பொதுவாக இந்திய ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை குழு கூட்டம் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை நடைபெறும். இந்த கூட்டத்தில்தான் முக்கிய கடனுக்கான வட்டி விகிதம் தொடர்பான நிலைப்பாடு உள்பட பல முக்கியமான முடிவுகள் எடுக்கப்படும். நடப்பு 2025-26ம் நிதியாண்டுக்கான இந்திய ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை குழுவின் முதல் கூட்டம் கடந்த 7ம் தேதி தொடங்கி இன்று நிறைவடைந்தது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகளை ரிசர்வ் வங்கி கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா இன்று அறிவித்தார்.
நுகர்வு தேவை அதிகரிக்கும் மற்றும் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் ரிசர்வ் வங்கி இந்த கூட்டத்தில் வட்டி விகிதத்தை குறைக்கும் என்று பல்வேறு தரப்பினரும் எதிர்பார்த்தனர். எதிர்பார்த்த மாதிரியே ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் குறைத்தது. அதாவது ரெப்போ ரேட்டை 0.25 சதவீதம் குறைத்து 6.25 சதவீதத்திலிருந்து 6 சதவீதமாக குறைத்துள்ளது. பொதுவாக ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை குறைத்தால், வங்கிகள் உடனடியாக டெபாசிட்டுக்கான வட்டி விகிதத்தை குறைக்கும். எனவே தற்போது பிக்சட் டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதத்தை வங்கிகள் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது தவிர ரிசா்வ் வங்கி தனது நிதி கொள்கை நிலைப்பாட்டை நடுநிலையிலிருந்து இணக்கமான நிலைக்கு மாற்றியுள்ளது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த நிலைப்பாட்டில் ஏற்பட்ட மாற்றம் இந்த ஆண்டு ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை மேலும் குறைக்கக்கூடும் என்பதை குறிக்கிறது. இதனால் பிக்சட் டெபாசிட்டுக்கான வட்டி விகிதம் மேலும் குறைய வாய்ப்புள்ளது. நீண்ட கால பிக்சட் டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதம் குறைய சிறிது காலம் ஆகலாம். ஆனால் குறுகிய முதல் நடுத்தர கால பிக்சட் டெபாசிட்டுகளுக்கான வட்டி குறைப்பு விரைவாக இருக்கும்.
எனவே உங்கள் பிக்சட் டெபாசிட் முதலீட்டை நிர்வகிப்பதற்கான உங்க்ள உத்தியை நெறிப்படுத்த, எதிர்காலத்தில் ஏதேனும் வட்டி குறைப்பு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகளையும் நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டும். உங்களிடம் இன்னும் உபரி நிதி இருந்தால், இப்போதே உங்கள் பிக்சட் டெபாசிட்டை திரும்ப பெற வேண்டிய நேரம் இது. கடந்த நிதிக் கொள்கையில் ரிசாவ் வங்கி வட்டி விகிதத்தை குறைத்த பிறகு, வங்கிகள் ஏற்கனவே பிக்சட் டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதத்தை குறைக்க தொடங்கியுள்ளது. தற்போது ரிசர்வ வங்கி மீண்டும் வட்டி விகிதத்தை குறைத்துள்ளதால் வங்கிகள் மேலும பிக்சட் டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதத்தை குறைக்கும்.
எனவே அதிக வட்டி விகித எஃப்டி-களுக்கான வாய்ப்பு காலப்போக்கில் சுருங்கி விடும் .சில வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு குறிப்பிட்ட காலத்திற்கு அதிக வட்டி விகிதங்களை வழங்கி வந்த சில சிறப்பு எ.ப்டி-களை ஏற்கனவே மூடி விட்டன. எனவே இப்போதே பிக்சட் டெபாசிட்டை திரும்ப எடுப்பது அதிக வட்டியின் பலனை பெற உதவும். குறுகிய முதல் நடுத்தர கால பிக்சட் டெபாசிட்டுகளில் முதலீடு செய்ய விரும்பினால், வேகமாக செயல்படுங்கள், ஏனென்றால் அதிக வட்டி விகிதத்தில் பிக்சட் டெபாசிட் செய்வதற்கான நேரம் குறைவாகவே இருக்கலாம்.
அதிக ரிஸ்க் சகிப்புதன்மை கொண்ட முதலீட்டாளர்கள் தங்கள் பணத்தை சிறு நிதி வங்கிகளில் முதலீடு செய்வது குறித்து பரிசீலனை செய்யலாம். இந்த நிறுவனங்கள் தற்போது மிக அதிக எஃப்டி வட்டி விகிதங்களை வழங்குகின்றன. இருப்பினும் எச்சரிக்கையாக இருப்பது முக்கியம். ரிஸ்க்கை நிர்வகிக்க வைப்புத்தொகை காப்பீடு மற்றும் கடன் உத்தரவாக் கழகம் வழங்கிய?, ஒரு வங்கி கணக்குக்கு ரூ.5 லட்சம் காப்பீட்டு வரம்பை தாண்டி முதலீடு செய்வதை தவிர்க்கவும். ரூ.5 லட்சத்துக்கு அதிகமான தொகைகளுக்கு , உங்கள் முதலீடுகளை வெவ்வேறு வங்கிகளில் போடுவதையோ அல்லது காப்பீட்டு வரம்புக்குள் இருக்க வெவ்வேறு பெயர்கள் அல்லது திறன்களின் கணக்குகளை வைத்திருப்பதையோ கருத்தில் கொள்ளுங்கள்.
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!



Click it and Unblock the Notifications