ஆர்பிஐ அறிவிப்பால் வருத்தத்தில் வயதானவர்கள்..! வட்டிய நம்பித் தாங்க வாழ்றோம்!

இந்தியாவில் ஒரு சாதாரண ஏழை எளிய மக்களுக்குக் கூட தெரிந்த முதலீடு என்றால், அது வங்கிகளின் ஃபிக்ஸட் டெபாசிட் தான்.

இன்று வரை இந்த நம்பிக்கை மக்கள் மனதில் இருந்து மாறவே இல்லை. வங்கியை நம்பி தங்கள் கையில் இருக்கும் சொற்ப ஆயிரம் ரூபாய் முதல் லட்சக் கணக்கான ரூபாய் வரை டெபாசிட் செய்து வைத்திருக்கிறார்கள்.

ஆனால் இப்போது ஆர்பிஐ அறிவித்து இருக்கும் ரெப்போ ரேட் வட்டி விகித குறைப்பால், இந்த ஃபிக்ஸட் டெபாசிட் செய்து வைத்திருப்பவர்கள் வருத்தத்தில் இருக்கிறார்கள். ஏன்..?

வங்கிகள் எப்படி செயல்படும்

வங்கிகள் எப்படி செயல்படும்

1. பொதுவாக வங்கிகளிடம் மற்றவர்கள் டெபாசிட் செய்வார்கள். இந்த டெபாசிட் பணத்துக்கு சுமாராக 8 % வட்டி கொடுக்கிறார்கள் என வைத்துக் கொள்வோம்.

2. வாங்கிய டெபாசிட் பணத்தை பல வியாபாரிகளுக்கு சுமாராக 12 % வட்டிக்கு கடன் கொடுக்கிறார் என வைத்துக் கொள்வோம்.

3. ஆக 12 - 8 = 4 % தான் வங்கியின் வட்டி லாபம். இப்படித் தான் வங்கிகள் பொதுவாக இயங்கும்.

 

கடன் கொடுக்க பணம் தேவை

கடன் கொடுக்க பணம் தேவை

ஆக முதலில் வங்கி செயல்பட வேண்டும் என்றால், முதலில் கடன் வழங்க பணம் தேவை. மேலே சொன்ன உதாரணத்தில் ஃபிக்ஸட் டெபாசிட் வழியாக 8 % வட்டிக்கு பணத்தை திரட்டி 12 % வட்டிக்கு கடன் கொடுத்து வியாபாரம் பார்க்கிறார்கள். ஆனால் வெறும் 4.4 % வட்டிக்கு பணம் கிடைத்தால், வங்கிகள் 4.4 % வட்டிக்குத் தானே பணத்தை வாங்க முயற்சிப்பார்கள்..? அது தான் இப்போது நடக்கத் தொடங்கி இருக்கிறது.

வருத்தம் ஏன்

வருத்தம் ஏன்

ரிசர்வ் வங்கி, மற்ற வங்கிகளுக்கு கடன் கொடுக்கும். அப்படி கொடுக்கும் கடனுக்கு ஒரு குறிப்பிட்ட சதவிகிதத்தை வட்டியாக வசூலிக்கும், அந்த வட்டியின் பெயர் தான் ரெப்போ ரேட். இப்போது ரெப்போ ரேட்டை 5.15 சதவிகிதத்தில் இருந்து 4.4 சதவிகிதமாக குறைத்து இருக்கிறது ஆர்பிஐ.

டெபாசிட் எதுக்கு கடன் ஒகே

டெபாசிட் எதுக்கு கடன் ஒகே

ரிசர்வ் வங்கி, மற்ற வங்கிகளுக்கு கடன் கொடுக்கும். அப்படி கொடுக்கும் கடனுக்கு ஒரு குறிப்பிட்ட சதவிகிதத்தை வட்டியாக வசூலிக்கும், அந்த வட்டியின் பெயர் தான் ரெப்போ ரேட். இப்போது ரெப்போ ரேட்டை 5.15 சதவிகிதத்தில் இருந்து 4.4 சதவிகிதமாக குறைத்து இருக்கிறது ஆர்பிஐ.

டெபாசிட் பணம்

டெபாசிட் பணம்

வயதானவர்கள், வங்கி டெபாசிட்டை மட்டுமே நம்பி இருக்கும் பெண்கள் & குடும்பங்கள் தான் இந்த அறிவிப்பால் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். இத்தனை நாள் சிரமப்பட்டு உழைத்து சில பல லட்சங்களை வங்கியில் டெபாசிட் செய்து, அதில் இருந்து வரும் பணத்தை வைத்து தான் மருத்துவ செலவுகள், கல்விச் செலவுகள், தன் பேர குழந்தைகளுக்கான அன்பு செலவுகள், தீபாவளி பொங்கல் போன்ற பண்டிகை காலங்களில் செய்ய வேண்டிய முறைச் செலவுகளை எல்லாம் செய்து வந்திருப்பார்கள்.

எப்படி சமாளிப்பார்கள்

எப்படி சமாளிப்பார்கள்

இப்போது மேலும் ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கான வட்டி விகிதம் குறைந்தால் இவர்கள் எப்படி தங்கள் வாழ்கையை வழக்கம் போல நடத்த முடியும் எனத் தெரியவில்லை. வாசகர்கள் கணக்கு செய்து கொள்ள, தற்போது ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் வழங்கப்பட்டு வரும் வட்டி விகிதங்களைக் கீழே கொடுத்து இருக்கிறோம். இதில் இருந்து இன்னும் எவ்வளவு வட்டி குறையலாம் என்பது வங்கியின் கையில் தான் இருக்கிறது. ஆனால் நிச்சயம் வட்டி விகிதம் குறைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பது இங்கு குறிப்பிடத்தகக்து.

பொது மக்களுக்கான FD வட்டி

பொது மக்களுக்கான FD வட்டி

10-03-2020 முதல், எஸ்பிஐ ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதங்கள் (2 கோடி ரூபாய் வரைக்குமான ஃபிக்ஸட் டெபாசிட்டுகளுக்கு மட்டுமே இது செல்லுபடியாகும்).

SBI Fixed Deposit Interest rates

  • 7 days to 45 days-4.00%
  • 46 days to 179 days-5.00%
  • 180 days to 210 days-5.50%
  • 211 days to less than 1 year-5.5%
  • 1 year to less than 2 year-5.90%
  • 2 years to less than 3 years-5.90%
  • 3 years to less than 5 years-5.90%
  • 5 years and up to 10 years-5.90%

 

மூத்த குடிமக்களுக்கான FD வட்டி

மூத்த குடிமக்களுக்கான FD வட்டி

10-03-2020 முதல், மூத்த குடிமக்களுக்கான எஸ்பிஐ ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதங்கள் (2 கோடி ரூபாய் வரைக்குமான ஃபிக்ஸட் டெபாசிட்டுகளுக்கு மட்டுமே இது செல்லுபடியாகும்).

Senior Citizen SBI Fixed Deposit Interest rates

  • 7 days to 45 days-4.50%
  • 46 days to 179 days-5.50%
  • 180 days to 210 days-6.00%
  • 211 days to less than 1 year-6.00%
  • 1 year to less than 2 year-6.40%
  • 2 years to less than 3 years-6.40%
  • 3 years to less than 5 years-6.40%
  • 5 years and up to 10 years-6.40%

 

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+