்யத் தொடங்கினால் 56 வயதிற்குள் இந்த இலக்குகளை எளிதில் அடைந்துவிடலாம்.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications