சென்னை: உலக அளவில் தங்கம், வெள்ளிக்கான டிமாண்ட் எப்போதுமே இருந்து கொண்டு தான் இருக்கிறது. குறிப்பாக முதலீட்டு அடிப்படையில் பார்த்தால் தங்கம் மிகவும் பாதுகாப்பான முதலீடாக பார்க்கப்படுகிறது.
எனவே தான் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரமற்ற தன்மை ஏற்படும் போதெல்லாம் தங்கத்தை நோக்கி முதலீடுகள் நகரும் இதனால் தங்கம் விலை உயரும். இந்த சமயங்களில் அனைவரின் கவனமும் தங்கத்தின் மீது இருக்கும் போது Rich dad poor dad எழுத்தாளர் ராபர்ட் கியோசாகி மிக முக்கியமான ஒரு முதலீட்டு அறிவுரையை வழங்கியுள்ளார். இது தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் அவர் பதிவு செய்துள்ளார்.

அவருடைய பதிவில் என்னை பின்தொடர்பவர்கள் தயவுசெய்து வெள்ளியில் முதலீடு செய்யுங்கள் எனக் கூறியிருக்கிறார். இந்த காலகட்டத்தில் சிறந்த லாபம் தரக்கூடிய குறைந்த அபாயம் கொண்ட ஒரு முதலீடாக வெள்ளி தான் இருக்கிறது என அவர் தன்னுடைய எக்ஸ் பதிவில் சுட்டிக்காட்டி இருக்கிறார். இன்றைய தினத்தில் அனைவராலும் வெள்ளியை வாங்க முடியும் ஆனால் இன்னும் சில காலம் போனால் வாங்க முடியாது என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
குறிப்பாக ஜூலையில் வெள்ளி விலையில் பெரிய மாற்றம் நிகழ இருக்கிறது என அவர் குறிப்பிட்டுள்ளார். நாம் வாங்க கூடிய விலையில் இருக்கும் போதே வெள்ளியில் முதலீடு செய்து விடுங்கள். பின்னர் வருத்தப்படாதீர்கள் என அவர் கூறியுள்ளார். ஒரு விஷயத்தை நீங்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் "நீங்கள் வாங்கும்போதுதான் உங்களின் லாபம் தீர்மானிக்கப்படுகிறது விற்கும் போது அல்ல " என குறிப்பிட்டு இருக்கிறார்.
வெள்ளி விலை இனி உயரும் , குறைவதற்கான வாய்ப்பு மிக மிக குறைவு என கூறியுள்ளார். ராபர்ட் கியோசாகி நீண்ட காலமாகவே வெள்ளியில் முதலீடு செய்ய அறிவுறுத்தி வருகிறார். குறிப்பாக வெள்ளியை பார்களாக அல்லது நாணயம் ஆகிய வடிவில் வாங்கி வைக்க வேண்டும் என அறிவுரை வழங்கி வருகிறார்.
சர்வதேச அளவில் தற்போது தங்கத்தின் விலைக்கு நிகராக வெள்ளியின் விலை உயர்ந்து வருகிறது .வெள்ளியை ஆபரணமாக, பாத்திரங்களாக மட்டுமில்லாமல் தொழிற்சாலைகளில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. மின்சார வாகனங்கள், செயற்கைக்கோள்களில் பயன்படுத்தக்கூடிய உபகரணங்கள் உள்ளிட்டவற்றில் எல்லாம் வெள்ளி பிரதானமான பொருளாக பயன்படுத்தப்படுகிறது. இதன் காரணமாகவே தங்கத்துக்கு நிகராக வெள்ளியின் விலையும் உயர்ந்து வருகிறது.
சென்னையில் ஜனவரி 1ஆம் தேதி அன்று வெள்ளி ஒரு கிராமின் விலை 98 ரூபாய் என இருந்தது, அதுவே ஜூன் 28ஆம் தேதியான இன்று 119 ரூபாய் என உயர்ந்திருக்கிறது. அதாவது 6 மாதங்களில் வெள்ளி ஒரு கிராமின் விலை 21 ரூபாய் உயர்ந்துள்ளது.


Click it and Unblock the Notifications