இன்றைய காலகட்டத்தில் சேமிப்பு என்பதன் அவசியத்தை பலதரப்பினரும் உணர ஆரம்பித்துள்ளனர். குறிப்பாக நிரந்தர வருமானம் தரக்கூடிய பல திட்டங்களிலும் முதலீடு செய்து வருகின்றனர். கொரோனாவின் வருகைக்கு பின்னர் எதில் முதலீடு செய்யலாம். எதில் லாபம் அதிகம் என யோசிக்க ஆரம்பித்துள்ளனர் பார்க்கலாம்?
குறிப்பாக பொது வருங்கால வைப்பு மற்றும் ஊழியர்களின் வருங்கால வைப்பு இது இரண்டில் எது சிறந்தது? எது லாபகரமானது வாருங்கள் பார்க்கலாம்.
வட்டி அதிகம்
நடப்பு நிதியாண்டில் பி எஃப்-கிற்கான வட்டி என்பது 8% ஆக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதே ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி திட்டங்களுக்கு அதிக வட்டியை பெற்று வருகின்றனர். குறிப்பாக பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்துடன் ஒப்பிடும்போது வட்டி அதிகம்.
வட்டி குறையலாம்
ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி அமைப்பு கூட்டமானது மார்ச் 25 மற்றும் மார்ச் 26 அன்று நடைபெறலாம் என தெரிகின்றது. ஆக இந்த கூட்டத்தில் தொழிலாளர்களுக்கான வட்டி விகிதம் குறித்தான அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது கடந்த 2021 - 22ம் நிதியாண்டில் 8.1% ஆக இருந்த நிலையில், இது நடப்பு நிதியாண்டில் 8% ஆக குறையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஊழியர்களுக்கு இது தான் சிறந்தது?
அப்படியே வட்டி குறைந்தாலுமே கூட வட்டி, அது பொருது வருங்கால வைப்பு நிதியினை விட அதிகம். ஆக இந்த ஊழியர்களை பொறுத்தவரையில் ஊழியர் வருங்கால வைப்பு நிதி திட்டமே சிறந்த ஆப்சன் எனலாம். ஆனால் சாதாரண பொதுமக்கள் இந்த திட்டத்தில் இணைய முடியாது.
யார் வேண்டுமானாலும் தொடங்கலாம்?
ஆனால் பிபிஎஃப் திட்டத்தினை பொறுத்தவரையில் இந்திய குடிமகனாகிய யார் வேண்டுமானாலும் தொடங்கிக் கொள்ளலாம். இந்த திட்டத்திலும் சந்தை அபாயம் என்பது இல்லாததால், பல தரப்பினரும் விரும்பும் ஒரு திட்டமாக பார்க்கப்படுகின்றது. இந்த திட்டத்தில் வரி சலுகையும் கிடைப்பதால், சம்பளதாரர்கள் மத்தியிலும் நல்லதொரு திட்டமாகவே உள்ளது.
முதலீடு எவ்வளவு?
முதலீட்டாளர்கள் தங்களின் வசதிகேற்ப மாத மாதமோ அல்லது காலாண்டுக்கு ஒரு முறையோ, அரையாண்டுக்கு ஒரு முறையோ, வருடத்திற்கு ஒரு முறையோ முதலீடு செய்து கொள்ளலாம். குறிப்பாக வருடத்திற்கு 1.5 லட்சம் ரூபாய் வரையில் அதிகபட்சமாக முதலீடு செய்து கொள்ளலாம்.
வட்டி எவ்வளவு?
இதில் தற்போதைய வட்டி விகிதம் 7.1% ஆகும். மொத்தத்தில் முதலீட்டாளர்களின் முதலீட்டுக்கு பாதுகாப்பினையும், நிரந்தர வருமானமாகவும் உள்ளது. இது ஒரு 15 ஆண்டுகால திட்டமாகும். இதில் வரிச்சலுகையும் உண்டு. இதில் குறைந்தபட்சம் 500 ரூபாயில் இருந்து முதலீடு செய்து கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications