பங்குச் சந்தையில் ஒருவர் நேரடியாக முதலீடு செய்வதை காட்டிலும் மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் வாயிலாக முதலீடு செய்வது சிறந்தது என்று நிபுணர்ள் கூறுகின்றனர். சாமானிய மனிதர்களான சில்லரை முதலீட்டாளர்கள் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் முதலீடு செய்யும் எஸ்ஐபி முறையில் மியூச்சுவல் பண்ட் திட்டங்களில் முதலீடு செய்து வருகின்றனர்.
இது முதலீடு செய்வதற்கு எளிதான வழியாகவும், ரிஸ்க்கும் குறைவு என்பதால் கடந்த சில ஆண்டுகளாக எஸ்ஐபி முறையில் மியூச்சுவல் பண்ட் திட்டங்களில் முதலீடு செய்வது அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தற்போது முதலீட்டாளர்கள் எஸ்ஐபி கணக்குகளை மூடி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த சில மாதங்களாக பங்குச் சந்தைகள் சரிவு பாதையில் இருப்பது, பங்குகளின் விலை கடுமையான வீழ்ச்சி கண்டு வருவது போன்றவை முதலீட்டாளர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை அசைத்தும் பார்த்துள்ளது.
இதன் எதிரொலியாக கடந்த ஜனவரி மாதத்தில் முதலீட்டாளர்கள் கணிசமான எஸ்ஐபி திட்டங்களை நிறுத்தி உள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், பல முதலீட்டாளர்கள் தங்கள் போர்ட்போலியோக்களை மறுசீரமைத்து வருவது, சிறிய எஸ்ஐபிகளை பெரியவைகளாக ஒருங்கிணைக்கின்றனர் அல்லது வெவ்வேறு முதலீட்டு திட்டங்களுக்கு மாறி வருகின்றனர்.
இது தவிர மியூச்சுவல் பண்ட் விநியோகஸ்தர்கள் வழக்காக மேற்கொள்ளும் வாடிக்கையாளர் எஸ்ஐபிகளை மறு சமநிலைப்படுத்தும் நடவடிக்கையும், எஸ்ஐபி கணக்குகள் நிறுத்தம் அதிகரிப்புக்கு ஒரு காரணம். 2025 ஜனவரி நிலவரப்படி, செயலில் உள்ள எஸ்ஐபி கணக்குகளின் எண்ணிக்கை10.27 கோடியாக சரிவடைந்துள்ளது. இது முந்தைய டிசம்பர் மாதத்தை காட்டிலும் 0.5 சதவீதம் குறைவாகும். அந்த மாதத்தில் எஸ்ஐபி கணக்குகளின் எண்ணிக்கை 10.32 கோடியாக இருந்தது.
கடந்த ஜனவரியில் புதிய பதிவுகளுக்கு (புதிய எஸ்ஐபி கணக்குகள்) எதிராக நிறுத்தப்பட்ட அல்லது காலாவாதியான எஸ்ஐபிகள் விகிதம் 109 சதவீதமாக உள்ளது. இது 2024 ஏப்ரல் பிறகான அதிகபட்ச அளவாகும். இந்திய பரஸ்பர நிதிகள் சங்கம் (ஏஎம்எஃப்ஐ) தகவலின்படி, 2025 ஜனவரி இறுதி நிலவரப்படி மொத்த எஸ்ஐபி நிர்வகிக்கும் சொத்து மதிப்பு ரூ.13.2 லட்சம் கோடியாக குறைந்துள்ளது. இது முந்தைய டிசம்பர் மாத இறுதியில் ரூ.13.6 லட்சம் கோடியாக இருந்தது.
எஸ்ஐபி கணக்குகள் நிறுத்தம் அதிகரித்துள்ளபோதிலும், எஸ்ஐபி வாயிலான வரத்து தொடர்ந்து சிறப்பாகவே உள்ளது. கடந்த ஜனவரியில் எஸ்ஐபி வாயிலான மொத்த முதலீடு ரூ.26.400 கோடியை தொட்டது. இது சென்ற ஆண்டை காட்டிலும் 40 சதவீதம் அதிகமாகும். கடந்த ஆண்டில் எஸ்ஐபி வாயிலான முதலீடு ரூ.18.838 கோடியாக இருந்தது.
Story written by: Subramanian
More From GoodReturns

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

EMI-யும் கட்டியாச்சு,லாபமும் பார்த்தாச்சு! ரூ8 கோடியை வைத்து ரூ10 கோடி வீட்டை வாங்கிய சாதுர்ய நபர்!

போர் பதற்றத்திலும் லாபம் தரும் பக்கா பிளான்! பங்குச்சந்தை வீழ்ச்சியில் நீங்கள் கவனிக்க வேண்டிய SIP!

5 ஆண்டுகளில் ரூ.1 லட்சத்தை ரூ.25 லட்சமாக மாற்றிய பென்னி ஸ்டாக்: உங்க போர்ட்போலியோவுல இருக்கா?

பங்குச்சந்தை ஏறினாலும், இறங்கினாலும் கண்டுக்காதீங்க: சென்செக்ஸ் சொல்லி தரும் பாடம் இது தான்!!

மாதம் ரூ.4 லட்சம் சம்பளம் தரும் வேலையை விட்டு ரோட்டு கடை போட்ட டெக்கி..!! சாதித்தாரா? சறுக்கினாரா?

சரிவிலேயே இருக்கும் இந்திய பங்குச்சந்தை இந்த வாரமாவது மீண்டு வருமா?

HDFC பங்கினை வாங்க இது பொன்னான நேரமா? - பங்கு மதிப்பு சரிந்துள்ள நிலையில் நிபுணர்கள் டிப்ஸ்

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

ஆரம்பமே அட்டகாசம்: நிதியாண்டின் முதல் நாளில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு சர்ப்பிரைஸ்!!

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!



Click it and Unblock the Notifications