ரிசர்வ் வங்கி-யின் நாணய கொள்கை குழு கூட்டத்தில் ரெப்போ விகிதத்தை 5.5% ஆக மாற்றமின்றி தொடர்ந்து வைத்திருப்பதால், தனிநபர்களுக்கு நிதி சார்ந்த பல்வேறு தாக்கங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.
ஆர்பிஐ கடந்த மூன்று கூட்டங்களில் மொத்தம் 100 அடிப்படை புள்ளிகள் அல்லது 1 சதவீத வட்டி குறைப்பை அமலாக்கம் செய்துள்ள நிலையில், தற்போது பொருளாதார வளர்ச்சி, பணவீக்க தாக்கத்தை கருத்தில் கொண்டு இக்கூட்டத்தில் ரெப்போ விகிதத்தை குறைக்கவில்லை.

ரெப்போ விகிதத்தை மாறாமல் வைத்திருப்பது ஒரு பிரிவு மக்களுக்கு சாதகமாக அமைந்தாலும், ஒரு பெரும் பிரிவு மக்களுக்கு சவாலாக அமைந்துள்ளது.
வட்டி விகிதம் மாறாமல் இருக்கும் காரணத்தால் குடும்பங்கள் மற்றும் தனிநபர்கள் தங்களுடைய நிதியை திட்டமிடுவதில் சில நன்மைகளையும் சவால்களையும் ஏற்படுத்தும். மேலும் இது வங்கி கடன் விகிதங்கள் மற்றும் முதலீட்டு வாய்ப்புகளை பாதிக்கும் வகையில் அமைந்துள்ளது, இதனால் பொதுமக்கள் தங்கள் நிதி முடிவுகளை மறுசீரமைக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.
ரெப்போ விகிதத்தில் மாற்றம் இல்லாமல் இருப்பதால் வீட்டு மற்றும் வாகன கடன்களின் மாதாந்திர தவணைகள் (EMIs) மாறாமல் நிலையாக இருக்கும் காரணத்தால் உங்களுக்கு கூடுதல் செலவு வராது, இதனால் வழக்கம் போல் உங்கள் வீட்டு பட்ஜெட்டை செய்ய முடியும்.
ஆனால் பல கோடி மக்கள் வங்கி வைப்பு நிதியை நம்பியிருக்கும் வேளையில், ரெப்போ விகிதம் குறையாமல் இருப்பதால் இவர்களுக்கு அடுத்த சில மதங்களுக்கு எவ்விதமான கூடுதல் வட்டி வருமானம் கிடைக்க வாய்ப்பு இல்லை. இதனால் வங்கி வைப்பு நிதியில் முதலீடு செய்யும் மக்கள் மாற்று முதலீட்டை தேட வேண்டிய கட்டாயம் உள்ளது.
எனவே ஆர்பிஐ வட்டி விகிதங்களை உயர்த்தாமல் இருப்பதை ஆபத்தை அதிகரிக்கும் காலம் இல்லை என்பதை உணர்ந்து முதலீட்டை மறுசீரமைப்பு செய்யும் காலமாக கருத வேண்டும்.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications