மாதம் மாதம் குறிப்பிட்ட அளவு தொகையை சேமிப்பது அனைவருக்கும் முக்கியம். ஏனெனில் எதிர்பாராத மருத்துவச் செலவுகள் ஏற்பட்டாலோ அல்லது திடீரென ஏற்படும் செலவுகளை எதிர் கொள்ளவோ கண்டிப்பாக நம்மிடம் சிறிய அளவிலாவது சேமிப்பு இருக்க வேண்டும். ஆனால் நம்மில் பலர் இதை செய்வதே இல்லை. சம்பளம் பெறுபவர்களாக இருந்தாலும் சிலர் அப்படியே அந்த தொகை முழுவதையும் செலவு செய்துவிடுகின்றனர். இதனால் எதிர்கால இலக்குகளை அடைய தாமதம் ஏற்படுகிறது. இந்தப் பதிவில் மாதம் ரூ.5,000 சேமிப்பதன் மூலம் எப்படி ரூ.16 லட்சத்தை உருவாக்க முடியும்? என்பது குறித்து பார்ப்போம்.
போஸ்ட் ஆபீஸ்களில் வழங்கப்படும் பொது வருங்கால வைப்பு நிதித் (PPF) திட்டம் நீண்ட காலமாக பாதுகாப்பான முதலீடாக மக்களிடையே தனித்து நிற்கிறது. நீண்ட காலத்திற்கு பெரிய இலக்குகளுக்காக சேமிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள், இந்த திட்டத்தில் முதலீடு செய்யலாம். இது முழுக்க முழுக்க அரசாங்கத் திட்டம் என்பதால் உங்களுடைய முதலீட்டுக்கு எந்தவித ஆபத்தும் ஏற்படாது. மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்வது சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை. ஆனால் போஸ்ட் ஆபீஸ் முதலீடுகளோ அதற்கு நேர் மாறாக உத்தரவாதமான வருமானத்தை வழங்குகிறது.

PPF திட்டத்திற்கான வட்டி விகிதம்: PPF திட்டத்திற்கு தற்போது 7.1 சதவீத வட்டி விகிதத்தை மத்திய அரசு நிர்ணயித்துள்ளது. பொதுவாக போஸ்ட் ஆபீஸ் சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் காலாண்டுக்கு ஒரு முறை மாற்றியமைக்கப்படும். இது பல்வேறு காரணங்கள் மற்றும் சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு அரசால் மாற்றியமைக்கப்படுகிறது. நாளுக்கு நாள் பணவீக்கம் அதிகரித்துக்கொண்டே செல்வதால் தங்களுக்கென ஒரு சிறு முதலீட்டை ஒவ்வொருவரும் வைத்திருப்பது அவசியம்.
அதற்கு கண்டிப்பாக இந்த PPF திட்டம் உதவிகரமானதாக இருக்கும். ஏனெனில் இந்தத் திட்டத்தில் குறைந்தபட்ச முதலீடாக 500 ரூபாய் முதல் முதலீடு செய்யலாம். அதாவது ஒரு நிதியாண்டுக்கு ரூ.500 ரூபாய் முதல் முதலீடு செய்யலாம். இந்தத் திட்டத்தின் அதிகபட்ச முதலீட்டு தொகை ரூ.1.5 லட்சம். அதற்கு மேல் உங்களால் முதலீடு செய்ய முடியாது.
முதிர்வுக் காலம்: PPF திட்டத்தின் முதிர்வுக் காலம் 15 ஆண்டுகள். நீங்கள் கணக்கில் வைத்திருக்கும் தொகையின் அடிப்படையில் வட்டி வருமானம் வழங்கப்படுகிறது. ஒரு மாதத்தின் 5-வது நாள், அதாவது ஐந்தாம் தேதியிலிருந்து மாதத்தின் இறுதி நாள் வரையிலான காலகட்டத்தில் உங்கள் கணக்கில் இருக்கும் குறைந்தபட்ச தொகையின் அடிப்படையில் வட்டி விகிதம் வழங்கப்படும்.PPF கணக்கு தொடங்குவதற்கான தகுதி: எந்த ஒரு இந்தியக் குடிமகனும் PPF திட்டத்தில் முதலீடு செய்யலாம்.
அக்டோபர் முதல் வரும் புதிய விதி: PPF கணக்குகளை தவறான முறையில் பயன்படுத்துபவர்களுக்காக அரசாங்கம் புதிய விதிகளை வெளியிட்டுள்ளது. இந்த விதிகள் அக்டோபர் 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளன. ஒழுங்கற்ற முறையில் திறக்கப்படும் சிறு சேமிப்பு கணக்குகளை சரி செய்யும் பொருட்டு இந்த புதிய விதிகளை அரசாங்கம் அமல்படுத்தியுள்ளது.
சிறுவர்களின் பெயரில் PPF கணக்கு தொடங்கப்பட்டிருந்தால்.. அவர்களுக்கு போஸ்ட் ஆபீஸ் சேவிங்ஸ் அக்கவுண்ட் வட்டி விகிதங்களே பொருந்தும். குழந்தை 18 வயதை அடைந்த பிறகு அவை PPF கணக்காக மாற்றப்படும். 18 வயதிற்கு பிறகு தான் PPF திட்டத்தின் முதிர்வு காலம் கணக்கிடப்படும். கூடுதலாக, ஒரு நபர் பல PPF கணக்குகளை வைத்திருந்தால், திட்டத்தின் வட்டி விகிதம் முதன்மைக் கணக்கிற்கு மட்டுமே பொருந்தும்.
PPF திட்டத்தில் மாதத்திற்கு ரூ.5000 ரூபாயை முதலீடு செய்தால் எவ்வளவு லாபம்?: PPF திட்டத்தில் மாதத்திற்கு ரூ.5000 ரூபாயை முதலீடு செய்தால் ஒரு வருடத்திற்கு 60,000 ரூபாய். இதே முதலீட்டைத் தொடர்ந்து செய்து வந்தால் 15 வருடங்கள் கழித்து ரூ.9 லட்சம் ரூபாயை முதலீடு செய்திருப்பீர்கள். இந்த ஒட்டுமொத்த முதலீட்டு காலத்திற்கும் 7.1% வட்டி வழங்கப்பட்டால் 15 வருடங்கள் கழித்து மொத்தமாக ரூ.7,27,284 வட்டி கிடைக்கும். அப்படியானால் முதிர்வு தொகை ரூ.16,27,2084 ரூபாயாக இருக்கும்.
More From GoodReturns

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications