பொதுவாக இந்திய ரிசர்வ் வங்கி, கடனுக்கான வட்டி விகிதம் தொடர்பாக முடிவு எடுக்கும்போது, நாட்டின் சில்லரை பணவீக்க நிலவரத்தை முக்கியமாக கருத்தில் கொள்ளும். கடந்த சில மாதங்களாக சில்லரை விலை பணவீக்கம் குறைந்த வருகிறது. குறிப்பாக, இந்தியாவின் சில்லரை விலை பணவீக்கம் கடந்த ஏப்ரல் மாதத்தில் 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 3.16 சதவீதமாக குறைந்துள்ளது.
பணவீக்கம்
கடந்த ஏப்ரலில் பணவீக்கம் குறைந்தன் மூலம் தொடர்ந்து 3வது மாதங்களாக சில்லரை பணவீக்கம் ரிசர்வ் வங்கியின் நடுத்தர கால சில்லரை விலை பணவீக்க கட்டுப்பாட்டு இலக்கான 4 சதவீதத்துக்கும் குறைவாகவே உள்ளது. சில்லரை விலை பணவீக்கம் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டு இலக்கை காட்டிலும் குறைவாக உள்ளது மற்றும் வரும் காலங்களிலும் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால், பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் வகையில் ரிசர்வ் வங்கி முக்கிய கடனுக்கான வட்டி விகிதத்தை குறைக்க அதிக வாய்ப்பு உள்ளது என்று நிபுணர்கள் தெரிவித்தனர்.

இந்த சூழ்நிலையில், குறைந்த பணவீக்கம் மற்றும் வளர்ச்சி குறைவு போன்ற காரணங்களால் இந்திய ரிசர்வ் வங்கி தீவிரமான வட்டி குறைப்பு நடவடிக்கையை மேற்கொள்ள வாய்ப்புள்ளதாக மோர்கன் ஸ்டான்லி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பணவீக்கம் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் அதேவேளையில் மெதுவான வளர்ச்சியை கருத்தில் கொண்டு இந்திய ரிசர்வ் வங்கி தீவிரமான வட்டி குறைப்பு சூழற்சியை செயல்படுத்தும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.
ரெப்போ ரேட்
இந்திய ரிசர்வ் வங்கி முக்கிய கடனுக்கான வட்டியை (ரெப்போ ரேட்) மொத்தம் 1 சதவீதம் குறைத்து 5.5 சதவீதமாக குறைக்கும் என்று எதிர்பார்க்கிறோம். உலக பொருளாதாரம் எதிர்பார்த்ததை விட அதிகமாக குறைந்தாலோ அல்லது இந்தியாவில் பணவீக்கம் வேகமாக மிதமானக இருந்தாலோ, ரிசர்வ் வங்கி தற்போது திட்டமிடப்பட்டுள்ளதை தாண்டி வட்டி விகித குறைப்பு சுழற்சியை நீட்டிக்க முடியும்.
வட்டி விகிதங்களை குறைப்பதுடன், பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக ரிசர்வ் வங்கி பிற கருவிகளையும் பயன்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நிதி அமைப்பில் போதுமான பணப்புழக்கத்தை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் மற்றும் கடன் வளர்ச்சியை அதிகரிக்க விதிமுறைகளை தளர்த்தவது ஆகியவையும் இதில் அடங்கும்.
மத்திய பட்ஜெட்
நிதிக் கொள்கையை பொறுத்தவரை, மத்திய பட்ஜெட்டில் கூறியுள்ளபடி, நிதி ஒருங்கிணைப்புக்கான திட்டமிடப்பட்ட பாதையில் அரசாங்கம் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வளர்ச்சியை தூண்டுவதற்கு மூலதன செலவினங்களை அதிகரிப்பதில் கவனம் செலுத்தப்படும்.
பணவியல் கொள்கை பொருளாதாரத்தை தொடர்ந்து ஆதரிக்கும் அதேவேளையில், மெதுவான வளர்ச்சியின் தாக்கத்தை அது முழுமையாக ஈடுசெய்யாமல் போகலாம். உள்நாட்டு பொருளாதார கவலைகள் அதிகரிக்கும் போது ரிசர்வ் வங்கியின் முயற்சிகள் முதல் பாதுகாப்பாக செயல்படும்.
கடன் வளர்ச்சி
பொருளாதார தேவைகளை பொறுத்து, போதுமான பணப்புழக்கத்தை பராமரித்தல் மற்றும் பெரும் விவேகம் கொண்ட தளர்வு மூலம் கடன் வளர்ச்சியை ஆதரித்தல் உள்ளிட்ட கூடுதல் நடவடிக்கைகளை எடுப்பதில் ரிசர்வ் வங்கி நெகிழ்வாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications