சென்னை: மிடில் கிளாஸ் மக்களின் பெரும் கனவாக இருக்கிறது சொந்த வீடு. தன்னுடைய வாழ்நாளில் எப்படியாவது ஒரு சொந்த வீட்டை வாங்கி விட வேண்டும் அல்லது கட்டிவிட வேண்டும் என வாழ்நாள் சம்பளத்தையே அர்ப்பணிக்க தயாராக இருக்கின்றனர். இவ்வாறு சொந்த வீடு வாங்கும் மிடில் கிளாஸ் மக்களுக்கு வங்கிகள் வழங்கக்கூடிய வீட்டுக் கடன்கள் தான் பெரிய வரப்பிரசாதமாக இருக்கின்றன .
வங்கியில் வீட்டு கடன் வாங்கி விட்டால் நம் மாதம் தோறும் அந்த தொகையை வட்டியோடு சேர்த்து இஎம்ஐ-ஆக செலுத்தினால் போதும். ஆனால் இந்த வீட்டு கடன் என்பது பல சமயங்களில் பலருக்கும் மிகப்பெரிய ஒரு நிதிச் சுமையாக மாறிவிடுகிறது. இஎம்ஐ செலுத்த வேண்டும் என்பதற்காகவே வேறு வழியில்லாமல் தொடர்ந்து பதினைந்து முதல் இருபது ஆண்டுக்கான வேலைக்கு செல்ல வேண்டிய கட்டாயத்தில் அனைவரும் இருக்கின்றனர். ஆனால் இந்த ஒரு சிம்பிளான டிரிக்கை ஃபாலோ செய்தால் உங்கள் வீட்டுக் கடனுக்கு நீங்கள் வட்டியே செலுத்த வேண்டிய தேவை இருக்காது.

பெரும்பாலான நிதி ஆலோசகர்கள் முன்வைக்கக்கூடிய ஒரு யோசனை தான் இது. இதை கணக்கீடு செய்து பார்த்தால் உங்களுக்கே நிச்சயம் இது வொர்க் அவுட் ஆகும் என தோன்றும். நீங்கள் வீட்டு கடன் வாங்கும் அதே நாளில் மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் எஸ்ஐபி முதலீட்டையும் தொடங்க வேண்டும். கடனை திரும்ப செலுத்தும் காலத்தை அதிகமாக தேர்வு செய்துவிட வேண்டும்.
உதாரணமாக 7.5 சதவீதம் வட்டியோடு நீங்கள் 30 லட்சம் ரூபாய் வீட்டுக் கடன் வாங்குகிறீர்கள் என வைத்துக்கொள்வோம். அடுத்து 30 ஆண்டுகளுக்கு கடனை நீங்கள் திரும்ப செலுத்தும் காலமாக தேர்வு செய்ய வேண்டும். கடன் திரும்ப செலுத்தும் காலம் அதிகமானால் மாதாந்திர இஎம்ஐ தொகை குறையும். இந்த கடன் தொகைப்படி உங்களின் மாதாந்திர இஎம்ஐ தொகை 20.976 ரூபாய். அடுத்த 30 ஆண்டுகளில் நீங்கள் வட்டியாக செலுத்திய தொகை மட்டுமே 45.51 லட்சம் ரூபாய்.

அதாவது நீங்கள் வாங்கிய கடன் தொகை 30 லட்சம் , வட்டி 7.5% , கடன் திரும்ப செலுத்தும் காலம் 30 ஆண்டுகள், மாதாந்திர இஎம்ஐ 20,976 ரூபாய். நீங்கள் செலுத்தும் மொத்த வட்டியே 45.51 லட்சம் ரூபாய். இந்த கடன் வாங்கிய அதே மாதத்தில் இருந்து நீங்கள் மாதம் 1700 ரூபாயை மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் எஸ்ஐபி முறையில் முதலீடு செய்ய வேண்டும். ஆண்டுக்கு சராசரியாக 12 சதவீத லாபம் தரக்கூடிய ஒரு மியூச்சுவல் ஃபண்டு திட்டத்தில் உங்களுடைய கடன் செலுத்தும் காலமான அந்த 30 ஆண்டுகளுக்கும் நீங்கள் மாதம் 1700 ரூபாயை முதலீடு செய்தால் 30 ஆண்டுகள் முடிவில் நீங்கள் செய்த முதலீடு 6.12 லட்சம் ரூபாய் உங்களுக்கு திரும்ப கிடைக்கக்கூடிய தகை 52.37 லட்சம்.
அதாவது நீங்கள் செய்த முதலீட்டை விட கூடுதலாக உங்களுக்கு 46 .25 லட்சம் ரூபாய் கிடைக்கிறது. இது கிட்டத்தட்ட நீங்கள் வீட்டு கடனுக்கு செலுத்திய வட்டி தொகை . அதாவது வீட்டுக் கடன் வாங்கும் அதே வேளையில் உடன் ஒரு எஸ்ஐபி திட்டத்தையும் சேர்ந்து தொடங்கிவிட்டோம் என்றால் நாம் செலுத்திய வட்டி தொகை நமக்கு திரும்ப பெற்று தந்துவிடும். எனவே தான் பெரும்பாலான முதலீட்டு ஆலோசகர்கள் வீட்டுக்கடன் வாங்கும் போது அதோடு சேர்த்து ஒரு எஸ்ஐபி முதலீட்டையும் தொடங்கி விடுங்கள் என்று அறிவுரை வழங்குகின்றனர்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications