இன்னும் 20 ஆண்டுகளில் பணி ஓய்வு பெற போறீங்களா? மாசம் உங்களுக்கு எவ்வளவு பணம் தேவை தெரியுமா?

பணி ஓய்வு காலத்தில் மன அமைதியுடனும் நிம்மதியாகவும் வாழ்வதற்கு ஒரு கணிசமான தொகை ஓய்வூதியமாக கிடைக்க வேண்டும். ஏனெனில் அந்த சமயத்தில் நமக்கு வருமானம் இருக்காது ஆனால் மருத்துவ செலவுகள் உள்ளிட்டவை அதிகமாக இருக்கும்.

நீங்கள் ஓய்வு பெற இன்னும் 15 அல்லது 20 ஆண்டுகள் இருக்கும் பட்சத்தில், இன்று நீங்கள் மாதம் 50,000 ரூபாய் செலவு செய்கிறீக்ள் என வைத்து கொள்வோம். இன்று நாம் கணக்கிடும் 50000 ரூபாய் என்பது ஓய்வு காலத்தில் அதே மதிப்பில் இருக்காது. இதற்கு முக்கிய காரணம் பணவீக்கம்.

இன்னும் 20 ஆண்டுகளில் பணி ஓய்வு பெற போறீங்களா? மாசம் உங்களுக்கு எவ்வளவு பணம் தேவை தெரியுமா?

இந்தியாவில் பணவீக்க விகிதம் சராசரியாக 6% என வைத்து கொண்டால், இன்று 50, 000 ரூபாயாக இருக்கும் மாத செலவு, ஆண்டுக்கு 6% பணவீக்கம் கொண்டு கணக்கிடப்பட்டால், 15 ஆண்டுகளில் சுமார் 1.19 லட்சமாக மாறும், 20 ஆண்டுகளில் சுமார் 1.6 லட்சமாக மாறும். அதாவது பணவீக்கம் காரணமாக இப்போது மாதம் 50,000 ரூபாயாக இருக்கும் செலவு இன்னும் 15 ஆண்டுகளில் 1.19 லட்சமாகவும், 20 ஆண்டுகளில் 1.60 லட்சமாகவும் உயரும்.

Also Read

எனவே ஓய்வு காலத்தில் உங்களுக்கு தேவையான பணத்தை பணவீக்கத்திற்கு ஏற்ப திட்டமிட வேண்டும்.முதலில் நீங்கள் ஓய்வுபெறும் வயதை முடிவு செய்யுங்கள் அந்த வகையில் உங்களின் தற்போதைய வயது, எத்தனை ஆண்டுகளுக்கு பணம் முதலீடு செய்ய வேண்டும் என்பதை எல்லாம் தீர்மானித்துவிடலாம். 20 ஆண்டுகளுக்கு பின் நீங்கள் பணிஓய்வு பெறுகிறீர்கள் என வைத்து கொண்டால் அப்போது உங்களிடம் சுமார் 6 கோடி ரூபாயாவது இருக்க வேண்டும். அப்போது தான் இப்போது வாழும் தரத்திலான ஒரு வாழ்க்கையை உங்களால் வாழ முடியும்.

மேலும் 30 வயதில் முதலீட்டை தொடங்குபவர்கள் மாதந்தோறும் சிறிய தொகையை முதலீடு செய்தால் போதும். ஆனால், 45 வயதில் தொடங்குபவர்களுக்கு அதே இலக்கை அடைய அதிகமான முதலீடு தேவைப்படும். இதனால் தான் சிறு வயதிலேயே ஓய்வுகால திட்டமிடலை தொடங்கி முதலீட்டை தொடங்க வேண்டும் என்கின்றனர் நிபுனர்கள். எனவே, தாமதிக்காமல் முன்கூட்டியே திட்டமிட்டு, கூட்டு வட்டியின் சக்தியை பயன்படுத்துங்கள்.

Recommended For You

நம் பணம் நீண்ட காலம் வளர்ச்சி அடைய வாய்ட்ப்பு தந்தால் நாம் எதிர்பார்ப்பத்தை விட அதிக தொகை கைக்கு வந்து சேரும், எனவே இயன்ற வரை இளம் வயதிலேயே ஓய்வுகாலத்திற்கான முதலீட்டை தொடங்கினார், உங்கள் ஓய்வு காலத்தை மகிழ்ச்சியானதாகவும் நிதி பாதுகாப்பானதாகவும் மாற்றி கொள்ள முடியும்.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+