நாளுக்கு நாள் வளர்ந்து வரும் தொழில்நுட்ப வசதி மக்களின் அன்றாட வேலைகளை எளிதாக்கியுள்ளது என்றாலும் அதோடு தொடர்புடைய மோசடிகளும் அதிகரித்து வருகின்றன. உதாரணமாக டிஜிட்டல் பேங்க் சேவைகள் மற்றும் யுபிஐ பரிவர்த்தனைகளின் அதிகரிப்பு காரணமாக சைபர் குற்றங்கள் சந்தேகத்திற்கு இடமில்லாத வகையில் நடந்து வருகிறது. சைபர் கிரைமின் மிகவும் பொதுவான ஒன்று என்றால் OTP மோசடி. இந்த மோசடிக்கு இரையாகாமல் தவிர்க்க சில விஷயங்களைப் பின்பற்ற வேண்டும்.
OTP மோசடி எப்படி நடக்கிறது?: மக்களிடமிருந்து முக்கிய தகவல்களை தெரிந்து கொள்ளும் விதமாக மோசடிக்காரர்கள் பல்வேறு யுக்திகளை பயன்படுத்துகின்றனர். அதில் ஒன்றுதான் வங்கி அதிகாரிகள் போல காட்டிக் கொண்டு மோசடி செய்வது. இதில் மோசடி செய்பவர்கள் வங்கி அல்லது பிற நிதி நிறுவனத்தின் ஊழியர்கள் போல நடித்து மக்களை ஏமாற்றி பேங்க் அக்கவுண்ட் நம்பர், UPI பின் நம்பர் போன்ற முக்கியமான விவரங்களை கேட்டு தெரிந்து கொள்கின்றனர்.

ஆள்மாறாட்டம் செய்தல்: சில சூழ்நிலைகளில் சைபர் குற்றவாளிகள் தனிப்பட்ட தகவல்களை பகிரும்படி அச்சுறுத்துவதற்காக போலீஸ் அதிகாரிகள் போல காட்டிக் கொள்கின்றனர். சமீபத்தில் நடந்த பல நிகழ்வுகள் இதற்கு உதாரணமாய் அமைந்தன. பார்சலில் போதைப்பொருள் வந்திருப்பதாக கூறி பாதிக்கப்படுபவர்களை மிரட்டி பயத்திற்கு உள்ளாக்கி அவர்களிடமிருந்து பணத்தை பறிப்பது, தனிப்பட்ட தகவல்களை கேட்பது என இந்த மோசடிகள் இன்றைய நாள் வரை குறைந்த பாடில்லை.
எந்த ஒரு பிரச்சனைக்கும் ஆன்லைன் தீர்வு கிடையாது. இதேபோன்று போதைப்பொருள் அனுப்பப்பட்டதாக கூறி உங்களுக்கு அழைப்பு வந்தாலோ அல்லது உங்களை மிரட்டி பணம் கேட்டாலோ கண்டிப்பாக நீங்கள் அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளிக்க வேண்டும். எந்த ஒரு பண பரிவர்த்தனையும் செய்வதற்கு முன்பு சிறிது சிந்தித்து செயல்பட்டால் பெரிய அளவிலான நிதி இழப்புகள் ஏற்படாமல் தவிர்க்க முடியும்.
தெரியாத அழைப்புகளைத் துண்டிக்கவும்: உங்களுக்கு அறிமுகம் இல்லாத நம்பரிலிருந்து அழைப்பு வந்தால் அவர்களிடம் எந்தவித விவரங்களையும் பகிர்ந்து கொள்ள வேண்டாம். OTP-கள், கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு நம்பர்கள், கிரெடிட் கார்டின் எக்ஸ்பயரி தேதி, CVV நம்பர் போன்றவற்றை யாருடனும் போன் மூலமாக அல்லது SMS மூலமாக பகிர்வதைத் தவிர்க்கவும்.
அழைப்புகள் குறித்து எச்சரிக்கையாக இருங்கள்: உங்களுக்கு கேஷ்பேக் அல்லது தள்ளுபடிகளை வழங்குவதாக கூறும் எந்தவித அழைப்புகளுக்கும் முன்னுரிமை அளிக்க வேண்டாம். இவை பெரும்பாலும் வங்கியின் தகவல்களை தெரிந்து கொள்ளும் விதமாக வரலாம். மேலும் உங்களை ஏமாற்றுவதற்கான முயற்சியாக இருக்கலாம்.
விவரங்களை பகிர்வதற்கு முன்பு நம்பகத்தன்மையை சரி பார்க்கவும்: உங்கள் வங்கி ஒருபோதும் உங்களிடமிருந்து அக்கவுண்ட் விவரங்களை கேட்காது. வங்கியின் டேட்டாபேஸில் உங்களைப் பற்றிய அனைத்து விவரங்களும் இருக்கும்போது. அவை ஏன் உங்களிடம் இது போன்ற விவரங்களை கேட்க வேண்டும் என்று சற்று சிந்தித்துப் பாருங்கள். எனவே தனிப்பட்ட தகவல்களை யாரேனும் கேட்டால் அவை மோசடிக்காரரின் வலையாக இருக்கலாம் என்பதைத் தெரிந்து நடந்து கொள்ளுங்கள்.
இன்றைய டிஜிட்டல் உலகில் OTP மோசடிகள் அதிகரித்து வருவது கவலை அளிக்கும் விதமாக உள்ளது. எனவே எச்சரிக்கவுடன் இருப்பதன் மூலம் தேவையற்ற நிதி இழப்புகளில் இருந்து தப்பிக்க முடியும். அதிலும் சில நாட்களுக்கு முன்பு OTP இல்லாமலும் மோசடி நடக்கிறது என்ற செய்தி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. நாளுக்கு நாள் வளர்ந்து வரும் தொழில்நுட்ப உதவி மோசடிக்காரர்களுக்கும் புதுப்புது யுக்திகளை கண்டுபிடிக்க உதவுகிறது. எனவே உங்களுடைய தகவல்களை நீங்கள் தான் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். நெட் பேங்கிங் பயன்படுத்தும் போது நீங்கள் உள் நுழையும் இணையதளம் அதிகாரப்பூர்வமானதுதானா என்பதை ஒன்றுக்கு இருமுறை சரிபார்த்துக் கொள்ளுங்கள்.
தேவையற்ற லிங்குகளை கிளிக் செய்வதை தவிர்க்கவும்: பெரிய பெரிய இகாமர்ஸ் தளங்களிலிருந்து அதிக அளவிலான தள்ளுபடி வழங்குவதாக கூறி அவ்வப்போது வாட்ஸப்பில் நமக்கு பகிரப்படும் மெசேஜ்கள் உண்மையானதா என்பதை அந்த லிங்கை வைத்தே கண்டுபிடித்துவிடலாம். அதிகாரப்பூர்வ இணையதளத்தின் முகவரியும் உங்களுக்கு வாட்ஸப்பில் வந்திருக்கும் இணையதள முகவரியும் ஒன்றாக இருக்கிறதா? என்பதை தெரிந்து கொள்ளுங்கள். அப்படி இல்லை எனும் பட்சத்தில் அவை போலியானதாக இருக்கலாம்.
More From GoodReturns

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்



Click it and Unblock the Notifications