ரூ.3000 முதலீடு செய்து ரூ.44 லட்சம்.. பிபிஎஃப் Vs என்பிஎஸ் எது சரியான திட்டம்.. எதில் முதலீடு..?

நீண்டகால நோக்கில் எனும் போது அரசின் சிறுசேமிப்பு திட்டங்கள் மிக பாதுகாப்பான முதலீடாக பார்க்கப்படுகிறது. இந்த திட்டங்கள் மூலம் லட்சக் கணக்கில் எப்படி கார்ப்பஸினை உருவாக்குவது?

எந்த திட்டத்தில் முதலீடு செய்யலாம்? எத்தனை ஆண்டுகள் முதலீடு செய்வது? ஓய்வூகாலத்திற்கு ஏற்ற திட்டம் எது? வாருங்கள் பார்க்கலாம்.

முதலில் நாம் இன்று பார்க்கவிருப்பது என்பிஎஸ் எனப்படும் தேசிய ஓய்வூதிய திட்டம். இது முழுக்க முழுக்க ஒரு ஓய்வூதிய திட்டமாகும். இதே பொது வருங்கால வைப்பு நிதியும் பல மக்கள் விரும்புகின்றனர். இது முதிர்வுகாலத்திற்கு பிறகும் இந்த திட்டத்தினை நீட்டிக்க வேண்டும். ஆக மொத்தத்தில் ஓய்வுகாலத்திற்கு ஏற்ற திட்டம் எது வாருங்கள் பார்க்கலாம்.

 கடன் சந்தையில் முதலீடு

கடன் சந்தையில் முதலீடு

தேசிய ஓய்வூதிய திட்டத்தினை பொறுத்தவரையில் ஒரு முழு ஓய்வூதிய திட்டமாகும். இந்த திட்டத்தில் 60 வயதிற்கு பிறகு ஓய்வூதியம் பெற்றுக் கொள்ளலாம். இதே பொது வருங்கால வைப்பு நிதி திட்டம் அப்படியில்லை. உங்களது ஓய்வுகாலம் வரையில் நீங்கள் ஆக்டிவ்வாக வைத்துக் கொள்ள வேண்டும். பிபிஎஃப்-பினை பொறுத்தவரையில் 100% தொகையினை பத்திரம் உள்ளிட்ட சந்தைகளில் முதலீடு செய்யலாம்.

 என்பிஎஸ்- எதில் முதலீடு?

என்பிஎஸ்- எதில் முதலீடு?

இதே என்பிஎஸ் திட்டத்தில் கடன் மற்றும் ஈக்விட்டி சந்தைகளில் முதலீடு செய்யலாம். குறிப்பாக ஈக்விட்டிகளில் 75% வரையில் முதலீடு செய்து கொள்ளலாம். இது ரிஸ்க் அதிகமானது என்றாலும் வருமானம் அதிகம். ரிஸ்க் எடுக்க விரும்ப்பாத முதலீட்டாளர் 50: 50 விகிதத்தில் முதலீட்டினை செய்யலாம். இதன் மூலம் நீண்டகால நோக்கில் 10% வரையில் வருமானம் பெறலாம்.

மாதாமாதம் ஓய்வூதியம்

மாதாமாதம் ஓய்வூதியம்


என்பிஎஸ் திட்டத்தில் குறைந்தபட்சம் வருடாந்திர தொகைக்காக 40% தொகையினை வைத்தாக வேண்டும். இதன் மூலம் உங்களது ஓய்வுகாலத்தில் உங்களால் பென்ஷனை பெற முடியும். இந்த 40% நிலுவையின் மூலமே உங்கள் ஓய்வு காலத்திற்கு பிறகு மாத ஓய்வூதியமாக பெற முடியும்.

 வரிச்சலுகை கிடைக்கும்

வரிச்சலுகை கிடைக்கும்

மேற்கண்ட என்பிஎஸ், பிபிஎஃப் ஆகிய இரு சேமிப்பு திட்டங்களிலுமே வரிச்சலுகை உண்டு. இதன் மூலம் வருடத்திற்கு 1.5 லட்சம் ரூபாய் வரிச்சலுகை கிடைக்கும். என்பிஎஸ் திட்டத்தினை பொறுத்தவரையில் முதிர்வுகாலம் கிடையாது. ஆனால் பிபிஎஃப் திட்டம் 15 ஆண்டுகள் முதிர்வுகாலம் ஆகும்.

 பிபிஎஃப் எப்போது பெஸ்ட்

பிபிஎஃப் எப்போது பெஸ்ட்

எனினும் பிபிஎஃப் திட்டத்தில் முதிர்வுக்கு பிறகு 5 ஆண்டு தொகுப்புகளாக மீண்டும் நீட்டித்துக் கொள்ள முடியும். நிபுணர்கள் இவ்வாறு நீட்டிக்க முடியும் என்றால் இந்த பிபிஎஃப் திட்டத்தில் முதலீடு செய்யலாம் என கூறுகின்றனர். இதுவே மாதாமாதம் ஓய்வூதியம் வேண்டும் என்று நினைப்பவர்கள் என்பிஎஸ் திட்டத்தினை தேர்ந்தெடுக்கலாம்.

 மிகப்பெரிய கார்ப்பஸ்

மிகப்பெரிய கார்ப்பஸ்

உதாரணத்திற்கு உங்களுக்கு 30 வயதாகிறது என வைத்துக் கொள்வோம். நீங்கள் அடுத்த 30 வருடங்களுக்கு முதலீடு செய்கிறீர்கள் என வைத்துக் கொள்வோம். இதன் மூலம் 60 வயதிற்கு பிறகு உங்களது கையில் மிகப்பெரிய கார்ப்பஸ் தொகையானது கிடைக்கும். இது ஓய்வு காலத்திற்கு பயன்படும்.

 பிபிஎஃப் திட்டத்தில் மாதம் ரூ.3,000

பிபிஎஃப் திட்டத்தில் மாதம் ரூ.3,000

வயது - 30 வருடம்
முதலீட்டு காலம் - 30 ஆண்டுகள்
மாத முதலீட்டு தொகை - ரூ.3000
வருட வருமானம் - 7.1%
மொத்த முதலீடு - ரூ.10.80 லட்சம்
முதிர்வு மதிப்பு - ரூ.37.08 லட்சம்

நீங்கள் மாதம் 3000 ரூபாய் வீதம் வருடத்திற்கு 36,000 ரூபாய், 30 வருடங்களுக்கு முதலீடு செய்கிறீர்கள் என வைத்துக் கொள்வோம். தற்போதைய நிலவரப்படி வட்டி விகிதம் 7.1%. நீங்கள் 30 வருடங்கள் கழித்து 37,08,219 ரூபாய் பெறுவீர்கள்.

வயது - 30 வருடம்
முதலீட்டு காலம் - 30 ஆண்டுகள்
மாத முதலீட்டு தொகை - ரூ.3000
வருட வருமானம் - 8.0%
மொத்த முதலீடு - ரூ.10.80 லட்சம்
முதிர்வு மதிப்பு - ரூ.44.52 லட்சம்

இந்த ஓய்வு திட்டத்தில் நீங்கள் முதலீடு செய்தால், கண்டிப்பாக 40% தொகையினை வருடாந்திர தொகையாக வைத்திருக்க வேண்டும். 17.81 லட்சம் ரூபாய் வருடாந்திர திட்டத்திலும், 26.71 லட்சம் ரூபாய் ஒரே தொகையாகவும் பெற முடியும். இதன் மூலம் மாதாமாதம் 11,874 ரூபாய் பென்ஷனாக பெற முடியும். வட்டி விகிதம் 8% வருமானம் கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 என்பிஎஸ் திட்டத்தில் மாதம் ரூ.3,000

என்பிஎஸ் திட்டத்தில் மாதம் ரூ.3,000

வயது - 30 வருடம்
முதலீட்டு காலம் - 30 ஆண்டுகள்
மாதம் முதலீட்டு தொகை - ரூ.3000
வருட வருமானம் - 8.0%
மொத்த முதலீடு - ரூ.10.80 லட்சம்
முதிர்வு மதிப்பு - ரூ.44.52 லட்சம்

இந்த ஓய்வு திட்டத்தில் நீங்கள் முதலீடு செய்தால், கண்டிப்பாக 40% தொகையினை வருடாந்திர தொகையாக வைத்திருக்க வேண்டும். 17.81 லட்சம் ரூபாய் வருடாந்திர திட்டத்திலும், 26.71 லட்சம் ரூபாய் பெரிய ஒரே தொகையாகவும் பெற முடியும். இதன் மூலம் மாத மாதம் 11,874 ரூபாய் பென்ஷனாக பெற முடியும். வட்டி விகிதம் 8% வருமானம் கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 எந்த திட்டம் சிறந்தது?

எந்த திட்டம் சிறந்தது?

இரண்டுமே அரசின் திட்டங்களாக இருந்தாலும், ஓய்வு காலத்திற்கு ஏற்ற திட்டம் என்பது என்பிஎஸ் எனப்படும் தேசிய ஓய்வூதிய திட்டமாகவே பார்க்கப்படுகிறது. இது ஓய்வு காலத்தில் மாத மாதம் பென்ஷன் தொகை பெற முடியும். இதே பிபிஎஃப் திட்டத்தில் பென்ஷன் கிடையாது. என்பிஎஐ காட்டிலும் வருமானம் குறைவு. எனினும் பெரும் தொகையாக கிடைக்கும். இது வீடு கட்ட, திருமணம் போன்ற திட்டங்களுக்காக திட்டமிட்டு முதலீடு செய்யலாம். ஆக உங்களின் இலக்கினை தீர்மானித்துக் கொண்டு அதற்கேற்ப முதலீடு செய்யலாம்.

 இவ்விரு கணக்கினையும் எவ்வாறு தொடங்கலாம்?

இவ்விரு கணக்கினையும் எவ்வாறு தொடங்கலாம்?

அரசின் இவ்விரு திட்டங்களையும் அஞ்சல் அலுவலத்திலேயே தொடங்கிக் கொள்ளலாம்.

பிபிஎஃப் திட்டத்தில் இடையில் 7வது நிதியாண்டில் இருந்து இடையில் ஓரளவு தொகையினை எடுக்கலாம். என்பிஎஸ் திட்டத்தில் தவிர்க்க முடியாத காரணங்களுக்காக மட்டுமே இடையில் எடுக்கலாம்.

பிபிஎஃப் திட்டத்தில் என்பிஎஸ் திட்டத்தினை விட வட்டி குறைவு. என்பிஎஸ் திட்டத்தில் வட்டி அதிகம் என்றாலும் அது ஓய்வுகால நன்மைகளுக்காக பார்க்கப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+