சமீபத்திய காலமாக இந்திய பங்கு சந்தைகளில் பொதுப்பங்கு வெளியீடு என்பது அதிகரித்துள்ளது. பல சிறு நிறுவனங்களும் பங்கு சந்தையில் தங்களது பங்குகளை வெளியிட்டு வருகின்றன. பல நிறுவனங்களும் வெளியிட திட்டமிட்டு வருகின்றன.
பேடிஎம்மின் பங்கு பட்டியலுக்கு பிறகு ஐபிஓ கலாச்சாரம் என்பது குறையலாம். முதலீடுகள் குறையலாம் என்ற சந்தேகம் இருந்து வந்தது. ஆனால் அப்படி ஏதும் நிகழவில்லை என்பதற்கு சாட்சியாக பல நிறுவனங்களும் தங்களது பங்கு வெளியீட்டினை செய்து வருகின்றன.
அந்த வகையில் தற்போது ராகேஷ் ஜுன்ஜுன்வாலா ஏற்கனவே கணிசமான பங்குகளை வைத்துள்ள, மெட்ரோ பிராண்ட்ஸ் நிறுவனம் தனது பங்கு வெளியீட்டினை செய்யவுள்ளது.
மெட்ரோ பிராண்ட்ஸ் ஐபிஓ
பொதுவாக பங்கு சந்தையில் ராகேஷ் ஜுன்ஜுன்வாலாவின் போர்ட்போலியோவினை கவனிக்கும் வர்த்தகர்கள், தற்போது பங்கு சந்தைக்குள் நுழையும் முன்பே பங்குதாரராக இருக்கும் இந்த நிறுவனத்தின் பங்கினை வாங்க ஆர்வம் காட்டலாம் என்ற கருத்தும் நிலவி வருகின்றது.
எப்போது ஐபிஓ
மெட்ரோ பிராண்ட்ஸ் நிறுவனத்தின் பங்கு வெளியீடானது டிசம்பர் 10 அன்று வெளியிடப்படவுள்ளது.
டிசம்பர் 14 அன்று முடிவடையவுள்ளது. இந்த பங்கு வெளியீட்டில் புதிய பங்கு வெளியீடாக 295 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகள் வெளியிடப்படவுள்ளது. இதே ஏற்கனவே பங்குதாரர்கள் மற்றும் புரோமோட்டர்களிடம் உள்ள 2.14 கோடி பங்குகளும் விற்பனை செய்யப்படவுள்ளன.
புரோமோட்டார்களின் பங்கு விகிதம் குறையும்
இந்த பங்கு வெளியீட்டின் மூலம் பங்குதாரர்கள் கிட்டதட்ட 10% பங்கினை விற்பனை செய்யவுள்ளனர். இந்த பங்கு வெளியீட்டின் பின்னர் இந்த நிறுவனத்தின் மொத்த புரோமோட்டார்களின் பங்கு விகிதமானது 75% ஆக குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது 85% என்ற லெவலில் காணப்படுகின்றது.
எதற்காக இந்த ஐபிஓ
இந்த ஐபிஓ மூலம் திரட்டப்படும் நிதியானது அதன் வணிக விரிவாக்கத்திற்கு பயன்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக புதிய கடைகள் திறப்புகளுக்கு பயப்படுத்தப்படும் என தெரிவித்துள்ளது.
தற்போது இந்த நிறுவனத்தின் 586 ஸ்டோர்கள், 134 நகரங்களில் இந்தியா முழுவதும் உள்ளன. இதில் 211 ஸ்டோர்களும் கடந்த 3 ஆண்டுகளில் தொடங்கப்பட்டது.
காலணி வணிகம்
இந்த நிறுவனம் இந்தியாவில் சில்லறை காலனி வணிகத்தில் முக்கிய பங்கு வகித்து வருகின்றது. குறிப்பாக நடுத்தர ரக, பிரீமிய ரக காலனிகளில் கவனம் செலுத்தி வருகின்றது.
இந்த நிறுவனத்தின் முதல் ஷோரூம் மும்பையில் கடந்த 1955ம் ஆண்டு தொடக்கப்பட்டதாகும். இது ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைவருக்கும் தேவையான காலாணிகள், பல பிராண்டுகள் என பரந்து விரிந்த ஒரு விற்பனையாளராக உள்ளது.
ராகேஷ் ஜுன் ஜுன்வாலா வசம்
இந்த நிறுவனத்தில் பங்கு சந்தையின் தந்தை என்று அழைக்கப்படும் ராகேஷ் ஜுன் ஜுன்வாலா வசம், 14.73% பங்குகள் உள்ளது.
இதனால் இந்த பங்கு வெளியீடானது அதிகளவில் விண்ணப்பிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பும் நிலவி வருகின்றது.
இந்த பங்கு விலை, லாட் சைஸ் என எதுவும் வெளியிடப்படவில்லை. இனி வரும் நாட்களில் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!

3 வாரத்தில் சின்னாபின்னமான துபாய் ரியல் எஸ்டேட்.. தள்ளுபடி விற்பனை ஆரம்பம்.. இந்த ஏரியாவில் தடாலடி விலை சரிவு



Click it and Unblock the Notifications