மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்பதும் ஒவ்வொரு ஆண்டும் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யும் தொகை அதிகரித்து வருகிறது என்பதும் தெரிந்ததே.
மேலும் தொலைக்காட்சிகளில் மியூச்சுவல் ஃபண்டுகளின் விளம்பரங்களும் அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் மியூச்சுவல் ஃபண்ட் திட்டம் தொடர்பான ஆவணங்களை கவனமாக படியுங்கள் என்று ஒவ்வொரு விளம்பரத்திலும் வரும் நிலையில் இந்த ஆவணங்கள் என்றால் என்ன? என்பது குறித்து தற்போது பார்ப்போம்.
விளம்பரம்
முதலில் ஒரு நிறுவனத்தின் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்வதற்கு முன்னர் அந்த நிறுவனத்தின் ஆவணங்களை முழுமையாக படித்து தெரிந்து கொள்ள வேண்டும் என்பது முக்கியமான கடமையாகும்.
3 வகை ஆவணங்கள்
மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்வதற்கு முன் மூன்று முக்கியமான ஆவணங்களை படிக்க வேண்டும். அவை முக்கிய தகவல் ஆவணம், திட்ட தகவல் ஆவணம் மற்றும் கூடுதல் தகவல் அறிக்கை என்பது குறிப்பிடத்தக்கது. முதலீட்டாளர்களுக்காக தயாரிக்கப்பட்டுள்ள இந்த ஆவணங்கள் செபியின் ஒப்புதல் பெற்று முதலிட்டாளர்களின் பார்வைக்கு வைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆவணங்களில் என்னென்ன தகவல்கள் இருக்கும் என்பதை தற்போது பார்ப்போம்.
அடிப்படை அம்சங்கள்
மியூச்சுவல் ஃபண்ட் ஆவணத்தில் இருக்கும் முக்கிய அம்சங்களான முதலீட்டு நோக்கம், முதலீட்டு கொள்கைகள், சொத்து ஒதுக்கீட்டு வடிவம், முதலீட்டிற்கான கட்டணங்கள், முதலீட்டை திரும்ப பெறுதலுக்கான விதிகள் ஆகிய அடிப்படை அம்சங்கள் இருக்கும்.
நிதி மேலாண்மைக் குழுவின் விவரங்கள்
மேலும் முதலீட்டு திட்டத்தில் உள்ள ரிஸ்க்குகள், ரிஸ்க்குகளை குறைப்பதற்கான வழிமுறைகள் ஆகியவை இந்த ஆவணத்தில் இருக்கும். ரிஸ்க்கின் தன்மையை அறிந்தபின் முதலீட்டாளர்கள் முதலீடு செய்ய வேண்டும்
திட்ட விவரங்கள்
மேலும் ஒரு மியூச்சுவல் ஃபண்டின் விற்பனை கட்டணங்கள், திட்டம் மற்றும் விருப்பத்தேர்வுகள், கடந்தகால செயல்திறன், எத்தனை ஆண்டுகள் முதலீடு போன்ற திட்ட விவரங்கள் இந்த ஆவணங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும்.
முதலீட்டாளர் சேவை மையங்கள்
மேலும் முதலீட்டாளர் சேவை மையங்கள், அதிகாரப்பூர்வ மையங்கள் இருக்கும் இடங்கள், நிறுவனத்தின் கிளைகளின் பட்டியல் போன்ற விவரங்களும் இருக்கும்
கட்டமைப்பு
மேலும் ஒரு மியூச்சுவல் ஃபண்டின் கட்டமைப்பு, அந்நிறுவனத்தின் ஸ்பான்சர்கள், நிறுவனத்திற்கு உள்ள சொத்து மதிப்பு, அறங்காவலர்கள், பதிவாளர்கள், பாதுகாவலர்கள், வங்கி அதிகாரிகள், தணிக்கையாளர்கள் மற்றும் சட்ட ஆலோசகர்கள் ஆகிய அனைத்து விவரங்களும் ஆவணங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும்
நிதி மற்றும் சட்டப் பிரச்சினைகள்
மேலும் முதலீட்டாளர்களின் விண்ணப்பப்படிவத்துடன் இணைக்கப்பட்டிருக்கும் KIM படிவத்தில் நிதி மற்றும் சட்டப்பிரச்சனைகள் குறித்தும் அதற்கான தீர்வுகள் குறித்தும் குறிப்பிடப்பட்டிருக்கும். ஒரு திட்டத்தில் முதலீடு செய்வதற்கு முன்பாக முதலீட்டாளர் அறியவேண்டிய அனைத்து முக்கியத் தகவல்களும் ஒவ்வொரு விண்ணப்பப் படிவத்துடன் KIM இணைக்கப்பட்டிருக்கும்.


Click it and Unblock the Notifications