சென்னை: நீங்கள் இன்டர்நெட் பேங்கிங் பயன்படுத்திக் கொண்டிருந்தால், அதற்கென்று தனியாக பாஸ்வேர்டைப் பயன்படுத்த வேண்டியது அவசியம். பாதுகாப்பான பாஸ்வேர்டுகளை அமைப்பதன் மூலம் உங்களுடைய நிதி தகவல்களை பாதுகாக்க முடியும். உங்களுடைய இன்டர்நெட் பேங்கிங் அல்லது முதலீட்டு கணக்குக்கு பாஸ்வேர்ட்டுகளை உருவாக்குவதற்கு முன்பு ஒரு சில யுக்திகளை, நீங்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டியது கட்டாயம். அவை என்ன என்பதை இந்தப் பதிவில் பார்ப்போம்.
உங்கள் இன்டர்நெட் பேங்கிங் செயல்முறை பாதுகாப்பாக இருப்பதை உறுதிசெய்ய சில உதவிக்குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன.

யூகிக்க முடியாத பாஸ்வேர்ட்: முதலாவதாக சிக்கலான, கடினமான மற்றும் யூகிக்க முடியாத பாஸ்வேர்ட்களை உருவாக்க வேண்டும். உங்கள் பாஸ்வேர்டின் பாதுகாப்பை அதிகரிக்க பெரிய மற்றும் சிறிய எழுத்துக்களை பயன்படுத்தவும், மேலும் எண்கள் மற்றும் குறியீடுகளை பயன்படுத்தவும்.
பொதுவான சொற்றொடர்களைத் தவிர்க்கவும்: எடுத்துக்காட்டாக 'password123' போன்ற பொதுவான சொற்றொடர்களை பாஸ்வேர்டாக பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். இவை எளிதில் யோசிக்கக் கூடியவை. நீங்கள் எளிதில் யோசிக்க கூடிய வார்த்தைகளைக் கொண்டு பாஸ்வேர்டை அமைப்பதன் மூலம் ஹேக்கர்கள் எளிதில் கண்டறிந்து பணத்தை திருடி விடுவார்கள்.
ஒவ்வொரு இன்டர்நெட் பேங்கிங் ஆப்-க்கும் தனித்தனியாக பாஸ்வோர்ட் அமைக்கவும். எல்லாவற்றிற்கும் ஒரே பாஸ்வேர்ட்டை பயன்படுத்தாமல் இருப்பதன் மூலம், ஏதேனும் ஒரு கணக்கு ஹேக் செய்யப்பட்டால் மற்ற அனைத்து கணக்குகளும் ஆபத்திற்கு உள்ளாகாமல் இருக்கும். மேலும் உங்கள் பாஸ்வேர்டை மிக நீளமாக அமைக்கவும். நீங்கள் நீளமான பாஸ்வேர்டை பயன்படுத்தும் மூலம் அதனை எளிதில் ஹேக் செய்ய இயலாது. உங்களால் எளிதில் யோசிக்க கூடிய, மற்றவர்களால் எளிதில் யோசிக்க இயலாத கடினமான பாஸ்வேர்டை அமைக்க வேண்டும். அதுமட்டுமின்றி, பாஸ்வேர்டை அடிக்கடி புதுப்பிக்க வேண்டும். உங்களுடைய பாஸ்வேர்டை 100 சதவீதம் பாதுகாக்க வேண்டுமென்றால் மூன்று முதல் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை பாஸ்வேர்டை புதுப்பிக்க அறிவுறுத்துகிறார் Bankbazaar.com-இன் CEO அதில் ஷெட்டி.
தனிப்பட்ட தகவல்களைத் தவிர்க்கவும்: உங்களுடைய பிறந்த தேதி, தொலைபேசி எண், குடும்ப உறுப்பினரின் பெயர் அல்லது அவர்களுடைய பிறந்த தேதி போன்ற எளிதில் யூகிக்கக் கூடிய தனிப்பட்ட விவரங்களை பாஸ்வேர்டாக பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். உங்களுடைய பாஸ்வேர்டை நினைவில் வைத்துக் கொள்வது கடினமாக இருந்தால், நீங்கள் password manager-ஐ பயன்படுத்தலாம். இது உங்களுடைய பாஸ்வேர்டை பாதுகாப்பாக வைத்திருக்கும்.
ஃபிஷிங்: ஃபிஷிங் மெயில் அல்லது SMS, உங்கள் வங்கி விவரங்களைக் கண்டறிய உங்களை ஏமாற்றும் வகையில் வரலாம். எனவே, அதிலிருந்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நீங்கள் பாஸ்வேர்டை என்டர் செய்வதற்கு முன் உங்கள் நெட் பேங்கிங் ஆப்-இன் நம்பகத்தன்மையை சரி பார்ப்பது அவசியம்.
பாஸ்வேர்டை பாதுகாப்பாக சேமிக்கவும்: உங்களுக்கு பாஸ்வேர்ட் மறந்து விடும் என்று எண்ணி, எதாவது ஒரு இடத்தில் பாஸ்வேர்டை எழுதி வைப்பீர்கள். அவ்வாறு எழுதி வைப்பதைத் தவிர்க்கவும். முடிந்தவரை உங்கள் பாஸ்வேர்டை மனப்பாடம் செய்து கொள்ளுங்கள் அல்லது நீங்கள் மட்டும் பயன்படுத்தக் கூடிய இடத்தில் பாஸ்வேர்டை எழுதி வைத்துக் கொள்ளுங்கள்.
இது போன்ற சில யுக்திகளை பயன்படுத்தினாலே, உங்களுடைய இன்டர்நெட் பேங்கிங் செயல்முறை பாதுகாப்பானதாக இருக்கும். OTP இல்லாமலும், உங்கள் தகவல்கள் திருடப்படலாம் என்ற மற்றொரு செய்தி வந்து மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. எனவே, எச்சரிக்கை மிகவும் முக்கியமான ஒன்றாக உள்ளது நம்முடைய விவரங்களை நாம் தான் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என்பதைத் தெரிந்து நடந்து கொள்ளுங்கள்.
More From GoodReturns

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!



Click it and Unblock the Notifications