உங்கள் முதலீடுகளை இருமடங்கு மும்மடங்காக, எந்த முதலீட்டு திட்டம் ஏற்றது. இதற்காக எந்த திட்டத்தில் முதலீடு செய்யலாம் என்பதைத் தான் இந்த பதிவில் பார்க்கவிருக்கிறோம்.
பொதுவாக பலருக்கும் இன்றைய காலகட்டத்தில் முதலீடு செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்து வந்தாலும், எந்த திட்டத்தில் முதலீடு செய்வது? எப்படி பணத்தைப் பெருக்குவது என்பது பெரும் கேள்வியாகவே உள்ளது.
கொரோனா காலகட்டத்தில் பங்குச் சந்தையானது வரலாறு காணாத அளவு சரிவினைக் கண்ட நிலையில், தற்போது தொடர்ந்து புதிய உச்சத்தை தொட்டு வருகின்றன. இந்த நிலையில் இப்போது எதில் முதலீடு செய்யலாம்? எதை முதலீடு செய்தால் எவ்வளவு காலத்தில் உங்களது முதலீடு இரு மடங்காக மும்மடங்காகும்.
எதிலும் தெளிவில்லை
இன்றைய காலகட்டத்தில் முதலீடுகள் குறித்து பல கட்டுரைகள், தகவல்கள், ஆலோசகர்கள் இருந்தாலும், இன்றும் பலருக்கு முதலீடு பற்றிய ஒரு தெளிவில்லாத நிலையே இருந்து வருகிறது. முதலீடு என்றாலே வங்கி வைப்பு நிதி இதுபோன்ற திட்டங்களையே பெருமளவில் நாடுகின்றனர். இதில் பெரிய அளவில் லாபம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
விதி 72 & விதி 114 என்ன சொல்கின்றது?
உங்களது முதலீடு எத்தனை ஆண்டுகளில் இருமடங்காக அதிகரிக்கும் என்பதை தெளிவாக கணக்கிட உதவும் ஒரு விதி 72 ஆகும். இதற்கு பெரிய கணக்கீடுகள் எதுவும் தேவையில்லை. முதலீட்டுத் திட்டத்தின் வட்டி விகிதத்தை மட்டும் கணக்கில் எடுத்துக்கொண்டு, எத்தனை ஆண்டுகளில் உங்களது முதலீட்டை இருமடங்காக அதிகரிக்கும் என்பதை எளிதாக கணக்கிட முடியும். இதே போன்று விதி 114 பயன்படுத்தி, உங்கள் முதலீடு எத்தனை ஆண்டுகளில் மூன்று மடங்கு அதிகரிக்கும் என்பதையும் கணக்கிடலாம்.
பொது வருங்கால வைப்பு நிதி திட்டம்
அந்தவகையில் நாம் இன்று பார்க்க இருக்கும் முதல் திட்டம் அஞ்சலகத்தின் பொது வருங்கால வைப்பு நிதி திட்டம். இந்த திட்டத்தில் தற்போது வட்டி விகிதம் 7.1 சதவிகிதமாகும். இந்த திட்டமானது 15 ஆண்டுகால திட்டமாகும். இதில் வரிச்சலுகையும் உண்டு. இதற்கான வட்டி விகிதத்தினை அரசு சந்தை நிலவரத்திற்கு ஏற்ப, ஒவ்வொரு காலாண்டிலும் மாற்றியமைக்கிறது. தற்போதைய வட்டி விகிதம் 7.1% ஆகும். இந்த திட்டத்தில் முதலீடு செய்யும்போது 10.14 வருடங்களில் உங்களது முதலீடு இருமடங்காக அதிகரிக்கும். இதே திட்டத்தில் தோராயமாக 16 ஆண்டுகளுக்கு பிறகு உங்களது முதலீடு மூன்றுமடங்காக அதிகரிக்கும்.
மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள்
உதாரணத்திற்கு உங்களது மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் வருடத்திற்கு 10% லாபம் தருகின்றது என வைத்துக் கொள்வோம். இதன் மூலம் உங்களது முதலீடு 7.2 ஆண்டுகளில் இருமடங்காகவும், 11.4 ஆண்டுகளில் மூன்று மடங்காகவும் அதிகரிக்கும். மியூச்சுவல் ஃபண்டுகளில் கிடைக்கும் தோராய லாபத்தினை வைத்து கணக்கிட்டு பார்க்கலாம்.
ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி
ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் தற்போது வட்டி விகிதம் 8.50% ஆகும். ஆக இந்த வட்டி விகிதத்தினை கணக்கில் எடுத்துக் கொண்டால் உங்களது முதலீடு 8.4 வருடங்களில் இருமடங்காக அதிகரிக்கும். இதே 13.4 வருடங்களில் இந்த முதலீடு மூன்று மடங்காக அதிகரிக்கும்.
வங்கி பிக்சட் டெபாசிட்
வங்கிகளில் செய்யப்படும் பிக்சட் டெபாசிட்களுக்கு வட்டி விகிதமானது, முன்னணி வங்கிகளில் அதிகபட்சமாக 5.75% வரை தான் வழங்கப்படுகின்றது. ஆக அதிகபட்ச வட்டியினை கணக்கில். எடுத்துக் கொண்டால் கூட, உங்களது டெபாசிட் இருமடங்காக அதிகரிக்க 12.52 வருடங்களாகும். இதே 19.82 வருடங்களில் மூன்று மடங்காக அதிகரிக்கும்.
More From GoodReturns

ரூ.666 இருந்தால் போதும் ரூ.1 கோடி இலக்கை எட்டலாம்…!! அட இவ்வளவு ஈஸியான வழி இருக்கா?

வங்கி கடனை விட ஈஸி! உங்கள் PPF பணத்தை வைத்தே கடன் பெறலாம் - புதிய விதிமுறைகள் என்ன?

முகேஷ் அம்பானிக்கு ரூ.1 லட்சம் கோடி நஷ்டம்; 2 நாட்களில் 6% சரிவடைந்த ரிலையன்ஸ் பங்கு மதிப்பு!!

EMI-யும் கட்டியாச்சு,லாபமும் பார்த்தாச்சு! ரூ8 கோடியை வைத்து ரூ10 கோடி வீட்டை வாங்கிய சாதுர்ய நபர்!

5 ஆண்டுகளில் ரூ.1 லட்சத்தை ரூ.25 லட்சமாக மாற்றிய பென்னி ஸ்டாக்: உங்க போர்ட்போலியோவுல இருக்கா?

பங்குச்சந்தை ஏறினாலும், இறங்கினாலும் கண்டுக்காதீங்க: சென்செக்ஸ் சொல்லி தரும் பாடம் இது தான்!!

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!



Click it and Unblock the Notifications