சென்னை: இந்தியர்களுக்கு சொந்தமாக ஒரு வீடு வாங்க வேண்டும் என்பது வாழ்நாள் கனவாக இருக்கிறது. படித்து முடித்துவிட்டு வேலைக்கு வரக்கூடிய இளைஞர்களிடமும் இளம் தம்பதிகளும் பெரும்பாலானவர்கள் கூறுவது முதலில் சொந்தமாக ஒரு வீட்டினை வாங்கி விடுங்கள் என்பதுதான்.
ஆனால் தற்போது ரியல் எஸ்டேட் விலை இந்தியாவில் பல மடங்கு உயர்ந்திருக்கிறது. எனவே சொந்தமாக வீடு வாங்குவது என்பதே பலருக்கும் கனவாக மாறிவிடும் அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில் சொந்தமாக வீடு வாங்குவது நல்ல முடிவா அல்லது வாடகை வீட்டிலேயே இருப்பது நல்ல முடிவா என்பது குறித்து ஹர்திக் ஜோசி என்ற நிதி ஆலோசகர் விளக்கம் தந்துள்ளார்.

இது தொடர்பாக தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டிருக்கும் நிதி ஆலோசகர் ஹர்திக் ஜோசி, சில சமயங்களில் மக்கள் நான் கண்டிப்பாக ஒரு வீடு வாங்க வேண்டும் எனக் கூறுவதை நிறுத்திவிட்டு சொந்தமாக வீடு வாங்குவது உண்மையிலேயே சிறந்ததா என்ற கேள்வியை எழுப்ப வேண்டும் எனக் கூறியிருக்கிறார்.
சொந்த வீடு என்பது நம்முடைய சமூக அந்தஸ்துக்கும் வழிவகுக்கிறது. ஆனால் நிதி ரீதியான தரவுகளை பார்க்கும்போது நம்மிடம் ஒரு கணிசமான தொகை டவுன் பேமெண்டாக செலுத்துவதற்கு இருக்கிறது எனும் போது கண்டிப்பாக சொந்தமாக வீடு வாங்கலாம் என அறிவுரை வழங்குகிறார். சென்னை, பெங்களூர் போன்ற நகரங்களில் ஒரு சாதாரண பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் இரண்டு படுக்கையறை கொண்ட ஒரு வீட்டை வாங்க வேண்டும் என்றால் கூட 1.5 கோடி ரூபாய் தேவைப்படுகிறது.
இந்த 1.5 கோடி ரூபாயில் , 30 லட்சம் ரூபாயை நாம் டவுன் பேமெண்டாக செலுத்தி விடுகிறோம் என்றால் மீதமுள்ள 1.2 கோடி ரூபாய்க்கு நாம் வீட்டுக் கடன் வாங்குகிறோம். இந்த வீட்டு கடனுக்கு 9% தொகையை வட்டியாக செலுத்துகிறோம் எனும் போது இந்த வட்டி தொகையோடு சேர்த்து நாம் 20 ஆண்டுகளில் வங்கிக்கு திரும்ப செலுத்தக்கூடிய தொகை 2.5 கோடி ரூபாய். நாம் வாங்கிய கடனை விட 100 சதவீதத்திற்கும் மேல் அதிகமான தொகையை தான் நாம் திரும்ப செலுத்துகிறோம்.
இதே மதிப்பு கொண்ட ஒரு வீட்டில் நம் வாடகைக்கு செல்கிறோம் என்றால் மாதம் 40 ஆயிரம் ரூபாயை செலுத்த வேண்டியிருக்கும். மாதம் 40 ஆயிரம் ரூபாய் வாடகையாக செலுத்தி விட்டு கையில் இருக்கும் 30 லட்சம் ரூபாய் பணத்தை முதலீடு செய்யும் போது 20 ஆண்டுகளில் இந்த 30 லட்சம் ரூபாய் பணம் 3 கோடி ரூபாயாக உயர்ந்திருக்கும் என அவர் கூறுகிறார்.
எனவே சொந்தமாக வீடு வாங்குவதா அல்லது வாடகை வீட்டிலேயே இருப்பதா என்பது தனி நபர்களின் தேவைகளையும் முன்னுரிமைகளையும் பொருத்ததாக இருக்கும். நமது பெயரில் ஒரு சொத்து வேண்டும் கணிசமான தொகை நம்மிடம் டவுன் பேமெண்டாக செலுத்துவதற்கு இருக்கிறது எனும்பட்சத்தில் கண்டிப்பாக வீடு வாங்க செல்லலாம். ஆனால் என்னிடம் பணம் இல்லை நான் பெரும்பாலான தொகைக்கு வங்கி கடன் தான் வாங்க போகிறேன் என்ற சூழலில் இருப்பவர்கள் வாடகை வீட்டில் இருக்கும் முடிவை எடுத்துக் கொள்ளலாம் என சொல்லப்படுகிறது.
More From GoodReturns

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

GPay யூஸ் பண்றீங்களா? PocketMoney ஐகான் கிளிக் பண்ணா மொத்த பணமும் போய்டுமா?வைரலாகும் வாட்ஸ்அப் ஆடியோ



Click it and Unblock the Notifications