பொது வருங்கால வைப்பு நிதித் திட்டம் (PPF) மத்திய அரசாங்கத்தால் வழங்கப்படும் ஆபத்து இல்லாத முதலீடாகும். இந்த சிறு சேமிப்பு திட்டம் நீண்ட கால வருமானத்தை வழங்குவதற்காக கொண்டு வரப்பட்டது. தற்போது PPF திட்டத்திற்கு 7.1 சதவீத வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. ஓய்வூதியத்திற்காக சேமிக்க வேண்டுமானாலும் சரி, குழந்தை பிறந்த உடனே அவர்களுடைய திருமணத்திற்காக சேமிக்க வேண்டுமானாலும் சரி, குழந்தைகளின் கல்விக்காக சேமிக்கவும் இந்த PPF திட்டம் உதவிகரமானதாக இருக்கும். இந்தப் பதிவில் PPF திட்டத்தின் மூலம் ரூ.41 லட்சம் வருமானம் பெறுவது எப்படி? என்பதைப் பார்ப்போம்.
நாளுக்கு நாள் பணவீக்கம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால் நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் தங்களுக்கு என்று ஒரு சிறு முதலீட்டையாவது வைத்திருக்க வேண்டும். இதுபோன்ற சிறு முதலீடும் பிற்காலத்தில் பேருதவியாக இருக்கும். அதேபோல இந்த திட்டத்திற்கு ஒன்றும் பெரிய அளவிலான முதலீடு தேவைப்படாது.

ஒரு வருடத்திற்கே 500 ரூபாய் முதலீட்டில் PPF கணக்கைத் தொடங்கலாம். வருடத்திற்கு 500 ரூபாய் செலவு செய்வது தற்போது உள்ள சூழலில் யாருக்கும் அவ்வளவு பெரிய விஷயமாக இருக்காது. எனவே இந்தத் திட்டத்தில் குறைந்தபட்ச முதலீடாக 500 ரூபாயில் கணக்கு தொடங்கலாம். ஒரு நிதியாண்டுக்கு 1.5 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்யலாம். ஆனால் அதற்கு மேல் முதலீடு செய்ய முடியாது.
முதிர்வுக் காலம்: PPF திட்டத்தின் முதிர்வுக் காலம் 15 ஆண்டுகள். நீங்கள் கணக்கில் வைத்திருக்கும் தொகையின் அடிப்படையில் வட்டி வருமானம் வழங்கப்படுகிறது. ஒரு மாதத்தின் 5-ஆம் தேதியிலிருந்து மாதத்தின் இறுதி நாள் வரையிலான காலகட்டத்தில் உங்கள் கணக்கில் இருக்கும் குறைந்தபட்ச தொகையின் அடிப்படையில் வட்டி விகிதம் வழங்கப்படும்.PPF கணக்கு தொடங்குவதற்கான தகுதி: எந்த ஒரு இந்தியக் குடிமகனும் PPF திட்டத்தில் முதலீடு செய்யலாம்.
PPF திட்டத்தில் ரூ.41 லட்சம் வருமானம் பெறுவது எப்படி?: PPF திட்டத்தில் மாதம் தோறும் ரூ.12,500-ஐ முதலீடு செய்தால் வருடத்திற்கு 1,50,000 ரூபாய் முதலீடு செய்திருப்பீர்கள். அப்படியானால் 15 வருட முடிவில் 22,50,000 ரூபாய் முதலீடு செய்திருப்பீர்கள்.
இந்த ஒட்டுமொத்த முதலீட்டு காலத்திற்கும் 7.1% வட்டி விகிதம் வழங்கப்பட்டால், வட்டி வருமானமாக 18,18,209 ரூபாயை பெற்றுக் கொள்ளலாம். இதன் மூலம் மொத்த முதிர்வு தொகை 40,68,29 ரூபாய் கிடைக்கும்.
அரசாங்கத்தால் வழங்கப்படும் திட்டம் என்பதால் உங்களுடைய முதலீடு பாதுகாப்பாக இருக்கும். பொது வருங்கால வைப்பு நிதி திட்டம் வரி செலுத்துவோர் மத்தியில் மிகவும் பிரபலமானது. இதன் பிரபலத்திற்கு முக்கிய காரணம் PPF திட்டத்திற்கு வழங்கப்படும் வரி விலக்கு தான். தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் 80சி பிரிவின் கீழ் PPF திட்டத்திற்கு ஒரு நிதியாண்டுக்கு 1.5 லட்சம் ரூபாய் வரை வரிவிலக்கு வழங்கப்படுகிறது. மேலும் முதலீட்டிலிருந்து கிடைக்கும் வட்டி மற்றும் தொகை முற்றிலும் வரி இல்லாதது.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications