ஓய்வுக்குப் பிறகு யாரையும் சார்ந்திருக்காமல் வாழ வேண்டுமானால் அதற்கு கண்டிப்பாக பணி புரியும் போது சிறு தொகையை சேமித்து வைப்பது முக்கியம். அதோடு நீங்கள் சேமிக்கும் திட்டம் உங்களுக்கு நீண்ட காலம் பலனளிக்கக் கூடியதாக இருக்க வேண்டும். அப்படி ஒரு திட்டத்தை கண்டுபிடித்து விட்டால் வேலையை இழந்து, வயது முதிர்வின் காரணமாக வீட்டில் இருக்கும்போது தேவையான செலவுகளை நாமே பார்த்துக் கொள்ள முடியும்.
SIP திட்டம் என்றால் என்ன?: ஓய்வுக்காக திட்டமிட நினைப்பவர்கள் SIP திட்டத்தை பரிசீலிக்கலாம். எஸ்ஐபி திட்டம் என்பது மியூச்சுவல் பண்டுகளில் முதலீடு செய்யும் ஒரு திட்டமாகும். இந்த திட்டத்தில் முதலீட்டாளர்கள் ஒரு சிறு தொகையை மாதாந்திர அல்லது அரையாண்டுக்கு ஒரு முறை என தங்களின் திறனுக்கு ஏற்ப முதலீடு செய்ய முடியும். இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யும்போது கூட்டு வட்டியின் மூலம் அதிக வருமானத்தைப் பெறலாம். SIP திட்டம் என்றால் என்ன? என்பதை ஒரு உதாரணத்தோடு பார்ப்போம்.

SIP திட்டத்தில் ரூ. 3 கோடி, ரூ. 4 கோடி மற்றும் ரூ. 5 கோடி ஓய்வூதிய வருமானம் பெற வேண்டுமானால் அதற்கு எப்படி சேமிக்க வேண்டும் என்பது குறித்து பார்ப்போம்.
ரூ. 3 கோடி வருமானம்: ரூ. 3 கோடி வருமானம் பெற வேண்டுமானால் அதற்கு நீங்கள் மாத மாதம் ரூ. 15,000 எஸ்ஐபி திட்டத்தில் முதலீடு செய்ய வேண்டும். இதை நீங்கள் தொடர்ந்து 27 ஆண்டுகளுக்கு செய்ய வேண்டும். 27 ஆண்டுகள் கழித்து மொத்தமாக 48,60,000 ரூபாய் முதலீடு செய்திருப்பீர்கள். இதற்கு வருடாந்திர வருமானமாக 12 சதவீதம் கிடைத்தால் உங்களுக்கு 2,75,74,694 ரூபாய் வட்டி கிடைக்கும். வட்டியையும் முதலீட்டையும் சேர்த்து ரூ.3,24,34,694 பெற்றுக் கொள்ளலாம்.
ரூ. 4 கோடி வருமானம்: ரூ. 4 கோடி வருமானம் பெற வேண்டுமானால் அதற்கு நீங்கள் மாத மாதம் ரூ. 15,000 எஸ்ஐபி திட்டத்தில் முதலீடு செய்ய வேண்டும். தொடர்ந்து 29 ஆண்டுகளுக்கு முதலீடு செய்ய வேண்டும். 29 ஆண்டுகள் கழித்து மொத்தமாக 52,20,000 ரூபாய் முதலீடு செய்திருப்பீர்கள். இதற்கு வருடாந்திர வருமானமாக 12 சதவீதம் கிடைத்தால் உங்களுக்கு 3,58,72,054 ரூபாய் வட்டி கிடைக்கும். வட்டியையும் முதலீட்டையும் சேர்த்து ரூ.4,10,92,054 பெற்றுக் கொள்ளலாம்.
ரூ. 5 கோடி வருமானம்: ரூ. 5 கோடி வருமானம் பெற வேண்டுமானால் அதற்கு நீங்கள் மாத மாதம் ரூ. 15,000 எஸ்ஐபி திட்டத்தில் தொடர்ந்து 31 ஆண்டுகளுக்கு முதலீடு செய்ய வேண்டும். 31 ஆண்டுகள் கழித்து மொத்தமாக 55,80,000 ரூபாய் முதலீடு செய்திருப்பீர்கள். இதற்கு வருடாந்திர வருமானமாக 12 சதவீதம் கிடைத்தால் உங்களுக்கு 4,63,71,847 ரூபாய் வட்டி கிடைக்கும். வட்டியையும் முதலீட்டையும் சேர்த்து ரூ.5,19,51,847 பெற்றுக் கொள்ளலாம்.
மேலே கூறப்பட்டுள்ள கணக்கீடு வெறும் உதாரணத்திற்கு மட்டுமே. நீங்கள் தேர்ந்தெடுக்கும் மியூச்சுவல் ஃபண்டை பொறுத்து உங்களுக்கு வருமானமும் மாறுபடலாம். எஸ்ஐபி திட்டங்கள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை. எனவே எந்த ஒரு முதலீட்டு முடிவும் எடுப்பதற்கு முன்பு உங்களுடைய நிதி ஆலோசகரை அணுகி.. ஆலோசனை பெற்று சுய விருப்பத்தின் பேரில் முதலீடு செய்யுங்கள்!
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
More From GoodReturns

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

கதறி கதறி அழும் வெள்ளி முதலீட்டாளர்கள்.. போட்ட காசு மொத்தமும் போச்சு..!! அடுத்தது என்ன..?

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!

SIP முதலீடு செஞ்சா கோடிகளில் பணம் கிடைக்குமா? நம்ம எல்லாரும் செய்யுற தப்பு இது தான்..!!



Click it and Unblock the Notifications