குவாண்டம் மியூச்சுவல் ஃபண்ட் ஆனது, குவாண்டம் எதிக்கல் ஃபண்ட் என்ற புதிய ஃபண்ட் ஆஃபரை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டம் ஆனது டிசம்பர் 2 ஆம் தேதி தொடங்குவதாக அறிவித்துள்ளது. இந்த புதிய ஃபண்ட் ஆஃபர் ஆனது,இது நெறிமுறைக் கொள்கைகளைக் கடைப்பிடிக்கும் நிறுவனங்களில் முதலீடு செய்யும் திறந்தநிலை ஈக்விட்டி நிதியாகும். நீண்ட கால மூலதன ஆதாயங்களுக்காக இதை எடுத்துக்கொள்வதாக நிறுவனம் அறிவித்துள்ளது. புதிய ஃபண்ட் சலுகை டிசம்பர் 2 ஆம் தேதி சந்தாவிற்கு திறக்கப்படும். டிசம்பர் 16ல் முடிவடைகிறது.
இந்தத் திட்டம் நிஃப்டி 500 ஷரியா மொத்த வருவாய் குறியீட்டுக்கு (TRI) எதிராக தரப்படுத்தப்படும். இந்த நிதி சிராக் மேத்தாவால் நிர்வகிக்கப்படுகிறது. நெறிமுறைக் கொள்கைகளைப் பின்பற்றி நிறுவனங்களின் ஈக்விட்டி மற்றும் ஈக்விட்டி தொடர்பான கருவிகளில் முதலீடு செய்வதன் மூலம் நீண்ட கால மூலதன ஆதாயங்களை அடைவதே முதலீட்டு நோக்கமாகும்.

குவாண்டம் ஏஎம்சியின் தலைமை முதலீட்டு அதிகாரி மற்றும் நிதி மேலாளர் சிராக் மேத்தா கூறுகையில், குவாண்டம் எத்திகல் ஃபண்ட் முதலீட்டாளர்கள் தங்கள் முதலீடுகளை அவர்களின் நம்பிக்கைகள், மதிப்புகள் மற்றும் சித்தாந்தங்களுடன் சீரமைக்க உதவுகிறது என்று கூறியுள்ளார்.
இந்த திட்டம் நேரடி மற்றும் வழக்கமான திட்டங்களை வழங்குகிறது. 80 முதல் 100 சதவீத நிதிகளை நெறிமுறைக் கொள்கைகளைப் பின்பற்றும் ஈக்விட்டி மற்றும் ஈக்விட்டி தொடர்பான கருவிகளில் முதலீடு செய்கிறது. 0-20 சதவீத நிதியை கடன் மற்றும் பணச் சந்தை கருவிகளில் முதலீடு செய்கிறது. இந்தத் திட்டம் செயலில் உள்ள முதலீட்டு உத்தியைப் பின்பற்றுகிறது. நெறிமுறை கட்டமைப்பைக் கொண்ட ஷரியா, ஜைன மதம் உள்ளிட்ட பிற நெறிமுறைக் கொள்கைகளைக் கொண்ட நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்கிறது.
நெறிமுறை முதலீடு என்பது ஒரு முதலீட்டு அணுகுமுறை குவாண்டம் ஆலோசகர்களின் பங்குத் தலைவர் ஐவி சுப்பிரமணியம், குவாண்டம் ஆலோசகர்கள் கூறுகையில், முதலீட்டாளர்கள் தங்கள் மத அல்லது சமூக விழுமியங்களுடன் ஒத்துப்போகும் வணிகங்களில் முதலீடு செய்து நிதி வருமானத்தை ஈட்டுவார்கள் என்றும், சில நேரங்களில், சில வணிகங்கள் சமூக விழுமியங்களின் அடிப்படையில் நல்லதல்லாத செயல்களில் ஈடுபடுகின்றன என்று தெரிவித்துள்ளார். முதலீட்டாளர்கள் சமூக மதிப்புகளுக்கு ஏற்ப தங்கள் செயல்பாடுகளை நடத்தும் வணிகங்களை அடையாளம் காண்பது கடினம். அதே சமயம் லாபமும் கூட. அத்தகையவர்களுக்கு நெறிமுறை நிதி சரியான பொருத்தமாக இருக்கும் என்று விளக்கமளித்துள்ளார்
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications