தங்க பத்திர விற்பனையானது நடப்பு 2022 - 23ம் ஆண்டில் சீரிஸ் III ஆனது டிசம்பர் 19 - 23 அன்று தொடங்கவுள்ளது.
இந்த பத்திரங்கள் டிசம்பர் 27 அன்று வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏனெனில் சர்வதேச அளவில் பணவீக்கம் உச்சத்தில் இருந்து வரும் நிலையில், இது பாதுகாப்பு புகலிடமான தங்கத்திற்கு ஆதரவாக அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
நீண்டகால நோக்கில் லாபம்
சர்வதேச அளவில் நிலவி வரும் நிலையற்ற காரணிகள், ரஷ்யா உக்ரைன் பிரச்சனை, சீனாவில் நிலவி வரும் நெருக்கடி, ரெசசன் அச்சம் என பலவும் கவனிக்க வேண்டிய விஷயங்களில் ஒன்றாக உள்ளது. ஆக தங்கமானது நீண்டகால நோக்கில் லாபம் கொடுக்கும் ஒரு பாதுகாப்பு புகலிடமான பார்க்கப்படுகிறது.
பாதுகாப்பு புகலிடம்
பொதுவாகவே தங்கம் பாதுகாப்பு புகலிடமாக பார்க்கப்படும் நிலையில், அதற்கு வட்டியும் கொடுத்து, விலை நிலவரத்திற்கு ஏற்ப விற்பனை செய்து கொள்ளலாம். வட்டி விகிதம், வரி சலுகை, பாதுகாப்பு, டிஜிட்டல் வடிவம், தங்கத்தினை போல பிணையமாக வைத்துக் கடன் வாங்கிக் கொள்ளலாம் என சலுகைகள் இதில் உள்ளன. அதோடு ரிசர்வ் வங்கி இப்பத்திரங்களை வெளியிடுவதால் பாதுகாப்பானதாகவும் பார்க்கப்படுகிறது.
எப்போது தொடக்கம்?
நிலவி வரும் நெருக்கடியான காலக்கட்டத்தில், இந்த பத்திரங்கள் மிக சிறந்த முதலீட்டு ஆப்சனாக பார்க்கப்படுகிறது. நடப்பு நிதியாண்டமூன்றாவது சீரிஸ் ஆனது, டிசம்பர் 19, 2022 அன்று தொடங்கவுள்ளது. டிசம்பர் 23 அன்று முடிவடையவுள்ளது. ஆக இந்த 5 நாட்கள் தங்கத்தினை டிஜிட்டல் வடிவில், இந்த இறையாண்மை தன்மை கொண்ட தங்க பத்திரங்கள் மூலம் வாங்கிக் கொள்ளலாம்.
விலை எவ்வளவு?
இந்த தங்க பத்திரத்தின் விலையானது இந்திய புல்லியன் அண்ட் ஜுவல்லரி அசோசியேஷன் லிமிடெட் ஆல் நிர்ணயிக்கப்பட்ட 999 தூய்மையான தங்கத்தின், கடைசி மூன்று நாட்களின் சராசரி விலையாகும். இதில் ஆன்லைன் மூலமாகவோ வாங்குபவர்களுக்கு கிராமுக்கு 50 ரூபாய் தள்ளுபடி கிடைக்கும்.
யாரெல்லாம் வாங்கலாம்?
இந்த தங்க பத்திரங்கள் இந்தியர்கள், ஹெச் யு எஃப் (HUFs), அறக்கட்டளைகள் மற்றும் பல்கலைக் கழங்கள், தொண்டு நிறுவனங்கள் என பலரும் வாங்கி வைக்கலாம். இதில் தனி நபர்கள் ஒரு கிராம் முதல் அதிகபட்சமாக 4 கிலோகிராமும், HUFs 4 கிலோ கிராமும் வாங்கிக் கொள்ளலாம். இதே அறக்கட்டளைகள் ஒரு நிதியாண்டுக்கு அதிகபட்சமான 20 கிலோகிராம் வரையில் வாங்கிக் கொள்ளலாம்.
வட்டி எவ்வளவு?
ஆபரணத் தங்கமாக வாங்கினால் அதற்கு வட்டி கிடையாது. மாறாக செய்கூலி, சேதாரம் என கொடுக்க வேண்டியிருக்கும். அதேசமயம் இந்த தங்க பத்திரங்களுக்கு வருடத்திற்கு 2.5% வட்டி விகிதம் முதலீட்டாளர்களுக்கு கிடைக்கும். இந்த வட்டி உங்கள் வருமானமாக சேர்க்கப்பட்டு, அதற்கு நீங்கள் வருமான வரியும் செலுத்த வேண்டியிருக்கும். எனினும் வட்டி வருவாயில் டிடிஎஸ் விதிக்கப்படுவதில்லை.
எப்படி வாங்கலாம்?
இந்த தங்க பத்திரங்கள் இந்திய பங்கு சந்தைகளான என்எஸ்இ மற்றும் பிஎஸ்இயில் வர்த்தகம் செய்யப்படுகிறது. இங்கு வாங்க உங்கள் டீமேட் கணக்கு தேவைப்படும். இங்கு தவிர வங்கிகள், அஞ்சல் அலுவலகம், ஸ்டாக் ஹோல்டிங் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா மூலமும் வாங்கிக் கொள்ளலாம். இன்றைய காலத்தில் வங்கிகளின் டிஜிட்டல் தளத்தின் மூலம் எளிதாக வாங்கிக் கொள்ளலாம்.
கால அவகாசம்
இந்த தங்க பத்திர திட்டத்திற்கு 8 ஆண்டுகள் முதிர்வுகாலம். ஆனால் 5 ஆண்டில் இருந்தே வெளியேறும் விருப்பங்கள் உண்டு. பிசிகல் தங்கத்தினை போன்றே இந்த தங்க பத்திரங்களையும் பிணையமாக வைத்து கடன் பெற்றுக் கொள்ளலாம். இதனை எல் டி வி அடிப்படையில் பெற்றுக் கொள்ளலாம்.
வரி சலுகை?
தங்க பத்திரத்தில் திட்டத்தில் முதலீடு செய்து 8 வருடங்கள் முதிர்வடையும் வரை காத்திருந்தால், நீண்டகால மூலதன ஆதாய வரி விதிக்கப்படுவதில்லை. ஆனால் முன் கூட்டியே உங்கள் தங்கப் பத்திரத்தை எக்ஸ்சேஞ்சில் விற்றுக் கொள்ளலாம் (அல்லது) குறைந்தது ஐந்து வருடம் தாண்டினால் உங்கள் தங்கப் பத்திரத்தை நீங்கள் பணமாக மாற்றலாம். ஆனால் இந்த இரண்டிலும் கேபிட்டல் டேக்ஸ் உண்டு.
கவர்ச்சிகரமான முதலீடு
ஆரம்பத்தில் தங்க பத்திர திட்டம் என்பது தங்கத்தின் தேவையினை குறைக்கும் பொருட்டு கொண்டு வரப்பட்ட ஒரு திட்டமாகத் தான் இருந்தது. ஆனால் தொடங்கிய சிறிது காலத்திலேயே மக்களிடையே நல்ல வரவேற்பினை பெற்றது. இந்த நிலையில் தற்போது சிறந்த ஒரு கவர்ச்சிகரமான முதலீடாகவும் பார்க்கப்படுகிறது. இதன் மூலம் கணிசமான வருமானம் தங்கம் விலை அதிகரிப்பதற்கு ஏற்ப கிடைக்கும் என்பதால், பெண் குழந்தைகளின் திருமணம் போன்ற நிகழ்வுகளுக்காக இதில் சேமிக்கலாம்.
அடுத்த சீரிஸ் எப்போது?
நான்காவது சீரிஸ் தங்க பத்திர விற்பனையானது மார்ச் 6 - 10, 2023ல் தொடங்கவுள்ளது. இது மார்ச் 14, 2023ல் வெளியிடப்படவுள்ளது.
More From GoodReturns

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

ஆரம்பமே அட்டகாசம்: நிதியாண்டின் முதல் நாளில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு சர்ப்பிரைஸ்!!

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

சரிவிலேயே இருக்கும் இந்திய பங்குச்சந்தை இந்த வாரமாவது மீண்டு வருமா?

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

RBI அதிரடி நடவடிக்கை.. இனி பார்த்துக்கொண்டு சும்மா இருக்க முடியாது..!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை



Click it and Unblock the Notifications