PPF Vs NPS: பொதுவாக பலருக்கும் இருக்கும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு, இன்று கஷ்டப்பட்டாலும் பரவாயில்லை. வயதான காலகட்டத்தில் ஆவது சந்தோஷமாக இருக்க வேண்டும் என்பது தான். குறிப்பாக வயதான காலகட்டத்தில் நிதி ரீதியாக யாரையும் சாரமல் வாழ பயனுள்ளதாக இருக்கும்.
பொதுவாக வயதான காலகட்டத்தில் நிம்மதியாக வாழ நம்மில் எத்தனை பேர், முதலீடு செய்யத் தொடங்கியுள்ளோம் என கேட்டால் அது மிகப்பெரிய கேள்விக் குறி தான். இந்தியாவின் நடுத்தர மற்றும் சாமானிய மக்கள் மத்தியில் இந்த கேள்வியினை கேட்டால், இது மிகப்பெரிய கேள்விக் குறியாகத் தான் இருக்கும்.
ஆக ஓய்வுகாலத்தில் பென்சனுடன் ஓய்வுபெற எந்த மாதிரியான திட்டத்தில் முதலீடு செய்யலாம். இதற்கு ஏற்ற திட்டம் எது, சந்தை அபாயம் இல்லாத, நீண்டகால நோக்கில் பயன் அளிக்கும் திட்டம் எது? இவ்வாறு ஓய்வுகாலத்திற்கு ஏற்ப முதலீடு செய்யும் திட்டமிடும்போது, 50/30/20 என்ற விதியின் கீழ் முதலீடு செய்ய வேண்டும் என முதலீட்டு ஆலோசர்கள் பரிந்துரை செய்கின்றனர்.
இதில் 50 என்பது உங்களது அடிப்படை தேவைக்காக ஒதுக்க வேண்டும். அதாவது அத்தியாவசிய தேவைகள், வீடு, ஹெல்த்கேர், கல்வி கட்டணம் என கட்டாயம் செலவு செய்ய வேண்டிய அடிப்படை தேவைகள் இதில் அடங்கும்.
30 என்பது விருப்பமானவற்றிற்கு செய்யும் முதலீடு. இதில் கார், ஷாப்பிங், ஹோட்டல்களில் சென்று சாப்பிடுவது, பொழுதுபோக்குக்காக போன்ற விருப்பமானவற்றிற்காக செலவு செய்யும்.

20 என்பதை கட்டாயம் சேமிப்பு அல்லது எதிர்காலத்திற்கான முதலீடாக இருக்க வேண்டும். இது தான் 50/30/20 என்ற பட்ஜெட் விதியாகும்.
ஆக இப்படி பார்த்து பார்த்து செய்யும் முதலீடானது ஓய்வுகாலத்திற்கு ஏற்றதாக இருக்க வேண்டும். அந்த வகையில் பொதுவாக ஹெல்த் இன்சூரன்ஸ் என்பதையும் போட்டு வைப்பது நல்லது. இதில் திடீரென ஏற்படும் மருத்து செலவுகளை சமாளிக்க உதவும்.
NPS: முதலீடு எனும்போது, அதுவும் ஓய்வுகால முதலீடு எனும்போது சிறந்த திட்டங்களில் தேசிய ஓய்வூதிய திட்டமும் ஒன்று. இது முறைசாரா தொழிலாளர்களுக்கும் வயதான காலகட்டத்தில் பென்சன் பெற உதவும். இதில் சந்தை அபாயம் என்பது இல்லை. பாதுகாப்பான திட்டமாக உள்ள நிலையில், இதில் 80சியின் கீழ் வரிச் சலுகையும் கிடைக்கும். வருமானமும் சற்றே அதிகம்.

PPF: அஞ்சலகத்தின் பிரபல திட்டமான பொது வருங்கால வைப்பு நிதி ஓய்வூகால திட்டம் என்பதை காட்டிலும், அனைவரும் பலன பெற கூடிய ஒரு திட்டமாகும். இது ஒரு 15 ஆண்டுகால திட்டமாகும். இதிலும் வரி சலுகை என்பது கிடைக்கிறது. இந்த திட்டத்தில் அதிகபட்சமாக வருடத்திற்கு 1,50,000 ரூபாய் முதலீடு செய்து கொள்ளலாம்.

நீண்டகால முதலீடுகள் என பரிந்துரை செய்யும்போது பொதுவாக முதலீட்டு ஆலோசகர்கள் மியூச்சுவல் பண்டுகளைத் தான் பரிந்துரை செய்கின்றனர். இதில் நீண்ட நோக்கில் முதலீடு செய்யும்போது மிகப்பெரிய கார்ப்பஸ் இலக்கினை அடைய உதவிகரமாக இருக்கும்.
அதிலும் எஸ் ஐ பி மூலம் முதலீடு செய்யும்போது இது லாபகரமான ஒன்றாக இருக்கும். இது மிகப்பெரிய கார்ப்பஸ் இலக்கினை அடைய ஏற்ற ஒரு முக்கிய ஆப்சனாகவும் இருந்து வருகின்றது. ஆக உங்களின் வயது என்ன? உங்கள் ரிஸ்க் விகிதம் என்ன? எதில் முதலீடு செய்யலாம். எவ்வளவு லாபம் கிடைக்கும்? உங்களின் தேவை என்ன என பலவற்றையும் அலசி ஆராய்ந்து முதலீடு செய்து கொள்வது நல்லது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications