ஆர்பிஐயின் ரெப்போ ரேட் வட்டி குறைப்பினால் யாருக்கு என்ன நன்மை தீமைகள்..?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொரோனா வைரஸ் பிரச்சனையில் இருந்து, உலக பொருளாதாரமோ, இந்தியப் பொருளாதாரமோ முழுமையாக மீண்டும் வந்ததாகத் தெரியவில்லை.

 

எல்லா நாடுகளும் ஒரு விதமாக தேக்கத்தில் தான் வேலை பார்த்து வருகிறார்கள். அந்த பிரச்சனையை சரி செய்ய பல நாடுகளின் மத்திய வங்கிகள் வேட்டியை மடித்து கட்டிக் கொண்டு களத்தில் இறங்கி இருக்கிறார்கள்.

அதில் இந்தியாவின் மத்திய ரிசர்வ் வங்கியும், இந்திய பொருளாதாரத்தை எப்படியாவது மீண்டும் பழைய நிலைக்கு வளர்ச்சிப் பாதையில் கொண்டு வர வேண்டும் என தொடர்ந்து பல திட்டங்களை அறிவித்துக் கொண்டே இருக்கிறார்கள்.

ரெப்போ ரேட்

ரெப்போ ரேட்

இந்தியப் பொருளாதாரத்தை மேம்படுத்த நிறைய பணம் புழங்க வேண்டும். அதற்கு 1. நேரடியாக மக்கள் கையில் பணம் கொடுக்கலாம் அல்லது 2. நிறைய கடன் வாங்க வைக்கலாம். ஆர்பிஐ இரண்டாவது ஐடியாவைத் தான் செயல்படுத்த முடியும். முதல் ஐடியாவை மத்திய அரசு தான் செயல்படுத்த வேண்டும். நிறைய கடன் வாங்க வைப்பதற்காக ரெப்போ ரேட் வட்டி விகிதத்தை குறைத்து இருக்கிறது ஆர்பிஐ.

எவ்வளவு குறைப்பு

எவ்வளவு குறைப்பு

கடந்த மார்ச் 27, 2020 அன்று 0.75 சதவிகிதம் குறைத்து, ரெப்போ ரேட்டை 4.4 சதவிகிதமாக அறிவித்தார்கள். இன்று (மே 22, 2020) மேலும் 0.40 % குறைத்து ரெப்போ ரேட்டை 4.0 %-த்துக்கு கொண்டு வந்து இருக்கிறது மத்திய ரிசர்வ் வங்கி.

ரெப்போ ரேட் - விளக்கம்
 

ரெப்போ ரேட் - விளக்கம்

சரி ரெப்போ ரேட் என்றால் என்ன..? வங்கிகளுக்கு ஆர்பிஐ கடன் கொடுக்கும். ஆர்பிஐ கடன் கொடுத்த பணத்துக்கு, வங்கிகள் வட்டி செலுத்துமே அது தான் ரெப்போ ரேட் வட்டி விகிதம். சுருக்கமாக இனி வங்கிகளுக்கு குறைந்த வட்டிக்கு ஆர்பிஐ இடமிருந்து பணம் கிடைக்கும்.

கடன்

கடன்

வங்கிகளுக்கு குறைந்த வட்டியில் கடன் கிடைப்பதால், புதிதாக வீட்டுக் கடன், விவசாயக் கடன், தொழில் கடன், தனி நபர் கடன்... எனக் கேட்டு விண்ணப்பிக்கும் வங்கி வாடிக்கையாளர்களுக்கு, குறைந்த வட்டிக்கு கடன் கிடைக்கும் என எதிர்பாக்கலாம். எனவே புதிதாக கடன் வாங்க இருப்பவர்களுக்கு அதிர்ஷ்டம் அடிக்கலாம்.

டெபாசிட்

டெபாசிட்

இந்த ரெப்போ ரேட் வட்டி குறைப்பினால் யாருக்கு தீமை விளையும் என்றால், அது டெபாசிட் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு தான். ஏற்கனவே 6 சதவிகிதம் கூட வட்டி கொடுக்காத வங்கிகள், இந்த ரெப்போ ரேட் குறைப்புக்குப் பின், இன்னும் கூட டெபாசிட்டுக்கான வட்டி விகிதங்களை குறைக்கும் என எதிர்பார்க்கலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

RBI reduced repo rate 0.40 percent further repo rate would be 4 percent

The reserve bank of india has reduced its repo rate 0.40 percent. So the repo rate would be 4 percent only. This may affect the loan interest rates and Fixed deposit interest rates.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X