பொதுவாக அஞ்சலக திட்டங்களை பொறுத்தவரையில் பாதுகாப்பான, நம்பிக்கையான முதலீடாகவும் பார்க்கப்படுகிறது.
வருமானம் குறைவாக இருந்தாலும், நிரந்தர வருமானம் தரக்கூடிய ஒரு திட்டமாகவும் பார்க்கப்படுகிறது.
எனினும் பொதுவாக முதலீட்டு ஆலோசகர்கள் மிகப்பெரிய இலக்கினை அடைய மியூச்சுவல் ஃபண்டுகளையே பரிந்துரை செய்கின்றனர். இவை நீண்டகால நோக்கில் நல்ல லாபகரமான திட்டங்களாக பார்க்கப்படுகிறது.
PF Vs மியூச்சுவல் ஃபண்ட்
எனினும் மியூச்சுவல் ஃபண்டுகளில் சந்தை அபாயங்களும் இருப்பதால் அதுவும் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்களில் ஒன்றாக உள்ளது. ஆக பொது வருங்கால வைப்பு நிதி மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் இரண்டுமே இரு வேறு திட்டங்கள். ஆக இரண்டுமே சில விஷயங்களில் நன்மை தீமைகளை கொண்டுள்ளன. அதனை பற்றித் தான் இந்த பதிவில் பார்க்க இருக்கிறோம்.
பிபிஎஃப் சாதகங்கள்
பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தினை பொறுத்தவரையில், மியூச்சுவல் ஃபண்டுகளுடன் ஒப்பிடுகையில் பாதுகாப்பான திட்டமாக உள்ளது. இதில் சந்தை அபாயம் இல்லை. நிரந்தர வருமானம் தரக்கூடியது. அரசின் கீழ் செயல்படும் அஞ்சலக திட்டம். வரிச்சலுகை உண்டு.
லாபரகமான முதலீடுகள்
ஆனால் பிபிஎஃப் உடன் ஒப்பிடும்போது மியூச்சுவல் ஃபண்டுகள் நல்ல லாபகரமான முதலீடாகும். மியூச்சுவல் ஃபண்டுகளை பொறுத்த வரையில் எப்போது வேண்டுமானலும் முதலீடு செய்து கொள்ளலாம். எப்போது வேண்டுமானாலும் வெளியேறிக் கொள்ளலாம். ஆனால் பிபிஎஃப் திட்டத்தில் 15 ஆண்டுகள் தான் முதிர்வு காலமாகும்.
முதலீட்டு வரம்பு
பிபிஎஃப் திட்டத்தில் அதிகபட்சம் 1.5 லட்சம் ரூபாய் தான் முதலீடு செய்து கொள்ள முடியும். ஆனால் மியூச்சுவல் ஃபண்டுகளில் இந்த அதிகபட்ச இலக்கு என்பது இல்லை. அதேபோல் மியூச்சுவல் ஃபண்டுகளில் பல வகை உண்டு. அதில் உங்களது இலக்கிற்கு ஏற்ப ஃபண்டினை தேர்வு செய்து முதலீடு செய்யலாம்.
வரி சலுகையில் எது பெஸ்ட்
மியூச்சுவல் ஃபண்டுகளை பொறுத்தவரையில் பெரிதாக வரிச் சலுகை கிடையாது. ஆனால் பிபிஎஃப் திட்டத்தில் 1.5 லட்சம் ரூபாய்க்கு 80சி பிரிவின் கீழ் வரிச்சலுகை கிடைக்கும். முதிர்வு தொகைக்கும் வரிச்சலுகை உண்டு. மியூச்சுவல் ஃபண்டுகளில் சில ஃபண்டுகளில் மட்டுமே வரிச்சலுகை கிடைக்கிறது. எனினும் இதில் சந்தை அபாயங்கள் உண்டு.
எது பெஸ்ட்
நீண்டகால நோக்கில் மிகப்பெரிய கார்ப்பஸினை அடைய மியூச்சுவல் ஃபண்டுகளே சிறந்த ஆப்சனாகும். இதனை பிபிஎஃப் திட்டத்தில் பெற முடியாது. ஆக மிகப்பெரிய இலக்குகளை அடைய சற்று ரிஸ்க் எடுத்து தான் ஆக வேண்டும் என நிபுணர்கள் கூறுகின்றனர். இல்லை என்னால் பெரிய ரிஸ்க் எடுக்க முடியாது என நினைப்பவர்கள் 30/70 அல்லது 50/50 என பிரித்து முதலீடு செய்யலாம். இது ஓரளவுக்கு கைகொடுக்கலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications