நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவினை தொடர்ந்து, தற்போது பஞ்சாப் நேஷனல் வங்கியிலும் ஏடிஎம்மில் பணம் எடுக்க புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்த புதிய விதிகள் இன்று முதல் (டிசம்பர் 1) அமலுக்கு வந்துள்ளது.
ஆக இனி பஞ்சாப் நேஷனல் வங்கி வாடிக்கையாளர்களும் 10,000 ரூபாயினை எடுக்க வேண்டுமானால், ஓடிபியை பதிவு செய்ய வேண்டியிருக்கும்.
ரூ.10,000 மேல் எடுத்தால் ஓடிபி
சரி விவரம் என்ன வாருங்கள் பார்க்கலாம்? இனி பஞ்சாப் நேஷனல் வங்கி வாடிக்கையாளர்கள், ஏடிஎம்மில் 10,000 ரூபாய்க்கு மேல் எடுக்கும்பட்சத்தில் ஒடிபியை பதிவு செய்ய வேண்டியிருக்கும். இந்த ஓடிபியானது வாடிக்கையாளர்களின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு வரும். எனினும் இரவு எட்டு மணி முதல் காலை எட்டு மணி வரை பணம் எடுப்பவர்களுக்கு மட்டுமே, இந்த விதிமுறைகள் பொருந்தும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
PNB 2.0 ஏடிஎம்களுக்கு மட்டும் இந்த விதிகள்
கடந்த ஏப்ரல் முதல் யுனைடெட் பேங்க் ஆப் இந்தியா, ஓரியண்டல் பேங்க் ஆப் காமர்ஸ் ஆகிய இரு வங்கிகளும் பஞ்சாப் நேஷனல் வங்கியுடன் இணைக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து மூன்று வங்கிகளும் இணைந்த பின்னர் PNB 2.0 என்று அழைக்கப்படுகிறது. ஆக PNB 2.0 ஏடிஎம்களில் பணம் எடுப்போருக்கு இந்த ஓடிபி அவசியம் தேவைப்படும். மற்ற ஏடிஎம் மூலம் பணம் எடுப்போருக்கு இந்த விதிகள் பொருந்தாது.
மோசடிகளை தடுக்க நடவடிக்கை
ஏடிஎம் மூலம் மோசடி நடைபெறுவதை தடுக்கும் விதமாக பஞ்சாப் நேஷனல் வங்கி இந்த நடவடிக்கையை எடுத்ததாக தெரிவித்துள்ளது. இது குறித்த வீடியோ ஒன்றையும் பஞ்சாப் நேஷனல் வங்கி வெளியிட்டுள்ளது. இதில் ஓடிபி மூலம் எப்படி பணம் எடுப்பது என்பதனையும் தெளிவாக காட்டியுள்ளது.
எஸ்பிஐ-யிலும் இதே வசதி
முன்னதாக எஸ்பிஐ 24 மணி நேரமும் OTP மூலம் பணம் எடுக்கும் வசதியினை அறிவித்தது. இந்த சேவை விரிவாக்கமானது செப்டம்பர் 18 முதல் அனைத்து எஸ்பிஐ ஏடிஎம்களிலும் நடைமுறைக்கு வரும் எனவும் தெரிவித்திருந்தது. இது ஏடிஎம் மோசடிகளை குறைக்க வழிவகுக்கும். அதோடு மக்களின் பணமும் பாதுகாப்பாக இருக்க, இந்த நடைமுறை வழிவகுக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!



Click it and Unblock the Notifications