பொது வருங்கால வைப்பு நிதி (PPF) திட்டம் வரி சேமிப்பாளர்களுக்கு விருப்பத் தேர்வாக இருந்து வருகிறது. பாதுகாப்பான மற்றும் உறுதியான வருமானம் ஆகியவற்றுக்கு பெயர் பெற்றது. நீண்ட கால நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு இந்த திட்டத்தில் முதலீடு செய்யலாம். PPF திட்டத்தின் முக்கிய நன்மைகளில் ஒன்று உங்களுடைய முதலீட்டை எளிதில் இரட்டிப்பாக்கலாம். இந்தப் பதிவில் அது குறித்த விவரங்களைப் பார்ப்போம்.
முதிர்வுக் காலம்: PPF திட்டம் என்பது 15 வருடங்கள் முதிர்வு காலத்தைக் கொண்ட அரசாங்கத் திட்டமாகும். இதற்கு தற்போது 7.1 சதவீத வருடாந்திர வட்டி வழங்கப்படுகிறது. PPF திட்டத்தில் கூட்டு வட்டியின் மூலம் வருமானம் பெற முடியும். வரி இல்லாத வருமானம் என்பதால் வரி சேமிக்க விரும்பும் முதலீட்டாளர்களுக்கு பிபிஎஃப் ஏற்றது.

பிபிஎஃப் திட்டத்தின் நன்மைகள்: ஒவ்வொரு ஆண்டும் நீங்கள் சம்பாதித்த வட்டிக்கு வட்டி வழங்கப்படும். 15 ஆண்டுகளில் இந்த கூட்டு வட்டியின் வளர்ச்சி உங்களுடைய வருமானத்தை இரட்டிப்பாக்கும்.
வரி விலக்கு: PPF திட்டத்தின் முதலீடுகளுக்கு வருமானவரிச் சட்டத்தின் 80 C பிரிவின் கீழ் வரி விலக்குகள் வழங்கப்படுகிறது. எனவே நீங்கள் சம்பாதித்த வட்டி மற்றும் முதிர்வு தொகை ஆகிய இரண்டிற்கும் வரி விலக்கு கிடைக்கும்.
இடரில்லாத முதலீடு: அரசாங்கத் திட்டம் என்பதால் PPF பாதுகாப்பான முதலீட்டு விருப்பமாக உள்ளது. பங்குகள், மியூச்சுவல் ஃபண்டுகள் மற்றும் பிற திட்டங்களைப் போல சந்தை அபாயங்களுக்கு உட்படாமல் செயல்படுவதால் உங்களுடைய வருமானத்திற்கு எந்த பாதிப்பும் இருக்காது.
எப்படி உங்கள் முதலீட்டை இரட்டிப்பாக்குவது?: PPF திட்டத்தில் குறைந்தபட்சமாக 500 ரூபாய் முதல் முதலீடு செய்யலாம். அதிகபட்சமாக ஒரு நிதியாண்டுக்கு 1.5 லட்சம் வரை முதலீடு செய்ய முடியும். ஒரு நிதியாண்டுக்கு ரூ. 1.5 லட்சம் என அதிகபட்ச தொகையைத் தொடர்ந்து 15 ஆண்டுகள் முதலீடு செய்தால் ரூ. 22.5 லட்சத்தை முதலீடு செய்திருப்பீர்கள்.
இதற்கு வட்டி வருமானமாக ரூ.18 லட்சம் கிடைக்கும். இதன் மூலம் மொத்த முதிர்வு தொகையாக ரூ.40 லட்சத்தைப் பெற்றுக் கொள்ளலாம். ஒவ்வொரு ஆண்டும் அதிகபட்ச வரம்பை தவறாமல் முதலீடு செய்வதன் மூலம் 7.1% வட்டியில் உங்களுடைய வருமானம் இரட்டிப்பாகும். 15 ஆண்டுகளுக்கு பிறகும் உங்கள் பிபிஎப் கணக்கை மேலும் 5 வருடங்களுக்கு நீட்டிக்கலாம். கூடுதல் வரி தாக்கங்கள் எதுவும் இல்லாமல் உங்களுடைய கார்பசை அதிகரிக்க விரும்பினால் இந்த திட்டத்தை பயன்படுத்தி பலனடையலாம்.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications