வீடு வாங்க, கட்ட திட்டமா? அப்படின்னா இது நல்ல சான்ஸ்..PNBயில் என்ன நிலவரம்..!

இன்றைய காலகட்டத்தில் நம்மில் பலருக்கும் இருக்கும் ஒரே ஆசை, ஒரு நல்ல வீடு கட்ட வேண்டும் என்பது தான். அது சிறியதோ அல்லது பெரியதோ? மாட மாளிகையோ அல்லது ஓலைக் குடிசையோ? நிச்சயம் தனக்கொன்று சொந்த வீடு இருக்க வேண்டும் என்பது தான் பலருக்கும் கனவாகவே இருக்கும்.

முந்தைய காலகட்டத்தில் சில லட்சங்கள் இருந்தாலே வீடு கட்டிக் கொள்ளலாம். ஆனால் இன்றோ சாதரணமாக சிறிய வீடு கட்ட வேண்டும் என்றால் கூட, குறைந்தபட்சம் 10 லட்சம் ரூபாய்க்கு மேல் செலவாகும்.

அந்த வகையில் இன்று நாம் பார்கக்கவிருப்பது பஞ்சாப் நேஷனல் வங்கியில் எவ்வளவு வட்டி விகிதம் என்று தான்.

வீட்டுக்கடன்

வீட்டுக்கடன்

இன்றைய கால கட்டத்தில் சற்று பெரியதாக கட்ட வேண்டுமெனில் குறைந்தபட்சம் 30 லட்சம் ரூபாயாவது செலவழிக்க வேண்டி இருக்கும். அப்படி இருக்கையில் அதிகளவிலான வருமானம் பெறுபவர்கள் கூட, வங்கிக் கடன் வாங்கித் தான், வீடு கட்ட வேண்டிய சூழ்நிலை உள்ளது. அப்படி கடன் வாங்கிக் கட்டினாலும், எங்கு குறைவான வட்டியில் கடன் கிடைக்கிறது, வேறு சலுகைகள் எதுவும் இருக்கிறதா? இப்படி பல விஷயங்கள் ஆராய வேண்டி உள்ளன.

வீட்டுக்கடன் தான் சிறந்தது?

வீட்டுக்கடன் தான் சிறந்தது?

ஏனெனில் உங்களின் சிறு முயற்சி கூட, உங்களின் கடன் சுமையை சற்று குறைக்கக் கூடும். அந்த வகையில் நாம் இன்று பார்க்கவிருப்பது, பஞ்சாப் நேஷனல் வங்கியில் தான். பெரும்பாலான வங்கிகள் வீட்டுக்கடனை விட, அடமானக் கடன்களைத் தான் அதிகம் விரிவுபடுத்துகின்றன. ஏனெனில் இது சொத்துக்களுக்கு எதிரான கடனாக உள்ளது. ஆனால் வீட்டுக்கடன் தான் அடமானக் கடனை விட சிறந்தது என இத்துறை சார்ந்த நிபுணர்கள் கூறுகின்றனர்.

குறைந்த வட்டி விகிதம்

குறைந்த வட்டி விகிதம்

PNBயில் ஜனவரி 2021 முதல் அமல்படுத்தப்பட்டுள்ள இந்த வட்டி விகிதமானது குறைந்த வட்டியில் வீட்டுக்கடனை பெற வழிவகுக்கிறது, இது 30 லட்சம் ரூபாய் வரை கடன் பெறுபவர்களுக்கு வட்டி விகித0 7.20% ஆகும். இதே 30 லட்சம் ரூபாய் முதல் 50 லட்சம் ரூபாய் வரையில் 7.35% வட்டியாகும். இதே 50 லட்சம் ரூபாய் முதல் 752 லட்சம் ரூபாய் வரையில் 7.35% ஆகும். இதே 75 லட்சம் ரூபாய்க்கு மேல் எனில் 7.35% ஆகும்.

பெண்களுக்கு சலுகை

பெண்களுக்கு சலுகை

பஞ்சாப் நேஷனல் வங்கியினை பொறுத்த வரையில் பெண் வாடிக்கையாளர்களுக்கு சில சலுகைகள் உண்டு. இது வட்டியில் 0.05 சதவீதம் சலுகையினை வழங்குகிறது. இது 30 லட்சம் ரூபாய் வரை கடன் பெறுபவர்களுக்கு வட்டி விகிதம் 7.15% ஆகும். இதே 30 லட்சம் ரூபாய் முதல் 50 லட்சம் ரூபாய் வரையில் 7.30% வட்டியாகும். இதே 50 லட்சம் ரூபாய் முதல் 75 லட்சம் ரூபாய் வரையில் 7.30% ஆகும். இதே 75 லட்சம் ரூபாய்க்கு மேல் எனில் 7.30% ஆகும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+