தற்போதைய டிஜிட்டல் காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவருக்குமே வங்கிக் கணக்கு இருக்கும். ஏனென்றால், கல்வி உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, மகளிர் உரிமைத்தொகை, பிஎம் கிசான் உதவித்தொகை என மத்திய - மாநில அரசுகளின் நிதியுதவிகள் அனைத்தும் வங்கிக் கணக்கில் தான் பயனர்களுக்கு நேரடியாக வரவு வைக்கப்படுகிறது. எனவே, அதை முறையாக பராமரிப்பதும் அவசியமாகிறது.
இந்த சூழலில் தான், வங்கிக் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு இந்திய ரிசர்வ் வங்கி ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. வங்கிகளில் செயல்படாத கணக்குகள்/ உரிமை கோரப்படாத வைப்புத்தொகைகள் குறித்த ஆர்பிஐ முக்கிய வழிகாட்டுதலை வெளியிட்டுள்ளது. அதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

தற்போதைய நிலவரப்படி, 10 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் இயக்கப்படாத வங்கிகளில் பராமரிக்கப்படும் வைப்பு கணக்குகள் / 10 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் உரிமை கோரப்படாமல் இருக்கும் எந்தவொரு தொகையிலும் உள்ள கடன் இருப்பு, வங்கிகளால் பராமரிக்கப்படும் DEA நிதிக்கு மாற்றப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. DEA நிதி என்பது வைப்புத் தொகையாளர்களின் நலன்களை மேம்படுத்துவதற்கும், வைப்புத்தொகையாளர்களின் ஆர்வத்தை மேம்படுத்துவதற்கு அவசியமான பிற நோக்கங்களுக்காக பயன்படுத்தப்பட வேண்டும்.
DEA நிதி என்றால் என்ன..?: 10 ஆண்டுகளுக்கு மேல் செயல்படாமல் இருக்கும் வங்கிக் கணக்குகளை, ஆர்பிஐ அறிவுறுத்தலின்படி, வங்கிகள் செயல்படாத கணக்குகளாக வகைப்படுத்துகின்றன. இந்த கணக்குகளில் உள்ள தொகை, இந்திய ரிசர்வ் வங்கியின் டெபாசிட்டர் கல்வி மற்றும் விழிப்புணர்வு நிதிக்கு மாற்றப்படும். 10 ஆண்டுகளாக செயல்படாத கணக்குகளில் உள்ள பணம், DEA நிதிக்கு மாற்றப்பட்டு அது, உரிமைக் கோரப்படாத வைப்புத்தொகையாக கருதப்படும்.
ஜூன் 12ஆம் தேதி வெளியிடப்பட்ட சமீபத்திய வழிகாட்டுதல்கள் 3 முக்கிய அம்சங்களை எடுத்துரைக்கின்றன. முதலாவதாக, செயலற்ற கணக்குகள் மற்றும் உரிமை கோரப்படாத கணக்குகளை செயல்படுத்த, KYC புதுப்பிப்பு வசதி, அனைத்து கிளைகளிலும் (non-home branches) கிடைக்கச் செய்யப்படும். இரண்டாவதாக, வீடியோ வாடிக்கையாளர் அடையாள செயல்முறை (V-CIP) மூலம் KYC-ஐ புதுப்பிக்கும் வசதி வழங்கப்படும். மூன்றாவதாக, செயலற்ற கணக்குகளை செயல்படுத்த, வங்கிகள் அங்கீகரிக்கப்பட்ட வணிக நிருபர்களின் (Authorised Business Correspondents) சேவைகளையும் பயன்படுத்த அனுமதிக்கப்படுகிறது.
புதிய விதியால் வாடிக்கையாளர்களுக்கு என்ன பயன்..?: இந்திய ரிசவ்ர் வங்கியின் புதிய விதிகளால், வங்கி வாடிக்கையாளர்களோ அல்லது அவர்களின் குடும்ப உறுப்பினர்களோ பழைய வைப்புத்தொகையை மறந்துவிட்டாலோ அல்லது கணக்கு செயலற்ற நிலையில் இருந்தாலோ, இந்தப் புதிய விதிகள் அந்த நிதியை எளிதாக அணுக உதவும். மேலும், வீடியோ KYC மற்றும் கிளை நெகிழ்வுத்தன்மை வசதி, என்.ஆர்.ஐ.-க்கள், மூத்த குடிமக்கள், மற்றும் இறந்த குடும்ப உறுப்பினர்களின் நிதியைக் கோரும் வாரிசுகளுக்கு பெரிதளவு சுமையைக் குறைக்க உதவும்.
செயல்படாத வங்கிக் கணக்குகளை மீண்டும் செயல்படுத்துவதற்கான வழிமுறைகள் என்ன..?: நீங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கிக் கிளை அல்லது அருகில் உள்ள வங்கிக் கிளையை அணுக வேண்டும். அங்கு, செயல்படாத கணக்கை செயல்படுத்துவதற்கான படிவத்தைப் பூர்த்தி செய்து சமர்பிக்க வேண்டும். மேலும், அதற்கு தேவையான ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும். பின்னர், வங்கி விதிமுறைகளின்படி, கணக்கு மீண்டும் செயல்படுத்தப்படும். உங்கள் அடையாளத்தை உறுதிப்படுத்த வங்கி சில கேள்விகளைக் கேட்கலாம் அல்லது வீடியோ மூலம் கே.ஒய்.சி. சரிபார்ப்பு மேற்கொள்ளலாம்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!



Click it and Unblock the Notifications